ஆவியிலே நடத்தல்

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆவிக்கேற்றபடி நடப்பது அவசியம் என்று பல விசுவாசிகள் அறிவார்கள். ஆனால் வெகு சிலரே ஆவிக்கேற்றபடி நடப்பது எப்படி என்று அறிந்து அனு பவிக்கிறார்கள். பரிசுத்த பவுல், ‘ஆவிக் கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” என்ற கூற்றை நான்கு முறை ரோமர் 8:1-11 மற்றும் கலா 5:16-26ல் உபயோகித்து, ஆவிக்கும் மாம்சத்திற்கும் உள்ள விரோதத்தைக் குறித்துக் கூறுகிறார்.