கிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம்

By C Barnabas

வேதாகமம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து மிகத் தெளி வான போதனையைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் மட்டுமே 318 பகுதிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள 25 வசனங்களில் ஒரு வசனம் இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறுகிறது. இது வேதாகமம் இரண்டாம் வருகைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறது. இரண்டாம் வருகையைப்பற்றிய ஆய்வு நம்மை அந்த மகத்தான நிகழ்ச்சிக்கு ஆயத்தப் பட உதவி செய்யும்.
இரண்டாம் வருகை என்பது ‘இரண்டாம் அட்வென்ட்” என்று அழைக்கப்படு கிறது. ‘அட்வென்ட்” (advent) என்கிற வார்த்தைக்கு ‘வருகை” என்று அர்த்தமாம். அந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது. ஒரு பிரிவினரால் ‘அட்வென்டிஸ்ட்” (adventist) என்ற வார்த்தை; உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு ‘இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கும் ஒருவர்” என்று பொருள்.
விக்டோரியா மகாராணி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த செய்தியைக் கேட்டபின், ‘எனது வாழ்நாளின்போது அவர் வரவேண்டும் என விரும்புகிறேன். அப்போதுதான் எனது கிரீடத்தை அவரின் காலடியில் நான் வைக்க முடியும்.” விக்டோரியா மகாராணி, கிறிஸ்து அவரின் வாழ் நாளின்போது வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இயேசு கிறிஸ்துவை உலகத்தின் எல்லா வல்லமைக்கும் மேலான ஆண்டவராக அறிக்கையிட விரும்பினார்.
முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்நாளில் கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்று எதிர்பார்த் தனர். ஆகவே அவர்கள் ஒருவரை ஒருவர் ‘மாரநாதா” (Maranatha) என்ற சொல்லைக் கூறி வாழ்த்தினர். ‘ஆண்டவரே வாரும்” என்பதே இதன் அர்த்தமாம். வேதாகமம் ‘கர்த்தராகிய இயேசுவே வாரும்” என்ற ஜெபத்துடன் முடிவுபெறுகிறது. (வெளி 22:20). ‘உமது இராஜ்யம் வருக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். நாம் கிறிஸ்துவின் வருகையை உண்மையாக எதிர்நோக்கு கிறோமா? அவரை மகிழ்ச்சியோடு சந்திக்க ஆயத்தமாக உள்ளோமா?
வேதாகமம் பின்வரும் வழிகளில் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படும்படி நமக்கு ஆலோசனை கூறுகிறது.



1. விழிப்பாயும் உண்மையாயும் இரு:
‘அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலை யிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினை யாதவேளையில் அவன் வந்து, உங்க ளைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடி யாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லா ருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங் கள் என்றார்” (மாற்கு 13:35-37).


2. விழிப்பாயும் ஆயத்தமாயும் இரு:
‘உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதி ருக்கிறபடியினால் விழித்திருங்கள். திரு டன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிட வொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமா ரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத் 24:42-44).


3. பரிசுத்த நடக்கையுடனும், தேவ பக்தியுடனும் ஆயத்தமாயிரு:
‘இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதா யிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவ னுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப் போம்” (2பேதுரு 3:11,12).


4. கறையற்றவர்களாகவும், பிழையற்றவர்களாகவும் காணப்பட ஜாக்கிரதையாயிரு:
‘அவருடைய வாக்குத்தத்தத்தின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகு மென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்க ளும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமா தானத்தோடே அவர் சந்நிதியில் காணப் படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்” (2பேதுரு 3:13,14).


5. விசுவாசத்தில் உறுதியாயிரு:
‘ஆத லால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடி யால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத் திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,” (2பேதுரு 3:17).


6. இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளரு:
‘உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்ச கருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை யிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2பேதுரு 3:17,18).


7. ஆனந்த பாக்கியத்துக்கும், அவருடைய பிரசன்னமாகுதலுக்கும் எதிர் பார்த்துக்கொண்டிரு:
‘எல்லா மனுஷ ருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லௌகிகஇச்சை களையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக் கிறது” (தீத்து 2:11-13).


8. விழித்து தெளிந்தவனாயிரு:
‘இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தரு டைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்க தாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர் களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச் சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” (1தெச 5:2,4-6).


9.அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல சுத்தமுள்ளவனாயிரு:
‘பிரியமா னவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்வி தமாயிருப்போமென்று இன்னும் வெளிப் படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும ;போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1யோவான் 3:2,3).


10. விழித்திருந்து ஜெபம்பண்ணு:
‘அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். அக்காலத்தை நீங்கள் அறியாதபடி யால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்தி ருந்து ஜெபம்பண்ணுங்கள்” (மாற்கு 13:32,33).

(Dr. C Barnabas, Translated from True Discipleship Sep 1997)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment