மரியாளின் கீதம்
- Published in Tamil Devotions
By C Barnabas
ஆதித் திருச்சபை லூக்கா 1:46 முதல் 55இல் உள்ள மரியாளின் கீதத்திற்கு இசை அமைத்து ஆராதனையில் பயன்படுத்தினர். இன்றும் பல பிரதான திருச்சபைகள் தங்கள் ஞாயிறு ஆராதனை வழிபாட்டில் மரியாளின் கீதத்தைப் பாடலாகப் பாடுகின்றனர். அதன் காரணம் தெரியுமா? அதன் முக்கியமான காரணம் என்னவென்றால் மரியாளின் கீதம், ஒருவர் பயத்தினாலும், கவலையினாலும் சூழ்ந்தபோதும் தேவனை ஆராதிக்கும் வழியைக் காண்பிக்கிறது.
மரியாள் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே ஒரு குமாரனைப் பெறப் போவதாகக் கேள்விப் பட்டபோது கலக்கமடைந்தாள். அவள் தனது இருதயத்தில் கவலையோடும், பயத்தோடும் எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்றிருக்கக் கூடும். அவள் எலிசபெத்தின் வீட்டை அடைந்த போது மற்றும் ஒரு அற்புதத்தைக் கண்டாள். எலிசபெத் தனது முதிர் வயதில் கர்ப்பந் தரித்த அற்புதத்தையும், மரியாள் ஆசீர்வதிக் கப்பட்ட ஆண்டவரின் தாயார் என்றும் தீர்க்கதரிசனமாகக் கூறியதையும் மரியாள் கேட்டாள். அந்தத் தீர்க்கதரிசனத்தை மரியாள் கேட்டபோது அவள் தேவனுடைய மகத்துவத் தைப் புரிந்தவளாக, தன் கவலைகளை மறந்து, தேவனை மகிழ்ச்சியுடன் பின்வரு மாறு துதித்தாள். கடினமான சூழ்நிலையில் மரியாள் மகிமையான தேவனுடைய மகத்து வத்தைப் புகழ்ந்து மகிழ்ச்சியோடும் ஆனந்தத் தோடும் பாடினாள், ஏனென்றால்
1. அவர் அவளுடைய இரட்சகர் (வச 47)
2. வல்லமையுள்ளவர், மகிமையான காரியங் களைச் செய்தார் (வச 49)
3. அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது(வச 49)
4. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந் தவர்கள் மேல் உள்ளது (வச 50)
5. இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர் களைச் சிதறடித்து, பலவான்களை ஆசனத் திலிருந்து தள்ளி, தாழ்மையுள்ளவர்களை உயர்த்தினார் (வச 51)
6. பசியுள்ளவர்களை நன்மையால் நிரப்புகிறார் (வச 53)
7. அவருடைய ஜனத்திற்கு நன்மைகள் செய் கிறார் (வச 53-55) நாம் பயங்களின் மத்தியில் மற்றும் கவலை களின் மத்தியில் கடந்து செல்லும்போது தேவனின் மகத்துவத்தை நினைத்து அவரை ஆராதிக்க மரியாளின் கீதமே ஒரு சரியான பாமாலையாகும். நம்முடைய பயங்கள் மற்றும் கவலைகளின் மத்தியில் அவருடைய நன்மைகளை அனுப விக்கும் வண்ணம் இந்த ஆராதனை பாமாலையை நாம் சபையிலோ தனிப்பட்ட ஜெபத்திலோ துதிக்க உபயோகிப்போமா?
(Dr. C Barnabas, Translated from True Discipleship Nov-Dec 2000)