மாதிரி கிறிஸ்தவ குடும்பம்

ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி, ‘இப்போது நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருப்பதன் முக்கிய காரணம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தம்பதியரின் ஜெபம், தொடர் சந்திப்பும், ஆலோசனையுமே” என்று கூறினாள். அந்த விசுவாசத் தம்பதியர் பேராசிரியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களுடன் நேரம் செலவளித்தனர். அந்தப் பேராசிரியரின் வீட்டில் ஜெபக்கூட்டங்களையும், வேத ஆய்வுகளையும் நடத்தினர்.