பயம் மக்களை வேதனைப்படுத்துமா?
- Published in Tamil Devotions
சென்ற மாதம் நான் அஸ்ஸாமில் உள்ள கௌகாத்திக்கு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு கட்டுரையை வெளி யிடச் சென்றேன். அந்தக் கருத்தரங்கின் கடைசி நாளில் கொரில்லாக் களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லா இடங்களிலும் பதற்றம் நிறைந்த மக்களைக் காண முடிந்தது. அந்த இரவு நாங்கள் நாகலாந்திலுள்ள திமாபூருக்குச் செல்ல வேண்டி யிருந்தது. அந்த நகரம் கொரில்லாக் கள் அதிகம் உள்ள இடமாக இருந்தது. என்னுடைய நண்பரை நான் இரயிலில் திமாபூருக்குக் கூட்டி செல்லக் கேட்டபோது, அது பாதுகாப்பற்ற வழி என்று கூறினார். எப்படியோ அடுத்த நாள் திமாப்பூர் சென்று அடைந்த போது, ஒரு வாலிபன் இராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று காலையில் அறிந்தோம். மக்கள் நடுவில் இந்த செய்தி பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியது.
நான் திமாப்பூரில் இருந்தபோது, என்னுடைய நண்பர், ‘யாரும் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் செல்வதில் லை” என்று கூறினார். எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன் சுடுவதற்கு தயாராக உள்ள வீரர்களை நாம் பார்க்கலாம். நூற்றுக்கணக்கான இராணுவ சோதனைச் சாவடிகள் எல்லா மக்களையும் முழுமையாக சோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன. நான் தங்கியிருந்த கல்லூரியில், இரவில் சில நேரத்தில் நாகா கொரில்லாக்கள் வந்து, செல்வந் தர்களைச் சந்தித்து, பணம் கேட்பது உண்டு என்று என் நண்பர் கூறினார். நான் திமாப்பூரில் இருந்தபோது, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று உணர்ந்தேன். அந்த இடத்தில் உள்ள மக்கள் பயத்துடனும், பதற்றத்துடனும் வாழ்வதைக் கண்டேன்.
அந்த சமயம் என்னுடைய காலைத் தியானத்தில் 1யோவான் வாசித்துக் கொண்டிருந்தேன். 1யோவான் 4:18ஐ ஒரு காலையில் நான் வாசித்த போது, பயம் எவ்வளவாக மக்களின் வாழ்வில் விளைவுகளைக் கொண்டு வருகிறது என்று புரிந்துகொண்டேன். ‘அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனை யுள்ளது”(1யோவான் 4:18). என் வாழ்வில் முதன் முறையாக பயம் வேதனையைத் தருகிறது என்பதைக் கற்றுக் கொண்டேன். அந்த சமயம் வேதனை என்றால் என்ன என்று தியானித்தேன்.
‘வேதனை” என்ற வார்த்தைக்கு வேத அகராதி ‘தாங்க முடியாத வலியை அனுபவிப்பது” என்று பொருள் கூறி யது. அது நூற்றுக்கதிபதியின் வேலைக் காரன் சரீரத்தில் அனுபவித்த வலியாக இருக்கலாம். ‘வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான்;” (மத் 8:6). அல்லது இரவும் பகலும் நரகத்தில் மக்கள் அனுபவிக்கும் வேதனையாக (வெளி 20:10) இருக்கலாம். அல்லது லோத்து சோதோமில் வாழ்ந்த போது தனது ஆத்துமாவிலே அனுபவித்த வேதனையாக இருக்கலாம் (2பேதுரு 7,8). அந்த நாளில் வேதனை மக்களின் வாழ்வில் என்ன விளைவுகளைக் கொண்டு வருகிறது என்று கற்றுக் கொண்டேன். இந்த வசனம் என்னுடைய நண்பர் ஒருவர் பயத்திற்கு இடம் கொடுத்தபோது பட்ட வேத னையை ஞாபகப்படுத்தியது. இந்த சம்பவம் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஒரு நாள் என் நண்பர் என்னிடம் வந்து தனக்கு தொண்டை புற்று நோய் இருப்பதாகக் கூறினார். எப்படி தொண்டை புற்று நோய் இருக்கிறது என்று கண்டுகொண்டாய் என்று நான் கேட்ட போது ‘நான் விழுங்கும் போது தெண்டையில் வலி ஏற்படுகிறது” என்றார்.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள சென்றீர்களா என்று வினவினேன். ‘நான் மருத் துவரை சந்தித்தேன். அவர் வலி எங்கே உள்ளது என்று கேட்டார். நான் வலி ஏற்படும் இடத்தைக் காண்பித்தபோது அவர் சிரித்தார். பின்பு அந்த இடத்தில் வலி உள்ள எவரும் புற்றுநோயாளியாக என்னிடத்தில் வந்ததில்லை என்று கூறினார்” என்றார்;.
அந்த சமயத்தில் எனது நண்பர் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்திருந்தார். அவருடைய மனைவியும் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தார். அவருக்குத் தொண்டை புற்று நோய் இருப்பதாக நம்பினார். அவர் பல நாட்கள் தூங்க முடியாமல் கஷ்டப் பட்டதாகக் கூறினார். நான் அவருக் குத் தெண்டை புற்று நோய் இல்லை என்று நம்ப வைக்க முயன்றேன். ஆனால் அவர் நம்பவில்லை. மருத்துவரை நம்பாதவர் என்னை எப்படி நம்புவார்?
அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் புற்று நோயினால் கஷ்டப்பட்டு இறந்தது எனக்குத் தெரியும். கிராமத்தில் உள்ள மக்களுக்கு அந்தக் காலத்தில் நவீன சிகிச்சைகள் அன்று கொடுக்கப்பட வில்லை. ஆகவே அவள் வேதனையோடு பரிதாபமாக இறந்தாள். பக்கத்து வீட்டில் இருந்த என் நண்பர் அவளுடைய வேதனையான அழுகுரலைக் கேட்டு, புற்று நோயைக் குறித்து கடும் பயம் கொண்டார். தனக்கு புற்று நோய் இருப்பதாகவும், தானும் அவளைப் போல வேதனையோடு மரிக்கப் போவதாகவும் கற்பனை செய்துகொண்டார். அவர் இறந்து போனால் அவருடைய மனைவிக்கு என்ன ஆகும் என்று பயந்தார். புற்று நோயின் கொடிய வேதனையை நினைத்து வேதனைப்பட்டார். இந்த நிகழ்ச்சியை நான் நினைவு கூர்ந்த போது, பயம் எவ்வாறு மக்களின் வாழ் வில் வேதனையைக் கொடுக்கும் என்று விளங்கிக் கொண்டேன். இப்போது அந்த நண்பர் திருநெல்வேலியில் ஒரு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரிய ராகப் பணி செய்கிறார். இதுவரை அவரை புற்று நோய் தாக்கவில்லை.
பயம் வாழ்க்கையில் தேவையில்லாத வேதனையை உருவாக்கும். நீங்கள் இந்த பயத்திற்கான தீர்வு என்ன என்று கேட்டால், ‘பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” (1யோவான் 4:18) என்று வேதாகமம் அதற்கான தீர்வை அளிக்கிறது. மக்களின் வாழ்வில் உள்ள பயம், தேவனுடைய அன்பை தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியோடு அனுபவிப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். பவுல் இந்த பூரண அன்பை தன் வாழ்வில் மகிழ்ச்சியுடன் அனுப வித்து வாழ்ந்தார். ‘கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத் திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசி யோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” என்றும், ‘மரணமானா லும், ஜீவனானாலும், தேவ தூதர்களா னாலும், அதிகாரங்களானாலும், வல்ல மைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர் வானாலும், தாழ்வானாலும், வேறெந் தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசு விலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக் கிறேன்” (ரோமர் 8:36,38,39) என்றும் எழுதினார்.
உங்களில் சிலர் எனது நண்பரைப் போல பயத்தினால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். எப்படி பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்? என்று நீங்கள் கேட்கலாம். நாம் தேவனை நம்பி, அவரை நமது வாழ்க்கையின் இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய அன்பு நமது இருதயங்களில் ஊற்றப் படுகிறது. பவுல் இந்த தேவனுடைய அன்பை தன் வாழ்வில் அனுபவித்தார். எல்லா முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர் களும், உலக சரித்திரத்தில் வாழ்ந்த இரத்த சாட்சிகளும் இந்த அன்பை ருசித்து மகிழ்ந்தனர். ஆகவே உபத்திரவப்படும்போது, பயமில்லாமல் இந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஏனெனில் அவர்கள் தேவனு டைய அன்பை வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு உலகம் தகுதியற்றதாய் இருந்தது. தேவனு டைய அன்பை அவர்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்ததால் உபத்திர வமோ, வியாகுலமோ, துன்பமோ, மரணமோ அவர்களைப் பயப்படுத்த வில்லை.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய அன் பைப் பெற்றுக்கொள்வோமானால், வேத னைப்படுத்தும் பயத்திலிருந்து விடுபட அது நமக்கு உதவும்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Nov-Dec 2001)