ஆதியில் கொண்டிருந்த அன்பை நீ இழந்தாயோ?

By C Barnabas

ஆதியில் கொண்டிருந்த அன்பை நான் இழந்தேனோ என்று மறு  பரிசிலனை செய்ய எனக்கு உதவிய இரு சம்பவங்களை உங்களுடன ; பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன ;.

ஒரு மாலை வேளையில் ஒரு காவல்துறை அதிகாரி என்னைக் காண என் அலுவலகத்திற்கு வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த சாட்சியுள்ள வாழக்கை என் நினைவிற்கு வந்தது. அந்த நாட்களில் அவர் கிறிஸ்துவுக்குள் இளமையாகவும், சுறுசுறுப்பான நடைமுறை கிறிஸ்தவனாகவும் வாழந்தார். அவர் கிறிஸ்தவரல்லாத பின்னணியிலிருந்து வந்து, வாழ்க்கையில் பல பிரசசனைகளை எதிர் கொண்டாலும், தனது அலுவலகத்தில் சாட்சியாக வாழ கிரயம் செலுத்தினார். அவருடைய சபையிலும் அவர் மிகவும் ஈடுபாடுள்ளவராய்ப் பணி செய்தார். அவருடைய அர்ப்பணிப்புள்ள வாழக்கை அந்தக் காலங்களில் எனக்கு ஒரு சவாலாக இருந்தது.
சமீபத்தில் அவரை சந்தித்தபோது ‘சகோதரரே ஆதியில் கொண்டிருந்த அன்பை நான் இழந்துவிட்டேன ;” என்று பல முறை கூறினார். ‘தேவனிடத்தில் நாங்கள் கொண்ட வைராக்கியமும், ஆத்துமாக்கள் மேல் இருந ;த வாஞ்சையும் என்ன ஆனது?” என்று நான் கேட்டேன். ‘அந்த நாட்களில் எனது சபையில் ஈடுபாட்டுடன ; பணி செய்தேன ;. ஆனால் இப்பொழுது சபையில் பிரசங்கம் செய்வதை நிறுத்திவிட்டேன ;. சபைக்கு எப்போதாவது தான ; செல்கிறேன் எனது அலுவலகத்தில் உள்ள வேலையாலும், வீட்டில் உள்ள பிரச ;சனைகளாலும் என்னால் சபைக்குச் செல்ல முடியவில்லை. அன்பான சகோதரரே ஆதியில் கொண்டிருந்த அன்பை நான் இழந்துவிட்டேன ;. எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறினார். ‘ஆதியில் கொண்டிருந்த அன ;பை நான் இழந்துவிட்டேன ;” என்ற வார்த்தைகள் என் இருதயத்தை ஆழமாகத் துளைத்தது.

சமீபத்தில் அனைத்தையும் விட்டு மிஷனரியாக பழங்குடியினர் வாழும ; மலைகளுக்குச் சென்ற மிஷனரியை நான் சந்தித்தேன். அவர் இருந்த மிஷனரி தளத்திற ;கு திரைப்படம் காண்பிக்க மூன்று முறை சென்றபோது ஆத்துமாக்களின ; மேல் அவருக்கு இருந்த கரிசனை எனக்கு சவாலாக இருந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் அந்த இடத்திற்கு மிஷனரியாக அவர் சென்றபோது அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் இல்லை.
அந்த மக்களை கர்த்தரிடத்தில் திரும்ப வைராக்கியமாக இருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன் அவரை நான் சந்தித்தபோது, முப்பதுக்கும் அதிகமான சுவாசிகளைக் கண்டேன். அவர்கள் எல்லோரும் கிறிஸ்தவரல்லாத பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவருடைய சபையில் நான் பிரசங்கித்தபோது மிகவும் ஆழமாகத் தொடப்பட்டேன். அவரின் ஊழியம், ஆத்துமாக்களின் ; மேல் உள்ள கரிசனை மற்றும் அர்ப்பணிப்பு எனக்கு சவாலாக இருந்தது. ஆனால் இரண்டு வருடத்திற்கு முன் அவரை சந்தித்தபோது அவர் அந்த ஸ்தாபனத்தில் இல்லாமல், அதே இடத்தில் சுயாதீன ஊழியராகப் பணி செய்து கொண்டிருந்தார். அவரோடு நேரம் செலவழித்தபோது, அவர் ஆதியிலிருந்த அன ;பை இழந்துவிட்டதைக் கண்டேன். சாத்தான் ;உலகப்பிரகாரமான காரியங்களில் அவருக்கு இருந்த அன்பை உபயோகித்து அவர் செய்து வந்த ஊழியத்திலிருந்து அவரை விலகச் செய்தான ;. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந ;த ஒரு இளைஞன் அவருடைய மிஷனரி பணித்தளத்திற்கு வந்தார். இவருக்கு ஆத்துமாக்கள் மேல் இருந்த கரிசனை மற்றும் சபையின் வளர்ச ;சியைக் கண்டு சவால் அடைந்தார். அந்த வெளிநாட்டு இளைஞன் அவ்வப்போது அவருக்கு பணம் அனுப்ப ஆரம்பித்தார். அந்த மிஷனரிக்கு இளைஞனிடமிருந்து தவறாமல்; பணம் வர ஆரம்பித்தபோது, தாய் ஸ்தாபனத்தை விட்டு வெளியேறி சுயாதீன ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஆண்டவரை விட்டு விட்டு அந்த இளைஞரின் ஆதரவை நம்ப ஆரம்பித்தார். அவரை நான் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்தபோது,

அவர் பின் ;வாங்கிய நிலையில் ஆண்டவரால ; பயன் ;படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தார். அந்தப் பணம் அவரின் எல்லாத் தேவைகளையும் சந்திக்க முடியவில்லை. சில செயல் திட்டங்களை அவர் நிறுத்திவிட்டார் நான் அவரை அவருடைய தாய் ஸ்தாபனத்தில் சேர ஆலோசனை கூறினேன் ;. ஆனால் அவருடைய இருதயம் கடினமானதால் அவர் ஆண்டவரோடு தன்னை சரிசெய்ய முடியவில்லை. பரிதாபமாக பண ஆசையால், பலனளிக்கும், திருப்திதரும் ஊழியத்தை இழந்து தவித்தார். நமது ஆவிக்குரிய வாழ;க்கையின் ; பாதையில் வருடங்கள் பல கடந்தபின் நாமும் இந்த இரு விசுவாசிகளைப் போல பல காரணங்களால் ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்து போகலாம். வேதாகமத்தின ; அடிப்படையில் நமது வாழ்க்கையை சPர்தூக்கிப் பார்த்து, ஆண்டவருக்குள் பல வருடத்திற்கு முன்னும், இப்போதும் எவ்வாறு இருக்கிறோம் என்று சரிபார்க்க வேண்டும்.
பின்வரும் கேள்விகள் நம் வாழ்க்கையை சரிபார்க்க உதவும்.
1. நான் முன்பு ஜெபத்தில் செலவழித்த நேரத்தையே இப்போதும ; செலவழிக்கிறேனா? இப்போது எவ்வளவு நேரம் நான ; ஜெபத்தில் செலவு செய்கிறேன ;.
2. நான் முன்பு செய்ததைப் போல தேவனுடைய வார்த்தையை தியானிக்க நேரம் செலவு செய்கிறேனா? தேவனுடைய வார்த்தையை தியானிக்க தனியாக நேரம் செலவு செய்கிறேனா?

3. மற்றவர்களோடு ஒப்புரவு செய்ய சிறப்பு முயற்சி எடுக்கிறேனா? மற்றவர்களோடு குறிப்பாக என் குடும்ப உறுப்பினர்களோடு உள்ள உறவிலே குறை இருப்பதாகக் காண்கிறேனா?
4. நான் முன்பு ஆண்டவருடைய இராஜ்ஜியத்துக்கு பலரை வழி நடத்தின அதே கரிசனையும் பாரமும் இப்பொழுது எனக்கு இருக்கிறதா? ஆத்தும ஆதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்புபோல தைரியமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேனா?
5. நான் முன்புபோல அழிகின்ற ஆத்துமாக்களுக்காக உபவாசித்து ஜெபிக்கிறேனா?
6. நான் முன்புபோல விட்டிலும், வேலையிலும் எனது சாட்சியைக் காத்துக்கொள்ளுகிறேனா?

7. உலகப்பிரகாரமான பொருட்களின ; மேல் உள்ள என் மனப்பான்மையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இந்த உலகப் பொருட்களை கிறிஸ்துவின ; இடத்தில் வைத்துள்ளேனா?
8. எனது வாழ்வில் உள்ள குறைகளை ஆண்டவர் சுட்டிக் காட்டும்போது, உடனடியாக தேவனிடத்திலும், மனிதரிடத்திலும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேனா?
9. ஆண்டவரிடம் முழுமையாக அர்ப்பணிக்கப்படாத இடங்கள் என் வாழ்வில் உண்டா?
10. நான் எனக்கு ஒரு இராஜ்ஜியத்தைக் கட்ட கடினமாக உழைக்கிறேனா? அல்லது   இராஜ்ஜியத்தைக் கட்ட பிரயாசப்படுகிறேனா? வெளிப்படுத்தல்  வேதாகமம் ஆதியில் இருந ;த முதல் அன்பை இழந்தவர்கள் செய்ய வேண்டிய மூன்று காரியங்களைக் கூறுகிறது.

1. நாம் எந்த நிலையிலிருந்து விழுந்தாய் என்று நினைத்துப் பார்.

2. மனந்திரும்பு.

3. ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.

 ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் மனந்திரும்பாவிட்டால் விளக்குத் தண்டை ந Pக்கிப்போடுவார் என்று எச்சரிக்கிறார். விளக்குத் தண்டை ந Pக்கினால் என்ன நடக்கும்? நாம் முன்பு இஇருந்ததுபோல மற்றவர்களுக்குச்
சாட்சியாக வாழ முடியாது.

(Dr. C Barnabas, Translated from True Discipleship March – Apr 2001)d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment