கிறிஸ்மஸ் செய்திக்குச் சரியான மறுமொழி

By C Barnabas

தெய்வத்தின் அன்பை நான் எப்போதெல்லாம் தியானிக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு மருத்துவர் ஒரு மிஷனரி கூடுகை மாநாட்டில் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வரும். அந்த மருத்துவர் தேவனின் அன்பைப்பற்றியும், அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்து நம்மை நெருக்கி ஏவும் கிறிஸ்துவின் அன்பைப்பற்றியும் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு விளக்கினார். ஆண்டவரின் அன்பையும் அந்த அன்பிற்கு நம்முடைய பதிலையும் விவரிக்க, மிஷன் மருத்துவமனையில் நடந்த பின்வரும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
பல மேற்கத்திய மருத்துவ மிஷனரிகள் இந்தியாவில் பணி செய்தபோது நடந்த சம்பவம் அது. அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருடைய தியாக மனப் பான்மையினாலும், அன்பான சேவையினா லும் கவரப்பட்டு, மருத்துவமனையைச் சுற்றி யிருந்த அநேகக் கிராம மக்கள் சிகிச்சைக் காக அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். அவர் மக்களின் சரீரத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்கும் கரிசனை காட்டினார். ஆத்து மாக்களுக்காகப் பாரத்துடன் ஜெபிக்கும் ஒரு நபராக இருந்தார். சுற்றியுள்ள மக்கள் மரியாதையாக அவரை வெள்ளைதுரை என்று அழைத்தனர்.
ஒரு நாள் வயதான பெண் ஒருவர் பக்கத் தில் இருந்த கிராமத்திலிருந்து சிகிச்சைக் காக அந்த மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். மருத்துவர் உள் நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில் அந்த நோயாளிக்குச் சிகிச்சையளிக்கச் சென்றார். அந்த வயதான பெண்ணை அவர் சோதித்தபோது அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். மருத்துவர் அவளுடைய வாந்தியை தன் இரு கைகளிலும் பெற்றுக்கொண்டு, பின் அருகிலிருந்த தொட்டியில் சென்று அந்த வாந்தியை ஊற்றினார். தன் கைகளைச் சோப்பு போட்டு கழுவிவிட்டு மற்றவர் களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். அந்த மருத்துவர் அந்த மக்களை நேசித்த தால்தான் அதைச் செய்ய முடிந்தது. அதேபோல் இயேசுகிறிஸ்து தேவனாயிருந்தார். அவர் நம்மில் அதிகமாய் அன்பு கூர்ந்ததால், தன்னுடைய மகிமையையும், கனத்தையும் விட்டு, தன்னைத்தான் தாழ்த்தி மனிதனாக இந்த உலகிற்கு வந்து நம் முடைய இடத்தில் சிலுவையில் நம்முடைய பாவத்திற்காக மரித்தார். ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கி னார்” (2கொரி 5:21).
இயேசுகிறிஸ்துவின் தியாகத்தைப்பற்றியும், ஆண்டவரின் அன்பைப்பற்றியும் நாம் வேதாக மத்தில் என்ன வாசிக்கின்றோம்? பிலி 2:6-8ல் பவுல், இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயி ருந்தார் என்று எழுதுகிறார். அவர் தேவனுக்குச் சமமாக இருந்தார். ஆனால் அதை அவர் பெருமையான ஒன்றாகக் கருதவில்லை. உலகிலுள்ள மக்களின் தேவைகளை உணர்ந்து, தனது பதவியையும், உரிமை களையும் வெறுத்து, அடிமையின் ரூபம் எடுத்து மனுஷ சாயலானார். அவர் சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத்தான் தாழ்த்தி நம்மேல் வைத்த அன்பினால் நம்முடைய இடத்தில் நம்மை இரட்சிக்கத்தன் ஜீவனைக் கொடுத்தார். அவருடைய பிறப்பின்போது சில மக்களின் வாழ்வில் நடந்ததுபோல, அவரு டைய தெய்வீக அன்பிற்கு நாம் இப்போது எவ்வித வழிகளில் மறுமொழி அளிக்கலாம் என்று பார்ப்போம்.

தாழ்மையான சரணடைதல்: காபிரியேல் தூதன் மரியாளிடம், அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று கூறிய போது, மரியாள் ஒரு கன்னிகையாக இருந்தபடியால் தயங்கினாள். அப்பொழுது தேவ தூதன், அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்;பம் தரிப்பாள் என்றும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றும் கூறினார். மரியாள், தேவனால் அது ஆகும் என்று கேள்விப்பட்டபோது ‘இதோ, நான் ஆண்ட வருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்கா 1:38). தேவதூதனின் கேள்விக்கு தேவனுடைய சித்தத்திற்குத் தாழ்மையான சரணடைதல்தான் மரியாளின் பதிலாயிருந் தது. ஆண்டவருடைய சித்தம் நம்மில்; நிறைவேற நம்முடைய வாழ்க்கையை முழமையாக தேவனிடத்தில் தாழ்மையுடன் ஒப்புக் கொடுத்துச் சரணடைந்துள்ளோமா?

நம்பிக்கையுடன் விசுவாசித்தல்: அந்த நாட்களில் மரியாள் எலிசபெத்தைக் காணச் சென்று அவளை வாழ்த்தினாள். எலிசபெத், மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டபோது மறுமொழியாக ‘விசுவாசித்தவளே பாக்கிய வதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப் பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” (லூக்கா 1:45). மரியாள் தேவனை நம்பித் துணிந்து இயேசுவைப் பெற்றெடுக்கச் சம்மதித் தாள். ஆகவே தேவதூதன், யோசேப்பை ஒரு சொப்பனத்தின் மூலம் மரியாளை ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். மார்ட்டின் லூத்தர் கிறிஸ்மஸ் செய்தியில், ‘இயேசு பெத்லகேமில் பிறந்தபோது மூன்று அற்புதங்கள் நடைபெற்றன. தேவன் மனிதனானார், ஒரு கன்னிகை கர்ப்பவதியானாள், மரியாள் விசுவாசித்தாள்” என்று கூறினார். மரியாள் நடக்கக்கூடாத ஒரு காரியத்தை விசுவாசித்த தால், அது அவளை ஆண்டவரின் தாயாக மாற்றியது. நாம் ஆண்டவரை நம்புகிறோமா? அவரால் கூடாதது ஒன்றுமில்லை என்று விசுவாசிக்கிறோமா?

தியாகமான கீழ்ப்படிதல்: யோசேப்பு ஒரு நீதிமான். அவன் மரியாள் கர்ப்பந்தரித்தாள் என்று அறிந்தபோது அவளை இரகசியமாகத் தள்ளிவிட எண்ணினான். ஆனால் தேவ தூதன் அவனுக்கு முன் தோன்றி, மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்தாள் என்று கூறியபோது, அவன் அவளைத் தன் மனைவி யாகச் சேர்த்துகொண்டது மட்டுமல்லாமல், ‘அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறு மளவும் அவளை அறியாதிருந்தான்”(மத் 1:25). ஒரு இளைஞனாய் திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்த யோசேப்புக்கு இது ஒரு தியாகமான கீழ்ப்படிதல். நம் வாழ்க்கையில் தியாகமில்லாமையும், கீழ்ப்படிதலும் இல்லை என்றால் இன்று தியாகத்துடன் கீழ்ப்படிய தீர்மானம் செய்வோமா?

தேவனுக்கு மகிமை கொடுத்தல்: கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது மேய்ப்பர்கள் இரவில் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்களுக்குத் தரிசனமாகி, இயேசுவின் பிறப்பை அறிவித்தவுடன், அந்த தேவதூதர் கூட்டம் அமைதியாக இருக்கவில்லை. அவர்கள் ‘உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்”(லூக்கா 2:14). நாம் தேவனுக்கு மகிமையளித்து, பூமியில் சமாதானத்திற்காகவும், மனிதர் மேல் பிரியம் உண்டாவதற்காகவும் ஜெபிப்பாமா?

தேவனை ஆராதித்து, அவருக்குப் பரிசுகளைத் தாராளமாகக் கொடுத்தல்: கிழக்கிலி ருந்து சாஸ்திரிகள் பெத்லகேமிற்குச் சென்று ஆராதித்து பரிசுகளை வழங்க வந்தனர். ‘அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்க ளைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத் தையும், வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத் 2:11). கிறிஸ்மஸ் காலங்களில் சிறு பிள்ளைகள் தங்களிடத்தில்; அன்பானவர்களிடமிருந்தும், வேலை செய்பவர்கள் தங்கள் எஜமான்களிடமிருந்தும், பரிசுகள் பெறுவர். ஆனால் சாஸ்திரிகள் தேவனை ஆராதித்து, அவருக் குப் பரிசுகளை வழங்கினர் என்று வேதாகமம் கூறுகிறது. இந்த கிறிஸ்மஸில் தேவனை ஆராதித்து அவருக்குப் பரிசுகளை அளிப்போமா?

தேவனுடைய அன்பை எல்லோரிடமும் பறை சாற்றுதல்: மேய்ப்பர்கள் இயேசுவை மாட்டுக் கொட்டிலில் கிடத்தியிருக்கக் கண்ட பின் ‘அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்”(லூக்கா 2:17). தேவதூதனிடத்தில் அவர்கள் கேட்ட செய்தி என்ன? கிறிஸ்து என்னும் ஆண்டவர் இரட்சகராகப் பிறந்த நல்ல செய்தி. மேய்ப்பர்கள் சென்று ‘குழந்தை இயேசுவே இரட்சகரும் கிறிஸ்துவும்” என்று பிரசித்தம்பண்ணினார்கள். இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நமக்குக் கிடைக்கிற சந்தர்ப்பங்க ளைப் பயன்படுத்தி, இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிக்க தீர்மானம் செய் வோம். இயேசுகிறிஸ்து உலகின் இரட்சகர் என்ற நற்செய்தியை அறிவிக்க தீர்மானிப் போமா? உலகில் வாழும் ஆறு நபர்களில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் தேவனின் அன்பை ருசிக்கவில்லை. அன்னா ளைப்போல (லூக்கா 2:38) இந்தியாவில் இரட்சிப் புக்காக ஏங்கி நிற்கும் அனைவருக்கும் இயேசுவைக் குறித்து அறிவிப்பது அவசியமா னதல்லவா?

 

(Dr. C Barnabas, Translated from True Discipleship Nov-Dec 2000)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment