ஆவியிலே நடத்தல்

By C Barnabas

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆவிக்கேற்றபடி நடப்பது அவசியம் என்று பல விசுவாசிகள் அறிவார்கள். ஆனால் வெகு சிலரே ஆவிக்கேற்றபடி நடப்பது எப்படி என்று அறிந்து அனு பவிக்கிறார்கள். பரிசுத்த பவுல், ‘ஆவிக் கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” என்ற கூற்றை நான்கு முறை ரோமர் 8:1-11 மற்றும் கலா 5:16-26ல் உபயோகித்து, ஆவிக்கும் மாம்சத்திற்கும் உள்ள விரோதத்தைக் குறித்துக் கூறுகிறார். மாம்சத்தின் மேல் வெற்றி ஆவியில் நடப்பதால் மட்டும்தான் செயல்படுத்த முடியும் என்று எழுதுகிறார்.
‘நட” என்ற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டில் உபயோகப்படுத்தப்பட்ட கிரேக்க சொல் பெரிபடியோ (pநசipயவநழ). அந்தச் சொல் அடையாளப் பூர்வமாக ஒரு வரின் வாழ்க்கை முறையைக் காட்டு கிறது. விசுவாசிகள் ஒரு காலத்தில் பாவத்தில் நடந்து வாழ்ந்தனர் என்று கொலோ 3:7ல் வேதாகமம் கூறுகிறது. ஆனால் இரட்சிப்புக்குப் பிறகு ஆவிக் கேற்றபடி நடந்து மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பார்கள் (கலா 5:16). ஆவிக்கேற்றபடி நடக்க உதவும் பின்வரும் வழிகளைக் காண்போம்.

பாவத்தை அறிக்கை செய்வதன் மூலம்: ஆவியிலே நடத்தல் என்பது நாம் ஒரு பாவத்தை செய்தவுடன் அதை உடனே அறிக்கை செய்யத் தூண்டுகிறது. நாம் பாவம் செய்யும ;போது பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துகிறோம் என்று வேதம் கூறுகிறது (எபே 4:30). தேவ னோடு உள்ள ஐக்கியத்தை அது துண்டிக்கிறது. இழந்துபோன ஐக்கியத் தைத் திரும்பப்பெறவும், பரிசுத்த ஆவி யானவரின் நிறைவைப் பெறவும் நாம் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். அதை மறைக்கக் கூடாது (நீதி 28:13). பாவத்தை அறிக்கை செய்தல் பாவ மன்னிப்பைப் பெறவும், பரிசுத்த ஆவியானவரோடு உள்ள உறவைப் புதுப்பிக்கவும், ஆவியானவரின் நிறைவைப் பெறவும் நமக்கு உதவி செய்யும்.

ஒப்புக்கொடுத்தலின் மூலம்: ஒரு இளம் பெண் ஒரு கூடுகையில் பங்குபெற்று இயேசு கிறிஸ்துவைத் தன் ஆண்டவரா கவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண் டாள். சில நாட்களுக்குப் பின்னர் அவளுடைய வாழ்க்கையில் நடை பெற்ற மாற்றத்தைக் குறித்து வினவின போது ‘முன்னர் நான் பாவத்திற்குப் பின்னால் ஓடுவேன். ஆனால் இரட்சிக் கப்பட்டபின் நான் பாவத்தை விட்டு ஒடுகிறேன்” என்று கூறினாள். இரட்சிப் பின் போது நாம் ஒரு புதிய சுபாவத் தைப் பெற்று, பாவத்தை விட்டு ஓடத் துவங்குகிறோம். அதே சமயம் நமது பழைய சுபாவம் நமக்குள் இருந்து நம்மைப் பாவம் செய்யத் தூண்டுகிறது. நமது அவயவங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் நாம் பாவத்திற்கு அடிமையாவதைத் தடுக்கலாம் (ரோமர் 6:19).

நிரப்பப்படுவதன் மூலம்: தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து நிறைந்து இருக்க வேண்டும் என்பதே விசுவாசிகளுக்கு, பரிசுத்த ஆவியான வரைக் குறித்து வேதாகமத்தில் உள்ள ஒரே கட்டளை ஆகும். ‘துன்மார்க்கத் திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து;” (எபே 5:18). நிரப்பப்படுவது என்பது ஒரு அனுபவம் அல்ல. மாறாக தேவ னுடைய பரிசுத்த ஆவியானவரை நமது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் அனு மதித்து, நமது வாழ்க்கையின் முழமை யையும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் விட்டுக் கொடுப்பது ஆகும். ஆவியினால் நிறைந்த மனிதன் கிறிஸ்து வைப்போல மாறுவதன் மூலமும், ஆவி யின் கனியைப் பெறுவதின் மூலமும் அடையாளம்காண முடியும் (கலா 5:22,23). பாவத்தின் வல்லமையை பரிசுத்த ஆவி யானவரின் வல்லமையால் மட்டுமே மேற்கொள்ள முடியும். பரிசுத்த ஆவி யானவரின் நிறைவு நம்மைப் பாவம் மற்றும் மரணத்தின் பிரமாணத்திலிருந்து விடுதலை செய்கிறது (ரோமர் 8:2).

 

(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct-Nov 1994)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment