உண்மைக்காக உயிர்த் தியாகம்

ஜான் ஹஸ் (1374-1415) பிரேகு (Prague) பல்கலைக்கழகத்தில் படித் துப் பின் பிரேகிலிருந்த பெத்லகேம் தேவாலயத்தில் போதகராகப் பணி யாற்றினார். அவருக்கு ஜெரோம் என்ற சிறந்த நண்பர் இருந்தார். ஜெரோம், இங்கிலாந்திலிருந்து ஜான் விக்லீப் (John Wycliffe) அவர்களின் கட்டுரைகளுடன்; திரும்பி வந்தார்.

கனவு காண்பவர்கள் இன்று தேவையா?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பிரதேசத்தை என்னுடைய நண்பனோடு சென்று பார்த்தேன். அந்த மலைகளில் கிறிஸ்தவர்களே அப்போது இல்லை. என்னுடைய நண்பன் என்னை அந்த மலைகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றார். ‘இந்த மலைகளில் தேவனை ஆராதிக் கும் மக்கள் கூட்டங்கள் எழும்பும் என்று தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்துள்ளார்” என்று ஒரு சில மலைகளைக் காண்பித்து என்னுடைய நண்பன் என்னிடம் கூறினார்.