தேவனை ‘ஆவியோடும் உண்மையோடும்” ஆராதனை செய்தல்;

By C Barnabas

கடந்த மாதம் நான் தேவனை ஒரு ஆலயத்தில் ஆராதித்தபோது பல மக்கள் ‘தேவனே உம்மை ஆவியோடும் உண்மை யோடும் ஆராதிக்கிறோம்” எனக் கூறி தேவனை ஆராதிப்பதைக் கேட்டேன். பல நூறு முறை நானும் அந்தச் சொற்களைக் கூறி தேவனை ஆராதித்திருக்கிறேன். ஆனால் கடந்த மாதம் முதல் தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்தலின் அர்த்தத்தை யோசிக்கத் துவங்கி னேன். அந்த ஆராதனையில் ‘ஆவியோடும் உண்மையோடும்” என்ற சொற்றொடரின் அர்த்தத்தைக் கண்டுகொள்ளத் தீர்மானித் தேன்.
சில மக்கள் தேவனை ஆவியோடு ஆராதித்தல் என்பது தேவனைப் பரிசுத்த ஆவியானவரில் ஆராதித்தல் என்று எண்ணுகின்றனர். வேறு சிலர் ஆவியில் ஜெபம் செய்வது புரியாத பாஷைகளில் ஜெபம் செய்வது என்று நம்புவதால் தேவனை ஆவியோடு ஆராதித்தல் பல பாஷைகளில் ஜெபம் செய்வதால் தான் கூடும் என்று எண்ணுகின்றனர். இந்தத் தொடரின் அர்த்தத்தை அறிய நாம், இயேசுகிறிஸ்து சமாரிய ஸ்திரீயிடம் கிணற்றின் அருகே யோவான் 4:23,24ல் கூறிய பாகத்தை ஆராய்வோம். ‘உண்மை யாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொ ழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயி ருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்.”
இந்தப் பகுதியை நாம் ஆழ்ந்து படித்து ‘ஆவியோடும் உண்மையோடும்” என்ற வார்த்தைகளின் கிரேக்க அர்த்தத்தை படித்தால்தான் ஆண்டவரை ‘ஆவியோடும் உண்மையோடும்” ஆராதிப்பதின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.


1. தேவனை ஆவியோடு ஆராதித்தல்: இந்த வசனம் தேவனின் இயல்பான தன் மையைக் கூறுகிறது. ‘தேவன் ஆவியாயி ருக்கிறார்” என்று கூறுகிறது. அதாவது தேவன் மனிதனைப்போல உடலும், இயல்பும் உள்ளவர் அல்ல. அவரை நாம் காண முடியாது. ஆகவே தேவனை ஆராதிப்பவர்கள் தேவன் ஆவியாயிருக்கிறார் என்ற புரிதலோடு அவரை ஆராதிக்க வேண்டும்.
‘ஆவியோடும், உண்மையோடும்” என்ற சொற்றொடரில் ‘ஆவி” என்ற சொல் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்காமல், மனித ஆவியைக் குறிக்கிறது. ஆகவே இந்த வசனம் சிலர் போதிப்பதைப் போல நம்மைப் பரிசுத்த ஆவியானவருக்குள்ளாக தேவனை ஆராதிக்க அழைப்பு தருவதல்ல. ஆனால் நாம் தேவனை ஆராதிக்கும் போது ஆராதனை உள்ளிருந்து வருகிற தாக (ஆவியில்) இருக்க வேண்டும் என்ப தைக் குறிக்கிறது. ஏனென்றால் ஆவியாயி ருக்கிற தேவனை நாம் ஆராதனை செய்கிறோம். தேவன் ஆவியாயிருப்பத னால் வெளிப்பிரகாரமான சமய சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் நாம் தேவனை ஆராதிக்கும்போது தவிர்க்க வேண்டும்.


2. தேவனை உண்மையோடு ஆராதித்தல்: நமது ஆராதனை உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என இயேசு கூறினார். ‘அல்தியா” (யடநவாநயை) என்ற கிரேக்க வார்த் தையே உண்மையைக் குறிக்கும்படி பயன் படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் ‘உண்மை”, அதாவது ‘கவனிக்க வேண்டும்” என்ற ‘அல்தீஸ்” (யடநவாநள) என்ற வார்த்தை யிலிருந்து பெறப்பட்டது. ஆகவே இயேசு இரண்டு காரியங்களை இந்த வசனத்தில் கூறுகிறார்.
முதலாவது தேவன் அவருடைய பிள்ளைகள் திருமறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளைக் கவனிக்க வேண்டும், என நோக்கமாயிருக்கிறார். வேதத்தின் போத னையின்படியே அவரை ஆராதிக்க வேண்டும் என்று இயேசு இந்த பகுதியிலே கூறுகிறார். ஆகவே நமது ஆராதனை உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். தேவனையும் அவருடைய உண்மையையும் நாம் அதிகமாக அறியும் போது நமது ஆராதனை ஆழமுடையதாக விளங்கும். தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறு எதையும் நமது ஆராதனை யின் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. அனுபவத்திற்காகவோ, மற்றவர் கவனிக்க வேண்டும் என்பதற்காகவோ, பாராட்டுவதற் காகவோ, சடங்கிற்காகவோ ஆராதிப்பவர், தேவனை உண்மையாய் ஆராதிப்பதில்லை.
இரண்டாவதாக, இயேசுகிறிஸ்து யார் என்பதைக் கண்டுணர்ந்து அவர் நமக்குச் செய்தவற்றை உணர்ந்து நமது ஆராதனை வேளையில், அவருடைய மேன்மைக்காக வும், அவர் அருளிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூற வேண்டும் என்று இயேசுகிறிஸ்து இந்தப் பகுதியில் கூறுகிறார். ‘தேவனை உண்மை யோடு ஆராதிப்பது” என்பது ‘தேவன் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வது, எல்லையற்ற பூரணமானவர், எல்லயற்ற வணக்கத்திற்குரியவர், எல்லையற்ற தீமை யை விட்டு விலகியவர், ஆகவே எல்லா பண்புகளிலும் தெய்வீகத் தன்மை உடைய வர்” என்று லாரன்ஸ் என்ற தேவ மனிதர் ‘தேவனின் பிரசன்னத்தில் பயிற்சி” என்று புத்தகத்தில் எழுதியுள்ளார்.
நமது தேவன் நம்மைப் படைத்தவர், நம்மைத் தாங்குபவர், நமது இரட்சகர். அவரையல்லாமல் நாம் நம்பிக்கையற்ற வாழ்க்கை வாழ்ந்திருப்போம். நமது துதிக் கும், நன்றிக்கும், ஆராதனைக்கும் தகுதி யுள்ளவர். ஆகவே நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பயபக்தியோடு தேவனை ‘ஆவியோடும் உண்மையோடும்” ஆராதனை செய்வோம். தேவன்தாமே நம் அனைவ ருக்கும் அவரை ஆவியானவராகக் கருதி, வேதத்தின் வெளிப்பாட்டின்படியே ஆராதனை செய்ய உதவி செய்வாராக.

(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct. 1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment