கிறிஸ்தவ வாழ்க்கையின் வல்லமை

By C Barnabas

அந்த ஞாயிறு காலை ஜாய், சுமையான மற்றும் பாரமான இருதயத்துடன் எழுந் தாள். முந்தின இரவு அவள் சரியாகத் தூங்கவில்லை. கர்த்தரின் நாள் சந்தோ ஷமான நினைவுகளைக் கொண்டுவரும் நாளாக இருந்தது. சுமார் 25 ஆண்டுக ளாக அவளும், அவள் கணவர் மார்க்கும் ஞாயிற்றுக்கிழமைகளை நன்றாக செலவு செய்தனர். அவள் காலை உணவு தயார் செய்தபின் இருவரும் பேசிக்கொண்டோ அல்லது அமைதியாகவோ சேர்ந்து சாப்பி டுவார்கள். பின் இருவரும் ஞாயிறு ஆராதனைக்குச் சேர்ந்து செல்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் மாறி விட்டது. திங்கட்கிழமை அவளுடைய கணவர் மரித்துப் போனார். ஆகவே அவள் தனியாக தேவாலயத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் காரை ஓட்டிச் சென்று, ஆலயத்தை அடைந்தவுடன் கார் கதவைத் திறந்துவிடுவார். ஆனால் அவள் இன்று தனியாகக் காரை ஓட்டிச் சென்று, காரின் கதவைத் திறக்க வேண்டும். அவள் மெதுவாகத் தனது படுக்கையை விட்டு எழுந்து, அடுப்ப றைக்குச் சென்று, உணவை தயாரித்து, உண்ண தனியாக அமர்ந்தாள். அவள் உணவு உண்ணும்போது தனது கணவனு டன் இருந்த சந்தோஷமான நினைவுகள் அவளை இந்த உலகை விட்டு அழைத் துச் சென்றது. திடீரென்று எட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே அவள் ஒன்பது மணிக்கு ஆலயத்தில் ஆராதனைக்கு இருக்க வேண்டும் என்று நினைவில்கொண்டாள். மெதுவாகப் புறப் பட்டு கதவை பூட்ட முயன்றாள். ஆனால் கவலையினாலும், அழுகையினாலும் அவளால் வீட்டைவிட முடியவில்லை. உண்மை என்னவென்றால் அவளுக்குப் போக மனம்வரவில்லை. ஆலயத்தில் தனி யாக அமர அவளுக்கு விருப்பமில்லை. அப்பொழுது தன் கணவனிடம் அவள் செய்த வாக்குறுதியை நினைவுகூர்ந் தாள். அவள் ஒழுங்காக ஆராத னைக்குச் செல்வேன் என்று அவரின் மரணத்திற்கு முன் வாக்கு அளித்திருந் தாள். ஆகவே வீட்டை விட்டுப் புறப்பட் டாள். அவள் ஆலயத்தின் வாகனம் நிறுத்துமிடத்தை அடைந்ததும், ‘தேவன் இன்று அவருடைய வார்த்தையின் மூலம் பேசுவாரா?” என்று யோசித்தாள்.
அந்த ஆராதனை ‘என் இராஜாவாகிய கிறிஸ்துவின் வாக்குறுதிகள் மேல் நிற்கிறேன்” என்ற பாடலுடன் தொடங்கியது. ஆண்டவர் அவளுடன் இடைபடுவார் என்று உணர்ந்தாள். ஆயத்தப் பாடலுக் குப் பின், ஒரு புதிய பிரசங்கியார் பிரசங்க பீடத்திற்குச் சென்றார். அந்த இளம் பிரசங்கியார் நம்பிக்கையும், மகிழ்ச்சியு மான முகத்துடன் பிரசங்க பீடத்தில் ஏறி நின்றார். அவர் வட இந்தியாவில் ஒரு மிஷனரியாக பணிபுரிவதாகத் தன்னை அறிமுகப்படுத்தினார். அவர் சபையைப் பார்த்து யோசுவா 1:9ஐ வாசித்தார். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீ போகும் இட மெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்”. பின்பு அவர் வில்லியம் கேரியின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் இந்தியாவில் தனது பணியை மனநிலை சரியில்லாத மனைவியுடனும், ஏழு ஆண்டுகளாக ஒரு கணணியும் இல்லாமல் தொடர்ந்து பணி செய்தார். அதன் பின் அவரது மனைவி யையும், மகனையும் இழந்தார். ஆனால் அந்த சோதனைகள் அவரது அழைப் பிலிருந்து வழி விலகிப்போக செய்ய வில்லை.
அந்த செய்தி ஜாய்க்கு ஏற்றதாக இருந்தது. தேவனுடைய வல்லமையும், ஜீவனுமான வார்த்தையின் மூலமாக தேவன் அவளோடு பேசினார். அவள் இந்த உலகம் நிலையில்லாததால், பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். அவளுடைய கணவனுக்குப் பதிலாக தேவன் அவளோடுகூட இருப்பார் என்று உணர்ந்தாள்.
