பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகள்
- Published in Tamil Devotions
இளம் கிறிஸ்தவர்களின் முதல் பிரச்சனை பாவம். இந்தப் பாவப் பிரச்சனைக்கு அவர்கள் பல வழிகளில் தீர்வுகாண முயல்கின்றனர். விசுவாசிகளின் வாழ்வில் பாவப் பிரச்சனையை மேற்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம்.
1.பாவத்தைப் பாவமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்:
‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” (சங் 32:5).
2.பாவம் செய்ததற்காக வருத்தப்பட வேண்டும்:
‘என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.” (சங் 38:18).
3.பாவத்தை பாவமாக தேவனிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்:
‘என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.” (சங் 51:3,4).
4.பாவம் செய்யாமல் இருக்க இருதயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்:
‘தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.” (தானி 1:8).
5.பாவத்தை மரணம் மட்டும் எதிர்க்க வேண்டும்:
‘பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.” (எபி 12:4).
6.உங்கள் அவயவங்களைத் தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டும்:
‘நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.” (ரோமர் 6:13,14).
7.நெருக்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட வேண்டும்:
‘ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” (எபி 12:1).
8.தேவனுடைய உதவிக்காக ஜெபிக்க வேண்டும்:
‘துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.” (சங் 19:13).
9.தப்பிக்கொள்ளும் வழியை உபயோகிக்க வேண்டும்:
‘மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1கொரி 10:13).
10.ஆவியிலே நடக்க வேண்டும்:
‘பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” (கலா 5:16).
(Dr. C Barnabas, Translated from True Discipleship June-1994)