நீங்கள் ஒரு அவிசுவாசியான விசுவாசியா?

By C Barnabas

மேரி தேவனுடைய பிள்ளை. அவர் தன் இருபதாவது வயதை எட்டி, வேலை செய்ய ஆரம்பித்தபோது எதிர்காலத்தைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தாள். ஒரு சாயங்காலம் மிகவும் கலக்கத்தோடு எபேசியர் நிருபத்தை கிறிஸ்தவ வாழ்க்கை வேதாகமத்தில் (Christian Life Bible) வாசித்தாள். ‘நாம் வேண்டிக்கொள்ளு கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு” என்று எபேசியர் 3:20ல் அவள் வாசித்தபோது தேவன் அவளோடு பேசினார். நமது தேவன் ஒரு பெரிய தேவன், ஆகவே நமது எண்ணங் கள் தேவனைவிடப் பெரியதாக இருக்க முடியாது என்பதை அறிந்துகொண்டு உயரிய எண்ணங்களை விசுவாசத்தோடு எண்ண வேண்டும். நாம் வேதாகமத்தைப் படித்து தேவனின் மகத்துவமான கிரியைகளைக் குறித்து வாசிக்கும்போது, அவரது மகத்துவத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு, அவரால் எல்லாவற்றையும் செய்யக் கூடும் என்பதை விசுவாசிப்பதாகக் கூறுகிறோம். ஆனால், ஒரு ஆவிக்குரிய நெருக்கடி வரும்போது சில விசுவாசிகள் (குறுகிய எண்ணங்களைச் சிந்திப்பதன் மூலம்) அவரின் தகுதியையும், வல்லமை யையும் குறைத்து, தேவன் சர்வ வல்ல வராக இல்லாததுபோல நடந்துகொள்ளுகி றோம்.

அவருக்கு வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உண்டு (மத் 28:18). அவர் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர் (ஆதி 1:1), மற்றும் சர்வத் தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபி 1:3) இருப்பவர் என்பதை மறந்துவிடுகிறோம். அவருடைய சர்வ அதிகாரமும், வல்லமை யும் குறைவதில்லை. ஆகவே உயரிய எண்ணங்களை எண்ணுங்கள். ஏனென்றால் நீங்கள் பெரிய காரியங்களைச் செய்யும், மாறாத (மல் 3:6) பெரியவரான தேவனை சேவிக்கிறீர்கள்.

1. உன் தேவன் எவ்வளவு பெரியவர்? அவர் தனிப்பட்ட பிரச்சனைகளை விட பெரியவரா? அவர் பெரியவர் என்று உணர்ந்தால் ஏன் கவலைப்படுகிறாய்? (பிலி 1:12-14).
2. உன்னுடைய எல்லா எதிரிகளையும் விட பெரியவரா? ஆம் என்றால் ஏன் பயத்தில் வாழ்கிறாய்?
3. உன் வாழ்வில் உள்ள தடைகளை விட பெரியவரா? பின் ஏன் முயற்சியைக் கைவிட வேண்டும்? (1யோவான் 4:4).

அவிசுவாசியான விசுவாசியாக இல்லாமல், தேவன் நம் சிந்தையை பயத்திலிருந்து மிகுதியான விசுவாசத்திற்கு நேராகத் திருப்ப வேண்டுமென்று ஜெபம் செய் வோம். நம் தேவன் பெரியவர் என்பதை மறந்துவிடாமல், தேவ நாமம் மகிமைப்பட உயரிய எண்ணங்களைச் சிந்திக்க ஆண்டவர் கிருபை பாராட்டுவாராக. (1கொரி 1:3, எரேமியா 9:23,24).

(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct. 1998)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment