தேவனுடைய உண்மையின் அளவு
- Published in Tamil Devotions
தேவனுடைய அற்புதமான குணங்களில் ஒன்று அவருடைய உண்மையுள்ள தன்மை. நமது தேவன் உண்மையுள்ளவர். அவர் ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்று வேதம் கூறுகிறது. (உபா 7:9).
நாம் பாவத்திலும் தேவபக்தியற்றவர்களாக வும் வாழ்ந்தபோது தேவன் நமக்காக மரித்து அவரது ‘அகபே”(agape)
அன்பின் மூலம் தேவனுடைய உண்மையை வெளிப் படுத்தினார் (ரோமர் 5:6-8). தேவனுடைய உண்மையுள்ள தன்மையின் அளவைச் சரியாகப் புரிந்துகொள்ளும்போது, நம்மை அவருக்கு உண்மையுள்ளவர்களாக ஒப்புக் கொடுக்க உதவும்.
அது நித்தியமானது:‘உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத் திருக்கிறது” (சங் 119:90).
அது நிச்சயமானது:’ஆனாலும் என் கிருபை யை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்” (சங் 89:33).
அது முடிவில்லாதது: ‘கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது” (சங் 36:5).
அது பெரியது:‘நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக் கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலை தோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (புலம்பல் 3:22,23).
அது ஒப்பில்லாதது:‘சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமை யுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது” (சங் 89:8).
பழைய ஏற்பாட்டில் ‘உண்மை” என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் ‘முனா” (அரயொ) என்பதாகும். அது உறுதி, நம்பகத் தன்மை மற்றும் மாறாத தன்மை என்னும் அர்த்தம் கொண்டது. இந்த வார்த்தை தேவனுடைய குணாதிசயத்தைக் குறிக்க உதவுகிறது. அவரின் குணாதிசயம் மற்றும் வாக்குகளின் நம்பத் தகுந்த தன்மையைக் குறிக்கும் அந்த வார்த்தை வேதாகமத்தில் உபாகமம் 32:4ல் முதலாவதாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. ‘அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழி களெல்லாம் நியாயம், அவர் நியாயக் கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்”. அவர் நீதியும் செம்மையுமானவர், அவர் தவறு செய்பவ ரல்ல. ஆகவே நாம இதைப் புரிந்து கொண்டு நம் வாழ்வில் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship July 1999)