தேவன் மனிதனாக உலகில் வந்ததன் நேக்கங்கள்

பிதாவாகிய தேவனை வெளிப்படுத்த:’அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படி யிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?” (யோவான் 14:9).

வாழ்க்கையில் முரண்பாடு

ஒரு பயிற்சி முகாமில் நான் கற்பிக்கும் கூட்டம் முடிவில் ஒரு மிஷனரி என்னிடம் வந்து, ‘என் பணித்தளத்தில் என் சக ஊழியர்களோடு சாதி பிரச்சனையால் மோதல்கள் வருகிறது” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். மிஷனரி பணியாளர்கள் மத்தியில் பிரச்சனைகளும் சச்சரவுகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அவருக்குச் சில ஆலோசனைகள் கூறி, ஒரு மூத்த தலைவரிடம் அனுப்பினேன். அவர் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவி செய்தார்.