எபேசியர் நிருபத்தில் பவுலின் மாதிரி ஜெபம்
- Published in Tamil Devotions
பவுல் ஜெபிக்கின்ற மனிதனாய் இருந்தார். அவருடைய ஜெபம் நம் எல்லாருடைய ஜெபத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவர் விசுவாசிகளுக்காக இரவும் பகலும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் தேவஜனங்கள் மீது அவருக்கிருந்த கரிசனையையும், உணர்வுகளையும் வெளிப் படுத்துகிறது. மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு அவரை மக்களுக்காக இடைவிடாமல் ஜெபிக்கத் தூண்டியது. பவுல் எழுதிய கடிதங்களில் உள்ள ஜெபங்கள் அரிய பொக்கிஷங்களாகும். அவைகள் அவருடைய இருதய வாஞ்சையை வெளிப் படுத்துகிறவைகளாகவும், நாம் பின்பற்ற வேண்டிய மாதிரிகளாகவும் உள்ளன.
எபேசியருக்கு எழுதின கடிதத்திலே பவுலின் இரண்டு பரிந்து பேசும் ஜெபங் களும், தனக்கான ஒரு ஜெபமும் காணப் படுகிறது. இந்த மூன்று ஜெபங்களையும் நாம் இப்பொழுது பார்க்கலாம்;.
1.பிரகாசமான மனக்கண்களுக்காக ஜெபம் (எபே 1:15-23):
எபேசியருடைய விசுவாசத்தையும், பரிசுத்த வான்கள் மேல் அவர்கள் காண்பித்த அன்பையும் (15) நினைத்தபொழுது பவுல் தேவனைத் துதிக்கவும், அவர்கள் ஆவிக் குரிய சில உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவனிடத்தில் அவர்க ளுக்காக ஜெபிக்கவும் ஆரம்பிக்கிறார் (15,16).
ஜெபக் குறிப்புகள்:
>தேவனை அறிந்துகொள்ள ஞானத்தை யும் தெளிவையும் அளிக்கிற ஆவியைப் பெற்றுக் கொள்ள (17)
>அழைப்பின் நம்பிக்கையைப் புரிந்து கொள்ள மனக்கண்கள் பிரகாசிக்கப்பட (18,19)
>பரிசுத்தவான்களிடத்தில் தேவனுக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று அறிந்துகொள்ள மனக்கண்கள் பிரகா சிக்கப்பட (18,19)
>கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்ல மையையும், விசுவாசிக்கிறவர்களிடத்தில் தேவன் காண்பிக்கும் வல்லமையையும் அறிந்து கொள்ள மனக்கண்கள் பிரகா சிக்கப்பட (18,19)
இந்த ஜெபத்தின் தனித்தன்மை: பவுல் அவர்களுடைய சரீர தேவைகளுக்காக ஜெபிக்கவில்லை. கிறிஸ்துவுக்குள் அவர் கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய ஆசீர் வாதங்களைப் புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் அவர்களுக்காக ஜெபிக் கிறார். அவருடைய ஜெபக்குறிப்பிலிருக் கும் சத்தியங்களைக் குறித்த மனத் தெளிவை ஒரு விசுவாசி பெற்றுக்கொள் வானானால், இந்த உலகப் பொருட் களில் அன்பு கூறவோ, உலகப்பொருள் களுக்காக வாழவோ மாட்டான்.
2.பரிபூரணத்தை அநுபவிக்க ஜெபம் (எபே 3:14-21):
சபையைக் குறித்து அவருக்கு வெளிப் படுத்தப்பட்ட இரகசியத்தைப் பகிர்ந்து கொண்ட பிறகு (எபே 3:1-12), தான் அநுபவிக்கிற உபத்திரவங்களாலே அவர் கள் சோர்ந்து போகவேண்டாம் என்று பவுல் கேட்டுக்கொள்ளுகிறார் (13). அவர் முழங் கால்படியிட்டு இந்த ஜெபத்தை அவர் களுக்காக ஏறெடுக்கிறார். தன்னுடைய உபத்திரவங்களிலே தன்னைத் தொடர்ந்து செல்ல உதவிடும் ஆவிக்குரிய சத்தி யங்களை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறார்.
ஜெபக் குறிப்புகள்:
உபத்திரவங்களை எதிர்கொள்ள கீழ்க் கண்ட ஆவிக்குரிய சத்தியங்களை அவர் களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்று பவுல் ஜெபிக்கிறார்.
>பரிசுத்த ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட (16)
>விசுவாசத்தினாலே கிறிஸ்து அவர்கள் இருதயங்களில் வாசமாயிருப்பதினால், அன்பிலே வேரூன்றி, நிலைபெற (17)
>அறிவுக்கெட்டாத கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து கொள்ள (18,19)
>அவர்களுடைய வாழ்க்கையில் தேவ னுடைய சகல பரிபூரணத்தை அனுபவிக்க
இந்த ஜெபத்தின் தனித்தன்மை:
பாடுகள் வழியாய்க் கடந்து போகும் போது என்ன ஜெபிக்கிறோம்? பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றுதான் ஜெபிக் கிறோம். பாடுகள் வழியாய்க் கடந்து போகும் விசுவாசிகள் பாடுகள் வழியாய்க் கடந்து போவதற்குப் பலப்படுத்தப்படும் படியாய் நாம் ஜெபிப்பது கிடையாது. ஆனால் இந்த ஜெபத்தில் பாடுகள் வழியாய்க் கடந்து போகும் விசுவாசிகள் உள்ளான மனுஷனில் பலப்படவும், கிறிஸ்துவின் அன்பிலே வேரூன்றவும் பவுல் ஜெபிக்கிறார். பவுல் தேவனுடைய அன்பில் வேரூன்றப்பட்டிருக்கிறார். ஆகையால்தான் ~கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?| (ரோமர் 8:36) என்று எழுதுகிறார். தேவனுடைய அன்பு பாடு களின் வழியாய்க் கடந்து செல்ல அவருக்கு உதவி செய்தது.
3.எழுப்புதலுக்காக ஜெபம் (எபே 6:18-29):
இந்த பகுதியில் பவுல் தனக்காக மன உறுதியோடும், விழிப்போடும் ஆவியிலே சகல பரிசுத்தவான்களுக்காகவும் ஜெபிக் கும்படியாக அழைப்பு விடுக்கிறார். தொடர்ந்து தன்னுடைய ஊழியத்திற்காக ஜெபிக்க நான்கு குறிப்புகளைக் கொடுக் கிறார்.
ஜெபக் குறிப்புகள்:
>பவுலுக்கு வாக்கு கொடுக்கப்படும்படி (19,20)
>பவுல் தைரியமாய் வாயைத் திறந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க (20)
>ஊழியத்தில் பவுல் சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்க (20)
>பவுல் பேசவேண்டியபடி தைரியமாய்த் தெளிவாய்ப் பேச
இந்த ஜெபத்தின் தனித்தன்மை:
பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். சிறைச்சாலையிலும் சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்க விரும்புகிறார். இந்தச் சமயத்தில் தன்னுடைய விடுதலைக் காகவோ, தன்னுடைய பாடுகளைத் தாங்குவதற்குப் பெலன் கொடுக்கப்படும் படியோ ஜெபிக்கும்படி பவுல் கேட்க வில்லை. தான் கட்டப்பட்ட நிலையில் செய்யும் ஊழியம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஜெபிக்கச் சொல்லுகிறார்.
நாம் ஊழியர்களுக்காவும், ஊழியங்க ளுக்காவும் ஜெபிக்கிற குறிப்புகள் பவுலின் குறிப்புகளுக்கு முரண்பட்டதாக இருக்கிறதா? நாம் பணத்திற்காக, உலகப்பிரகாரமான தேவைகளுக்காக, நல்ல உடல் சுகத் திற்காக மற்றும் பாதுகாப்பிற்காக ஜெபிக் கிறோம். பவுலின் மாதிரி ஜெபங்களை நாமும் ஜெபிப்போம்.
(Translated from True Discipleship July-August )