கிறிஸ்மஸின் நோக்கம்
ஒரு கிராமத்திற்கு ஒரு முறை இளமையும், ஊழிய ஆர்வமும் உள்ள போதகர் மாற்றப்பட்டார். அந்தப் புதிய போதகர் முதல் நாள் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில் இருந்த பெண்மணியைச் சந் தித்தார். அன்று சாயங்காலம் அவளுடைய கணவர் வீடு திரும்பிய பின் அவள் கணவரிடம், ~நம் வீட்டிற்கு புதிய போதகர் இன்று வந்தார்| என்றாள். அவன், ~அவர் என்ன கூறினார்?| என்று கேட்டான். அவள் சிறிது தயங்கிய பின், ~கிறிஸ்து இங்கே வாழ்கிறாரா?| என்று கேட்டார். அதற்கு கணவன், ~நீ என்ன கூறினாய்| என்று வினவினான். ~எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை| என்றாள். அந்த கணவன் மிகவும் விசனமடைந்தவனாய், ~நாம் கிறிஸ்தவர்கள், ஒழுங்காக தேவாலயத் திற்குச் செல்கிறோம் என்று நீ ஏன் கூறவில்லை?| என்று கேட்டான். ~அவர் அதைக் குறித்துக் கேட்கவில்லை. அவர் கிறிஸ்து இந்த வீட்டில் வாழ்கிறாரா? என்று தான் கேட்டார்| என்றாள். ~நாம் ஒழுங்காக தசமபாகத்தை தேவாலயத் திற்குக் கொடுக்கிறோம் என்று நீ கூறவில்லையா| என்றான். அந்தப் பெண் மணி விசனத்துடன் கூறினாள், ~அவர் அதைக் குறித்துக் கேட்கவில்லை. கிறிஸ்து இந்த வீட்டில் வாழ்கிறாரா? என்ற எளிதான கேள்வியைத்தான் கேட்டார்|. அந்தத் தம்பதியர் புதிய போதகரின் கேள்வி யைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக பெயரளவில் இருந்தாலும் அவர்கள் வீட்டிலும், வாழ்க் கையிலும் அவருக்கு இடம் கொடுக்காமலேயே வாழ்ந்து வந்தனர்.
நீங்களும் இந்தத் தம்பதியரைப் போல இருக்கலாம். ஒழுங்காக தேவாலயத்திற்குச் சென்று, வேதம் வாசித்து, ஜெபம் செய்பவர்களாக இருக்கலாம். உங்கள் வருமானத்தில் தசமபாகத்தை ஆண்டவருடைய ஊழியத்திற்கு நீங்கள் கொடுக்கலாம். ஆனால் அது போதாது. உங்களில் வாழவும், உங்களுடைய ஆவிக்குரிய தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கவே இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். இந்த கிறிஸ்மஸ் காலத்தில், ஆண்டவரா கிய இயேசு கிறிஸ்து உங்களில் வாழ்கி றாரா? என்று சோதித்துப் பாருங்கள்.
இயேசுவின் பிறப்பைக் குறித்து வேதாகமம் இப்படியாகக் கூறுகிறது. ~அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத் திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடி யினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்| (லூக் 2:7). இயேசு கிறிஸ்துவிற்கு சத்திரத்தில் இடம் இல்லாமல் போனது. அநேகர் சத்திரத்தில் தங்கினர். ஆனால் இயேசுவிற்கு சத்திரத் தில் இடமில்லாதிருந்தது.
அன்பானவர்களே, நீங்கள் இயேசுவிற்கு உங்கள் இல்லத்தை அளித்திருக்கிறீர் களா? அப்படியானால் இயேசு உங்கள் வாழ்வின் ஆண்டவராக இருக்கிறாரா? இதுவரை உங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவுக்கு இடம் கொடுக்காமல் இருந் திருந்தால், ஏன் இந்த கிறிஸ்மஸில் அவர் உங்கள் வாழ்வில் பிறக்க இடம் கொடுக் கக் கூடாது?
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த முக்கிய நோக்கம் பாவத்தின் பிரச்சனை யைத் தீர்க்கவே. நாம் பாவம் செய்து தேவ ஆக்கினைக்குக் கீழ் உள்ளோம். ஆகவே நாம் நம் பாவங்களுக்காகச் சாக வேண்டும். நமது முயற்சியால் நம்மைக் காப்பாற்ற முடியாது. ஆகவே, தேவன் தனது ஒரேபேறான குமாரனை, நமக்கு பாவ மன்னிப்பும், தேவனோடு உறவும் கிடைக்கும்படியாக தமது அன்பின் காரண மாக உலகத்திற்கு அனுப்பினார். சிலுவை யில் கிறிஸ்துவின் மரணத்தின் வாயிலாக அது நடந்தது. நாம் அவர் மீது விசுவா சத்தை வைக்கும் போது, இயேசு கிறிஸ்து வின் இரத்தம் நம்மைப் பாவத்திலிருந்து கழுவி, நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிறது. உன்னுடைய பாவங்களி லிருந்து உன்னை மீட்க இயேசு ஒரு சிறு பாலகனாய் பெத்லகேமில் பிறந்தார் என்று நம்புவாயா? நம்பினால் இந்த கிறிஸ்மஸை அர்த்தத்தோடும், மகிழ்ச்சியோடும் நீங்கள் கொண்டாடலாம்.
வேதாகமம் கீழ்க்காணும் நோக்கங்களுக்காய் இயேசு கிறிஸ்து மானிடனாய் வந்தார் என்று கூறுகிறது.
1)உன் பாவத்திலிருந்து உன்னை மீட்க: ~இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்|. லுக்கா 19:10
2)பிசாசின் கிரியைகளை அழிக்க: ~ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத் துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் அப்படியானார். எபி 2:14
3)உனக்கு நித்திய ஜீவனை அளிக்க: ~நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயி ருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.| யோவான் 10:10,28
4)உன்னை தேவனோடு ஒப்புரவாக்க: ~நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.| ரோமர் 5:10
5)உன் பாவத்தை நிவிர்த்தி செய்ய: ~அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ் விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது.| எபி 2:17
6)உன்னை மீட்கும்படியாக உனக்குப் பதிலாக உன்னுடைய பாவத்திற்காக மரிக்க:~மனுஷகுமாரனும் ஊழியங்கொள் ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.| மாற்கு 10:45
7)உனக்கும் தேவனுக்கும் நடுவில் மத்தி யஸ்தராக:~தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;| 1தீமோ 2:5,6
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து மரித்ததன் தலையாய நோக்கம் உன் பாவப் பிரச்சனைக்கு முடிவு கட்டவே. பாவத்தின் சம்பளம் மரணம். இயேசு உன் பாவத்திற்கான தண்டனையை, உனக்குப் பதிலாக சிலுவையில் ஏற்றுக்கொண்டார். உன்னைத் தேவனோடு ஒப்புரவாக்கவே இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என் பதே கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தள மாயிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்து உனது பாவத்திற்காக மரித்தார் என்று நம்புவதே அவர் மேல் விசுவாசம் வைப்பதாகும். கிறிஸ்து சிலுவை யில் செய்த கிரியையில் வைக்கும் நம்பிக் கையே உனக்கு நித்திய ஜீவனை அருளும். ~தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.| யோவான் 3:16.
(Translated from True Discipleship December)