கவலைப்படா திருங்கள்

By C Barnabas

பாப் லெபின் “கவலை” என்ற வார்த்தை வேதாகமத்தில் வரும் இடங்களைத் தேடினார். “கவலை” என்ற வார்த்தை வரும் இடங்களில், பெரும்பாலான இடங்களில் வேறு இரு வார்த்தைகள் வருவதைக் கண்டறிந்தார். ஆங்கிலத்தில் “do not” என்ற இரு வார்த்தைகள் தான் — “கவலைப்பட” “வேண்டாம்”. வேதாகமம் விசுவாசிகளைக் கவலைப்பட வேண்டாம் என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறது.
இயேசுகிறிஸ்து கவலையைக் குறித்துப் போதிக்கும்போது “கவலைப்படா திருங்கள்” என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். உலகப்பிரகாரமான காரியங்களுக்காக நாம் கவலைப்பட வேண்டாம் என்று போதித்தார்.
அநேகக் கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களுக்காகக் கவலைப் படுகிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே, அவர் பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்றும், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் உங்களால் ஊழியம் செய்ய முடியாது (மத் 6:19,20; 6:24) என்றும் போதித்தார். உலகப்பொருள்களின் நிலையற்ற தன்மையைப் போதித்த பின், மத்தேயு 6ல் இயேசு அவர்களை ஜீவனுக்காகவும், உடைக் காகவும், உணவிற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

ஜீவனுக்காகக் கவலைப்பட வேண்டாம்:‘ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” (மத் 6:25)

உடைக்காகக் கவலைப்பட வேண்டாம்:‘ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித் துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ் சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப் படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித் துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத் 6:26-29).

உணவிற்காகக் கவலைப்பட வேண்டாம்:‘ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப் படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” (மத் 6:31,32).

ஜீவனுக்காகவும், உணவிற்காகவும், உடலுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம்:‘பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக் காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க் கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக் கிறது.” (லூக்கா 12:22-23). ‘ஆகையால், என்னத்தை உண்போம், என்னத் தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.” (லூக்கா 12:29-30).

நாளைக்காகக் கவலைப்பட வேண்டாம்:‘ஆகையால், நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.” (மத் 6:34).

என்ன பேசுவோம் என்று கவலைப்பட வேண்டாம்:‘அவர்கள் உங்களை ஒப்புக் கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” (மத் 10:19-20).

முன்னதாகக் கவலைப்பட வேண்டாம்:‘அவர்கள் உங்களைக் கொண்டு போய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்ன தாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்த நாழிகையிலே உங்களுக்கு எது அருள்செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.” (மாற்கு 13:11).

எப்படிப் பாதுகாப்பது என்று கவலைப்பட வேண்டாம்:‘அன்றியும், ஜெபஆலயத் தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியா னவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.” (லூக்கா 12:11,12). ‘ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும் படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கை யும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.” (லூக்கா 21:14,15)

தொலைந்துபோன விலைமதிப்பற்ற பொருள்களுக்காகக் கவலைப்பட வேண்டாம்:‘மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.” (1 சாமு 9:20)

மற்றவைகளுக்காகக் கவலைப்பட வேண்டாம்:‘மிகவும் அற்பமான காரிய முதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” (லூக்கா 12:26-28).
கவலையைக் குறித்த எல்லா போதனைகளிலும் இயேசு உலகப் பொருள் களுக்காகக் கவலைப்பட வேண்டாம் என்று போதித்தார். அவர் “இவைகளை யெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்”, ஆனால் தேவன் உங்கள் தேவைகளை எல்லாம் சந்திப்பார் என்று கூறினார். (லூக்கா 12:30,31)
டேல் கார்னகி, ஹென்றி ஃபோர்ட்டை அவருடைய மரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் 1947ல் பேட்டி எடுத்தார். ஃபோர்ட் உலகத்தின் மகா பெரிய வணிகத்தைக் கட்டி, நிர்வகித்ததால், பல ஆண்டுகள் சிரமப்பட்டதன் அடையாளங்களைக் காண்பிப்பார் என்று கார்னகி எதிர்பார்த்தார். ஆனால் தனது 78வது வயதில் சுகமாகவும், சமாதானத்துடனும் ஃபோர்ட் காணப்பட்டார். எப்போதாவது கவலைப்பட்டதுண்டா, என்று வினவிய போது “இல்லை. தேவன் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்று நான் நம்புகிறேன், அவருக்கு நான் ஆலோசனை கொடுக்கத் தேவையில்லை. தேவன் பொறுப்பில் உள்ளதால் எல்லாம் முடிவில் சிறப்பானதாக முடியும். ஆகவே எதற்காகக் கவலைப்பட வேண்டும்” என்று கூறினார்.
நம்மேல் அக்கறை கொண்ட தேவன், நம் அலுவல்களை நிர்வகிக்கிறார். ஆகவே அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம் கவலைகளை எல்லாம் இயேசுவின் மேல் வைத்துவிடலாம். “அவர் உங்களை விசாரிக்கிற வரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.” (1 பேதுரு 5:7). ‘ கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22).

(Dr. C Barnabas, Translated from True Discipleship Mar-Apr 2008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment