சுவரை அடைக்க, திறப்பிலே நிற்க?
- Published in Tamil Devotions
ஒரு முறை நான் இந்தியாவிலே பணியாற்றிய ஒரு மிஷனரியின் கனவைக் குறித்து வாசித்தேன். ஒரு அகலமான நெடுஞ் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் நடுவிலே அந்த மிஷனரி நின்று கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள். சற்றுத் தொலைவில் அந்த சாலை அவர்களுக்கு முன்னதாக திடீரென முடிந்தது. சற்று தொலைவில் சென்று பார்த்த போது அந்த மக்கள் விரைவாக அந்த சாலையில் சென்று ஒருவர் பின் ஒருவராக ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கில், விழுந்து கொண்டி ருந்தனர். அவர்கள் அருகில் சென்ற போது, கீழே விழுபவர்கள், “என்னை எச்சரிக்க யாரும் இல்லையே” என்று கூறியவாறு விழுந்து மாய்ந்தனர்.
அழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தவர்களை எச்சரிக்க அங்கு யாருமில்லை. அவள் அந்த மக்களை நெருங்கிச் சென்று பார்த்தபோது. அவர் கள் அனைவரும் குருடர்கள் என்று ஆச்சரியத்தோடு கண்டறிந்தாள். அநேக குருடர்கள் இவ்வாறாக விரைவாக சாலை யில் சென்று ஆழமான பள்ளத்தாக்கில் அழிவை நோக்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்க ஒருவரும் இல்லை என்று கண்டு திடுக்கிட்டாள். உடனே அவள் படுக்கையை விட்டு எழுந்தாள். அவள் கண்ட கனவு உண்மை என்பதை அறிந்து பயந்தாள். கோடிக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் அன்பையும் அவர் அளிக்கும் இரட்சிப்பை யும் அறியாமல் சாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். உண்மையை அறியாமல் கண்கள் குருடாயிருக்கும் மக்களுக் காக அவள் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினாள். தனது முழு வாழ்க்கையையே இந்தியாவிலுள்ள மக்களுக்கு தேவனின் அன்பை அறிவிப்பதற்காக அர்ப்பணித்தாள். தமிழ்நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்து அங்கிருந்த மக்களை மரணத் திலிருந்து வெளிச்சத்திற்கு வழி நடத்தும் பணியைச் செய்தாள். அவள் இந்தியா விற்கு வந்த பின் ஒரு முறை கூட தன் தாய் நாட்டிற்குத் திரும்பவே இல்லை. ஆயிரக்கணக்கான இளம் பெண்களை விபச்சாரத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டு விடுவித்தாள். அவர்களைக் கிறிஸ்துவிடம் வழி நடத்தி திறப்பிலே நின்றாள். அநேக ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் மரணத் திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்கப்பட்டனர். இவர்கள் தான் தென் இந்தியாவிற்கு மிஷனரியாக வந்த ஏமி கார்மைக்கேல் அம்மையார்.
மக்கள் பாவம் செய்து பாவத்திற்காக அழிக்கப்பட போகும் போது மோசே திறப் பிலே நின்றதாக வேதாகமத்தில் வாசிக் கிறோம். இந்த சம்பவத்தைக் குறித்து சங்கீதக்காரன் ‘ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவரு டைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றார்” (சங் 106:23) என்று கூறியள்ளார்.
மக்கள் பாவம் செய்து அழிக்கப்படப் போகும்போது ஆறு முறை மோசே திறப்பிலே அவர்களுக்காக நின்றார் என்று வேதாகமம் கூறுகிறது. உண்மையாக மோசே கர்த்தருக்கு முன்பாக முகம்குப்புற விழுந்து மன்றாடினார் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது.
1. வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை வணங்கித் தேவனை விட்டு வழி விலகிச் சென்ற போது: (உபா 9:18).
2. கர்த்தருக்கு முன்பாக காதேஸ் பர்னேயாவில் கலகம் பண்ணிய போது: (உபா 9:25).
3. கோராகும் அவனைப் பின் சென்றவர்களும் மோசேக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது: (எண் 16:3,4).
4. கோராகு மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக சபையைத் திரட்டியபோது: (எண் 16:20-22).
5. தேவன் கலகம்பண்ணிய மக்களை ஒரு நிமிடத்தில் அதமாக்க நினைத்தபோது: (எண் 16:45).
6. தண்ணீர் இல்லாததால் வனாந்திரத்தில் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தபோது: (எண் 20:2,6).
அனைத்து சம்பவங்களிலும் தேவன் மக் களை அழிக்க முற்பட்டபோது மோசே மக்களுக்கும் தேவனுக்கும் நடுவில் நின்று தேவன் அவர்களை அழிக்காமல் காப்பாற் றினார். இந்தியாவில் தேவனின் அன்பை அறியாமல் கோடி கோடியாக மக்கள் அழிந்துகொண்டிருக்கின்றனர். திறப்பின் வாசலில் நின்று அவர்களை அழிவிலி ருந்து காப்பாற்றுவோம். திறப்பிலே நிற்க வும் ஜெபத்தோடு அவர்களைக் கிறிஸ்து வுக்குள் நடத்தும் பணிக்காக நம்மை அர்ப்பணிப்பாமா? ‘நான் தேசத்தை அழிக் காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசே 22:30).
(Translated from True Discipleship July-August 2000)