நேர்மை
- Published in Tamil Devotions
சென்ற ஆண்டில் நான் கலந்துகொண்ட இரு மாநாடுகளில் நேர்மையைக் குறித்த இரண்டு செய்திகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில் ஒரு மாநாட்டில் பேசிய செய்தியாளர் ஏன் தலைவர்கள் தங்கள் நேர்மையை இழக்கி றார்கள் என்பதைக் கிறிஸ்தவத் தலைவர் களிடையே நடத்தப்பெற்ற ஆய்வை மேற் கோள் காட்டி விளக்கினார்;.
~ஏன் இதைச் செய்தீர்கள்?| என்று தங்கள் நேர்மையை இழந்து கொடிய பாவங்களில் விழுந்த பல நூறு போதகர்களிடமும், கிறிஸ்தவத் தலைவர்களிடமும் கேள்வி கேட் கப்பட்டபோது அவர்களுடைய வாழ்வில் நன்னடத்தையில் தோல்வியைச் சந்தித்த தற்கான மூன்று முக்கிய காரணங்கள் வெளிப்பட்டன.
நான் தேவனோடு செலவிடும் நேரத்தை நிறுத்தி விட்டேன்
நான் யாருக்கும் கணக்குள்ளவனாக என்னுடைய வாழ்வில் இல்லை. மேலும் என்னைத் திருத்த யாரும் இல்லை.
நான் இப்படிப்பட்ட பாவத்தை என் வாழ்வில் செய்வேன் என்று நினைக் கவே இல்லை.
என்பனவே அவை.
அந்தப் போதகர்களும், கிறிஸ்தவத் தலை வர்களும் மிகவும் கடினமாக உழைத்துத்; தங்கள் ஊழியத்தின் நிலையை உயர்த்தி இருந்தனர். அவர்கள்; வசதிக்கும், இன்பத் திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தங்கள் ஊழியத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குறுக்கு வழிகளை உபயோகித்தனர். வாழ்க் கையில் நேர்மையை வளர்ப்பதற்கு முக்கி யத்துவம் கொடுக்க மறந்தனர். ஆகவே பாவத்தில் விழுந்து தங்கள் சாட்சியையும், ஊழியத்தையும் இழந்தனர். நேர்மை என் றால் என்ன? ஐவெநபசவைல என்ற ஆங்கிலச் சொல் ~முழு எண்| (ஐவெநபநச) என்ற வார்த் தையிலிருந்து தோன்றினது. ஆகவே நேர்மை என்பது ~முழுமை| அல்லது ~பரிபூரணம்| அல்லது ~சிதைவு வராத நிலை|யைக் குறிக்கிறது. உங்கள் வாழ்வில் நேர்மையிருந்தால் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் வேறுபடாமல் இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் அந்தரங்க வாழ்க்கையும் வெளியரங்க வாழ்க்கையும் வேறுபடாமல் இருக்கும். எங்கே இருந்தாலும் தேவன், நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த விருப்பத்தின்படி அப்படி இருப்பீர்கள்;.
அபெ சி. வான் டர் பய் (யுடிந ஊ. ஏயn னுநச Pரல) என்ற மிஷனரி தலைவர், கிறிஸ்தவர் களிடையே உள்ள நேர்மையற்ற தன்மை யைக் குறித்து பின்வருமாறு கூறுகிறார். ~எனக்கு ஒரு ஆழமான அக்கறை, கவலை உள்ளது. அந்த ஆழமான கவலையால் என் இதயம் புண்பட்டுள்ளது. நான் மிஷனரி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பல சபை களுக்கும் செல்லும் போது அங்குள்ள கிறிஸ்தவர்களின் இழிநிலையைப் பார்த்து வேதனையடைகிறேன். கிறிஸ்துவற்ற வாழ்க் கை வாழுபவர்களைப் பார்த்தும், அவர்க ளைக் குறித்துக் கேள்விப்பட்டும்; நானும் என் மனைவியும் சமீப காலமாக மிக்க வேதனை அடைந்துள்ளோம்|. வீட்டிலும், அலுவலகத்திலும், சபையிலும் நற்சாட்சியைக் காக்கும் விசுவாசிகள் மறைந்து போன பொருளாக மாறி விட்டனர். இதற்கு முக்கிய காரணம் விசுவாசிகள் தங்கள் நேர்மையைப் பழுதுபடாமல் பாதுகாக்காத துதான். வேதாகமத்திலுள்ள தலைவர்களை ஆராய்ந்து பார்க்கும்போது அவர்கள் பின் வரும் முறைகளைப் பயன்படுத்தித் தங்கள் நேர்மையைக் காத்தனர் என்று அறிய முடிகின்றது.
சுயக்கட்டுப்பாடும் சரீரத்தை ஒழுக்கத்தோடு கையாளுவதன் மூலம்: ~பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கி றோம். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணு கிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாத படிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப் படுத்துகிறேன்|. 1கொரிந்தியர் 9:25,27
தீமையை விட்டு விலகுவதன் மூலம்: ~உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்|. யோபு 1:8
பரிசுத்தமும், நீதியும், பிழையற்றவர்களாக நடப்பதன் மூலம்:~விசுவாசிகளாகிய உங்க ளுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்த மும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோ மென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி|. 1தெச 2:10
எல்லா செயல் தொடர்புகளிலும் உண்மை யாக இருப்பதன் மூலம்: ~இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக் கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத் திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ் செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனை யும் வஞ்சிக்கவில்லை|. 2கொரிந்தியர் 7:1,2
தேவனுக்கு முன்பாக நல்ல மனசாட்சி யைக் காத்துக் கொள்வதன் மூலம்: ~பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து: சகோதரரே, இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச் சாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன் என்று சொன்னான்|. அப் 23:1
மேன்மையான காரியங்களைச் செய்வதன் மூலம் : ~மேலும் நீங்கள் ஒரு பொல் லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும் பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும் பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்|. 2கொரி; 13:7
தேவனுக்கும் மனிதனுக்கும் குற்றமற்ற வாழ்க்கை வாழ்வதன் மூலம் :~சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைக ளின் வாயைக் கட்டிப் போட்டார்; அதே னென்றால் அவருக்கு முன்பாக நான் குற்ற மற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்|. தானியேல் 6:22
(Translated from True Discipleship January 1998)