சரியான காரியத்திற்காக வாழ்க்கையை முதலீடு செய்தல்
- Published in Tamil Devotions
By C Barnabas
ஒரு நாள் கணக்குப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையில் நுழைந்து கரும்பலகையில் சில எண்களை இரண்டு நெடுவரிசையாக எழுதினார். பின்பு திரும்பி மாணவர்களைப் பார்த்து, ‘இந்த இரண்டு நெடுவரிசையில் உள்ள எண்களிடையே ஏதாவது உறவுமுறையை கண்டுபிடிக்க முடிகிறதா?” என்று வினவினார். அந்த மாணவர்கள் எண்களைப் பார்த்தனர். ஆனால் அந்த எண்களிடையே எந்த உறவையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு மாணவன் எழுந்து ‘முதல் நெடுவரிசை வருடங்களின் எண்ணிக்கையையும், இரண்டாம் நெடுவரிசை நாட்களின் எண்ணிக்கையையும் குறிக்கிறது” என்று கூறினான்.
அந்த எண்களிடையே இருந்த உறவை மாணவன் கண்டுபிடித்ததால் மகிழ்ந்த பேராசிரியர், ‘இந்த நெடுவரிசைகள் உலகில் வாழும் மனிதனின் வாழ்க்கையின் குறுகிய தன்மையைக் காட்டுகிறது. ஆகவே அவன் தன் வாழ்க்கையை தேவனுடைய மகிமைக்காக கவனமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
அவர் கரும்பலகையில் எழுதிய இரு நெடுவரிசைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பேராசிரியர், கரும்பலகையில் எழுதியிருந்த எண்களைப் பார்த்து, ‘ஒரு மனிதன் இந்த உலகில் 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் 36,500 நாட்கள் வாழ்வான். இந்த எண்ணிக்கை (36,500), நாம் நடைமுறையில் பயன்படுத்தும் மில்லியன் மற்றும் டிரில்லியன் போன்ற எண்களை ஒப்பிடும்போது மிகவும் சிறிய எண் தான். நான் இன்னும் 10 வருடங்கள் வாழ்ந்தால், இன்னும் 3,650 நாட்களே இந்த உலகில் வாழ்வேன்.”
முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவனைப் பார்த்து, ‘உன்னுடைய வயது என்ன?” எனறு கேட்டார். அந்த மாணவன் எழுந்து, ‘எனக்கு வயது 20″ என்று பதிலளித்தான். ‘இந்த மாணவனுக்கு வயது இப்போது 20. அவன் 70 வயதில் மரிப்பானேயானால், இந்த உலகில் அவன் 18,250 நாட்கள் வாழ்வான். இந்த புள்ளி விவரம் வாழ்க்கையின் குறுகிய தன்மையைக் காட்டுகிறது” என்று பேராசிரியர் கூறினார். நான் இந்த குறுகிய வாழ்க்கையை கிறிஸ்துவிற்காகவும், அவருடைய பணிக்காகவும் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று பார்ப்போம்.
ஊழியத்திற்காக வாழ்க்கையை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்: ‘ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” (அப் 20:24).
வாழ்க்கையை கிறிஸ்துவிற்காக இழக்க வேண்டும்: ‘தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.” (மத் 10:37-39).
இயேசுகிறிஸ்துவை முதலாவதாக வைக்க வேண்டும்: ‘துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.” (2கொரி 4:9-12).
தேவனுடைய ராஜ்யத்தை வாழ்க்கையில் முதலாவதாக வைக்க வேண்டும்: ‘ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானி கள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவை கள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத் 6:25-33). பாவத்தில் வாழும் மக்களுக்காக உயிரை பணயம் வைக்க வேண்டும்: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரிய மானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.” (அப் 15:25,26).
தீமையை வாழ்க்கையிலிருந்து நீக்க வேண்டும்: ‘ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியா மையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.” (கொலோ 3:3-6).
வாழ்க்கையில் வரும் பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: ‘அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:9,10).
மனிதர்களுக்கு அல்ல தேவனுக்குப் பயப்பட வேண்டும்: ‘என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலை செய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக் குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 12:4,5).
வாழ்க்கையின் நன்மைக்காக தேவனைத் துதிக்க வேண்டும்: ‘ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.” (சங் 63:3,4).
தேவனுடைய சித்தத்திற்காக வாழ வேண்டும்: ‘இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத் தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.” (1பேதுரு 4:1,2).
(Dr. C Barnabas, Translated from True Discipleship May-June 2005)
100 | 36,500 |
50 | 18,250 |
10 | 3,650 |