ஆனால் அந்த வாக்கு நிறைவேற ஒரு நிபந்தனை உள்ளது என்று அந்தப் பிரசங்கியார் கூறின போது, ஜாய் தன் இருதயத்தில், ‘ஆண்டவரே அந்த நிபந்தனையை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்தாள். ‘இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியி ருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பா யாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்தி மானாயும் நடந்துகொள்ளுவாய்” யோசுவா 1:8ஐ பிரசங்கியார் வாசித்தார். சபையைப் பார்த்து பிரசங்கியார், ‘தேவனுடைய வார்த்தையைத் தேடுவதே, கஷ்டங்கள் மற்றும் துன்பங்களின் மத்தியில் சந்தோ ஷமாகவும், மகிழ்ச்சியாகவும்; இருப்பதன் இரகசியம்.” இந்த உலகக் காரியங்கள் மக்களைக் கவலைப்படச் செய்கின்றன. ஆனால் ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையைத் தேடினால், திகைக்கவோ, கலங்கவோ மாட்டான். பின் யோசுவா 1:8ஐ குறிப்பிட்டு மூன்று வழிகளில் தேவனுடைய வார்த்தையிலிருந்து பலத் தைப் பெற முடியும் என்று கூறினார்.
முதலாவதாக விசுவாசி தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டும். ‘இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக” என்ற பகுதியைக் குறிப்பிட்டார். அடுத்து ‘இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டி ருப்பாயாக” என்று கூறினார். கடைசியிலே, ‘இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல் லாம் நீ செய்யக் கவனமாயிரு. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமா னாயும் நடந்துகொள்ளுவாய்” என்றார்.
ஜாய் தனது எதிர்காலத்திற்கான செய்தி யைப் பெற்றுக்கொண்டாள். வேதத்தை வாசித்து, தியானித்து, அதன்படி நடப்ப தன் மூலம் சந்தோஷமாக வாழலாம் என்று தனது கணவர் மார்க் கூறியதை நினைவுகூர்ந்தாள். தனது சுகவீனமும் துன்பமும் நிறைந்த கடைசி காலத்தில் மார்க் தினமும் தேவனுடைய வார்த்தை யை வாசித்து, தியானித்து, மாதிரி வாழ்க்கை வாழ்ந்ததை நினைவுகூர்ந் தாள். அந்தப் பிரசங்கியார், செய்தியின் முடிவில், அமைதியாக ஜெபம் செய்ய சிறிது நேரம் தந்தார். ஜாய் ஆணடவரி டம் அவருடைய வார்த்தைக்காக நன்றி கூறி, தினமும் அவருடைய வார்த்தையை வாசித்து, தியானித்து, அதன்படி நடக்க தீர்மானித்தாள். ஆலயத்திற்குள் வரும்போது பாரத்துடன் வந்த ஜாய், நம்பிக்கையோடு மார்க் இல்லாமல் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும் என்ற உறுதியோடும் தேவனுடைய வார்த்தையோடும் ஆலயத்தை விட்டுச் சென்றாள். இனி அவளுக்கு பயம் இல்லை. தேவன் அவருடைய வார்த்தை யின் மூலம் அவளைத் தேற்றி, மகிமை வரை நடத்திச் செல்வார்.
இந்த நிலையில்லா, பாதுகாப்பற்ற உல கில் நமக்கு பாதுகாப்பு யார்? ஆண்டவ ரும், அவருடைய வார்த்தையும் தான். அவர் நம்மோடு இருக்கிறார். அவரு டைய வார்த்தையை நமக்குக் கொடுத்தி ருக்கிறார். அந்த வார்த்தை வல்லமையானது. தேவையுள்ள ஆத்துமாக்களின் தேவைகளைச் சந்திக்கும். பின்வரும் தேவனுடைய வார்த்தையின் குணாதிசயங் களால்தான் அது முடியும்.

அது வல்லமையாயும், செயல்படுகிறதா கவும் இருக்கிறது: ‘தேவனுடைய வார்த் தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்து மாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுக ளையும் யோசனைகளையும் வகையறுக் கிறதாயும் இருக்கிறது” (எபி 12:4).

அது குறைவற்றது: ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக் கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது” (சங் 19:7).
அது பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டது: ‘தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனு ஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசி னார்கள்” (2பேதுரு 1:21).

அது காரியத்தை வாய்க்கும்: ‘அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத் திற்குத் திரும்பாமல், அது நான் விரும்பு கிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசா 55:11).

அது உண்மையானது: ‘கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைக ளெல்லாம் உண்மை” (சங் 119:151).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment