மிஷனரி பணிக்குக் கொடுக்க ஆண்டவரை நம்புதல்

By C Barnabas

ஒரு இளம் மிஷனரி போதகர், மிஷனரி மாநாட்டின் கடைசி நாளில் பிரசங்க மேடைக்கு அருகில் அமர்ந்து அந்த வருடம் நடந்த ஆசீர்வாதமான மிஷனரி மாநாட்டிற்காக ஆண்டவருக்கு நன்றி கூறினார். அங்குள்ள ஊழியர் விசுவாச வாக்குறுதி அட்டைகளை சபை மக்க ளுக்கு விநியோகித்தார். அவர் ஆச்சரியப்படும் விதமாக ஒருவர் போதகரிடம் வந்து ஒரு விசுவாச வாக்குறுதி அட்டையைக் கொடுத்தார். அந்த போதகர் ஒரு முறை கூட அவர் வாழ்வில் போதகர்கள் மிஷனரி பணிக்காக வாக்குறுதி எடுத்து விசுவாச அட்டையை நிரப்பி மிஷனரி பணியைத் தாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த விசுவாச அட்டை சபை யாருக்கு மட்டும்தான் என்று நினைத் தார். அவர் மிஷனரி பணிக்குப் பணம் கொடுத்துப் பங்குபெறலாம் என்று நினைக்கவேயில்லை. அவர் மனதில் வந்த கேள்வி, ‘நான் எவ்வாறு கொடுக்க வாக்குறுதி கொடுக்க முடியும்? ஒரு வாரத்திற்கு என் சம்பளம் வெறும் 25 டாலர்கள் மட்டும்தான்”. தனது குடும்பத்தை அந்த சிறிய சம்பளத்தில் அவர் தாங்க வேண்டும். மிஷனரி பணிக்காக அவர் எவ்வாறு ஒரு தொகை யைக் கொடுக்க வாக்களிக்க முடியும்? இந்த சிந்தைகள் அவர் மனதில் ஓடும் போது, ஆண்டவர் அவரை மிஷனரி பணிக்காக ஒரு தொகையைக் கொடுக் கச் சொல்லுவதை உணர்ந்தார். ஆகவே தன் கண்களை மூடி தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார். சபையார் அந்த விசுவாச வாக்குறுதி அட்டையை நிரப்பும்போது ‘ஆண்டவரே நான் இந்தக் காணிக்கையில் பங்கேற்க முடியாது. இந்த சபை எனக்கு ஒரு வாரத்திற்கு 25 டாலர்கள் தான் தருகிறது. எனக்கு ஒரு மனைவியும், குடும்பமும் உண்டு. விலைவாசி உயர்ந்துகொண்டே போகி றது. என் சட்டை பையில் ஒன்று மில்லை. ஆகவே நான் இந்தக் காணிக் கையில் பங்கேற்க முடியாது” என்று ஜெபித்தார்.

‘நான் உனக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க விரும்புகிறேன். நான் உன்னி டத்தில் உள்ளதைக் கொடுக்கும்படி கேட்கவில்லை. நான் உனக்கு மிஷனரி பணிக்குக் காணிக்கை கொடுக்கக் கூடுதல் பணத்தைத் தருவேன் என்று நம்புவாயா?” என்று ஆண்டவர் மெல்ல பேசுவதைக் கேட்டார். அந்தப் போதகர் ஆண்டவரிடம், ‘எவ்வளவு தொகையை மிஷனரிப் பணியைத் தாங்க நீர் எனக்குக் கொடுப்பீர் என்று நம்ப வேண்டும்?” என்று கேட்டார். ஆண்டவர் அவரை ஒவ்வொரு வருடமும் 50 டாலர் மிஷனரிப் பணிக்குக் கொடுப்பதாக வாக்களிக்கக் கூறினார். அந்தப் போதகரின் வாரச் சம்பளம் 25 டாலராக இருந்ததால் மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்தத் தொகையை எங்கே தேடிக் கண்டுபிடிப்பார்? ஆனால் ஆண்ட வர் கொடுப்பார் என்று அவரை நம்பி னார். 50 டாலர் மிஷனரிப் பணிக்குக் கொடுக்க ஆண்டவர் வழி நடத்து கிறார் என்ற நம்பிக்கையோடு அந்த விசுவாச வாக்குறுதி அட்டையை நடுங் கும் கரங்களோடு நிரப்பி அங்குள்ள ஊழியரிடம் கொடுத்தார்.
அந்தப் போதகரிடம் பணம் இல்லை. அவருடைய சம்பளத்திலிருந்து அவரால் அதைக் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் ஆண்டவரிடம் 50 டாலர் மிஷனரிப் பணிக்குக் கொடுக்க ஜெபிக்கத் தொடங்கினார். அந்த வருடம் ஆண்டவர் அவருக்கு மிஷனரிப் பணிக்காக அவர் வாக்களித்த தொகை யைக் கொடுக்க உதவினார். அடுத்த மாநாட்டில் அந்தத் தொகையை 100 டாலராக, இரு மடங்காகக் கொடுக்க ஏவினார். அந்தப் போதகர் கீழ்ப்படிந் தார். ஆண்டவர் அந்தத் தொகையை அந்த வருடம் தந்தார். அடுத்த மாநாட் டில் 200 டாலர் கொடுக்க வாக்களித் தார். ஒவ்வொரு வருடமும் அதேபோல அந்தக் காணிக்கையை இரு மடங்காக மிஷனரிப் பணிக்குக் கொடுக்க ஆண்டவர் கிருபை செய்தார்.

இதேபோல அந்தப் போதகரின் காணிக் கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து, ஆயிரக்கணக்கான டாலர்களை மிஷனரிப் பணிக்காகக் கொடுத்தார். அந்தப் போதகர் விசுவாசத்தில் வாக் களித்தார். ஆண்டவர் மிஷனரிப் பணிக்குக் கொடுக்கப் பணத்தைக் கொடுத்தார். அந்தப் போதகர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆவா ;தான் ஆஸ்வால்ட் ஜே ஸ்மித் (Oswald J Smith) உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியத்திற்கு எவ்வளவு காணிக்கை கொடுக்க ஆண்டவரை நம்புகிறீர்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் காணிக்கையை அதிகப்படுத் துகிறீ;களா?

(Dr. C Barnabas, Translated from True Discipleship Jan-Feb 2001)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment