மரியாளின் கீதம்

ஆதித் திருச்சபை லூக்கா 1:46 முதல் 55இல் உள்ள மரியாளின் கீதத்திற்கு இசை அமைத்து ஆராதனையில் பயன்படுத்தினர். இன்றும் பல பிரதான திருச்சபைகள் தங்கள் ஞாயிறு ஆராதனை வழிபாட்டில் மரியாளின் கீதத்தைப் பாடலாகப் பாடுகின்றனர். அதன் காரணம் தெரியுமா? அதன் முக்கியமான காரணம் என்னவென்றால் மரியாளின் கீதம், ஒருவர் பயத்தினாலும், கவலையினாலும் சூழ்ந்தபோதும் தேவனை ஆராதிக்கும் வழியைக் காண்பிக்கிறது.