நீங்கள் நம்பிக்கையை எங்கே வைக்கிறீர்கள்?

அநேகர் தேவன் மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கத் தயங்குகிறார்கள். ஆனால் நாசியில் சுவாசமுள்ள மனிதன் மேலும் உலகப் பொருட்கள் மேலும் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். கடைசியில் தான் தங்கள் முட்டாள்தனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாக நாம் தேவன் மீது நம் நம்பிக்கையை வைக்கவும், முழமையாக அவரை நம்பவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.