தாயாரின் ஜெபத்தின் வல்லமை

By C Barnabas

புனிதர் அகஸ்டினின் தாயார் மோனிகா ஒரு செல்வச் செழிப்பான கிறிஸ்தவ குடும்பத்தில் கி.பி. 331ல் பிறந்தார். கிறிஸ்தவச் சூழலில் வளர்க்கப்பட்டார். வயதான ஒரு கிறிஸ்தவ வேலைக்காரியின் சீரிய வாழ்க்கையும், போதனையும் தேவனின் மேல் இருந்த மோனிகாவின் விசுவாசத்தை உறுதிப்படுத் தியது. அவர் தமது இளம் வயதில் பேட்ரிசியஸ் என்னும் கிறிஸ்தவரல்லாதவரைத் திருமணம் செய்தார். அவர் பாவத்தில் விழுந்து கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளினார். ஆனால் மோனிகா அவருடைய மனந்திரும்புதலுக்காகப் பல ஆண்டு கள் ஜெபித்தார். மோனிக்காவின் இருதய வாஞ்சை எல்லா உறவினர்களும் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே. வேதாகமத்தில் பேதுரு எழுதிய முதலாம் நிருபத்தில் மூன்றாம் அதிகாரத் தின் போதனையின்படி, தன் கணவரை கிறிஸ்துவிற்காக ஆதாயப்படுத்த, கிறிஸ்து வைத் தன் நடத்தையில் காண்பித்தார். விரைவில் அவளுடைய மாமி, மோனிகாவின் நடத்தை, சாந்தம் மற்றும் ஜெபத்தி னால் தொடப்பட்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். ஆனால் அநேக ஆண்டுகள் ஜெபித்த பின்தான் பேட்ரிசியஸ் மனம் திரும்பினார்.
தனது குடும்பத்தினருக்காக மட்டுமின்றி கிறிஸ்தவரல்லாத உறவினருக்காகவும் ஜெபித்தார். பிள்ளைகளை தேவ னுக்குப் பயப்படுகிற பயத்தில் வளர்த்தார். தான் அதிகமாக நேசித்த அகஸ்டினுக்காக ஊக்கமாக ஜெபித்தார். அவருக்கு சிறந்த கல்வி வழங்கப் பிரயாசப்பட்டார். அகஸ்டின் இத்தாலி சென்ற போது உலகத்தின் தத்துவங்களினாலும், மாம்சத்தின் கவர்ச்சி களாலும் ஈர்க்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். மோனிகா தனது மகன் பாவத்தில் வாழ்வதைக் குறித்துக் கேள்விப்பட்ட போது அவருடைய மனந்திரும்புதலுக்காக ஊக்கமாக மன்றாடினார். அந்த சமயத்தில் அவளுடைய கணவர் மரித்ததால், இத்தாலியில் அகஸ்டினோடு சென்று வாழ்ந்தார். அவர்கள் மிலானில் வாழ்ந்த போது, அம்புரோஸ் என்ற போதகருடைய சபையில் பங்குபெற்றனர். அகஸ்டின், போதகர் அம்புரோஸின் செய்திகளை விரும்பி கேட்டார். கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பி னார். ஆனால் உலகத்தின் கவர்ச்சிகளுக்கும் கிறிஸ்துவிற்கும் இடையே தத்தளித்தார். பாவத்தை மேற்கொள்ள பலம் இல்லாமல் தவித்தார். ஒரு ஆழ்ந்த போராட்டத்தைக் கடந்து சென்றார். ஆகவே மிலானில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று தனது பயங்கரமான பாவ வாழ்க்கைக்காக அழத் தொடங்கினார். இந்தப் பெரிய போராட்டத்தைக் கடந்து சென்ற போது ஒரு சிறு பிள்ளை ~எடுத்து வாசி! எடுத்து வாசி! எடுத்து வாசி!| என்று கூறுவதைக் கேட்டார். ரோமரின் புத்தகத் தை அச்சமயம் வைத்திருந்தார். ஆகவே ரோமரைத் திறந்து பதிமூன்றாம் அதிகா ரத்தை வாசிக்கத் தொடங்கினார். ஆண்டவர் அவருடைய பாவத்தைக் குறித்துக் கண் டித்து உணர்த்தினார். அன்று தனது நம்பிக் கையை ஆண்டவர் மீது வைத்தார். அவருடைய வாழ்க்கை முழுவதுமாக மாறியது. ஆண்டவர் செய்த அற்புதமான கிரியை யால் ஒரு புது மனிதனாக மாறினார்.
மோனிகாவின் இடைவிடாத மன்றாட்டு அகஸ்டினின் வாழ்க்கையை மாற்றியது. 56ஆவது வயதில் கி.பி. 387ல் மோனிகா மரணமடைந்தார். அப்போது அகஸ்டின் வயது 33. தனது தாயாரின் ஜெப வாழ்க்கையை எப்போதும் நினைத்த வண்ணம் வாழ்ந்தார். அவருடைய ஜெப வாழ்க்கையைக் குறித்து குற்ற ஒப்புதல் (உழகெநளளழைளெ) என்ற நூலில் அகஸ்டின் ~இப்போது என் பார்வையிலிருந்து சென்று, நான் உமது (கடவுளின்) பார்வையில் வாழும்படியாக எனக்காகப் பல ஆண்டுகளாக அழுதவர் அவர்| என்று எழுதினார்.
மோனிகா தனது மரணத்திற்கு முன்னதாக தனது மகன் அகஸ்டினும், கிறிஸ்தவரல் லாத கணவர் பேட்ரிக்ஸின் மனந்திரும்பு தலையும் கண்டார். மோனிகாவின் ஜெபம் புனித அகஸ்டினை ஆண்டவரிடம் நடத்தி, அவர் மூலமாக நூற்றாண்டுகளாகக் கத்தோலிக்கர் மத்தியிலும், சீர்திருத்த வாதிகள் மத்தியிலும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கையும், எழுத்துகளும் மார்ட்டின் லூத்தர் மற்றும் கால்வின் போன்ற பெரிய தேவ மனிதர்களையும் பாதித்து சபையைச் சீர்திருத்தி, சுத்திகரித்து, பலப்படுத்தியது.
உலக வரலாற்றில் பாதிப்பை ஏற்படுத்த தங்கள் பிள்ளைகளின் மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல் அழுது ஜெபிக்கும் தாய்மாரை இன்று நாம் காண முடிகிறதா? ~கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்| என்று அப்போஸ்தலர் 16:31ல் கொடுக்கப்பட்டிருக்கிற வாக்குத்தத் தத்தை நம் சொந்த பந்தங்களின் இரட்சிப்புக்கு உரிமையாக்குகிறோமா?

(Translated from True Discipleship Jan-Feb 2001)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment