எதிரிகளிடம் அன்பு காட்டிய கிறிஸ்து
- Published in Tamil Devotions
இயேசு கிறிஸ்து சிலுவையில் உரைத்த ஏழு வார்த்தைகளைத் தியானிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் முக்கியமான பண்பான தனது எதிரிகளுக்காக ஜெபிக்கும் அவரு டைய அன்பு எனக்கு சவாலாயிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது உச்சரித்த முதலாம் வார்த்தை, அவர் எதிரிகளுக்காகச் செய்த ஜெபம். இந்த ஜெபம் அவருடைய நண்பர்களுக்காகச் செய்யப்படவில்லை, ஆனால் அவரை சிலுவையில் அறைந்த எதிரிகளுக்காகச் செய்யப்பட்டது.
இயேசு தன்னை அடித்து, பரியாசம் செய்தவர்களுக்காக ‘பிதாவே இவர்க ளுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று ஜெபம் செய்தார். வாரன் W வேர்ஸ்பி ((Warren W. Wiresbe) என்ற தேவ மனிதர், நமது ஆண்டவர் பின் வருமாறு ஜெபித்ததாக எழுதுகிறார். ‘கிரேக்க புதிய ஏற்பாட்டில் நமது ஆண்டவர் இந்த ஜெபத்தை மீண்டும் மீண்டும் ஜெபித்ததாக குறிக்கிறது. அவர் பல முறை ~பிதாவே இவர்களுக்கு மன்னியும்| என்று கூறியுள்ளார். சிலுவையில் அவரை கிடத்திய போதும், கைகளிலும், கால்களிலும் ஆணியால் சிலுவையில் அறைந்த போதும் ~பிதாவே இவர்களுக்கு மன்னியும்| என்று ஜெபித்தார். சிலுவையை நேராக நிமிர்த்தி அதைத் தரையிலுள்ள குழியில் நிறுத்திய போது இதே ஜெபத்தை நம்முடைய ஆண்டவர் ஜெபித்தார். வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் அவர் தொங்கும் போது மீண்டும், மீண்டும் ~பிதாவே இவர்களுக்கு மன்னியும்| என்று ஜெபித்தார்”.
பிதாவே, அவர்களை நியாயம் தீரும், பிதாவே, அவர்கள் மேல் தண்டனையை வரச் செய்யும், தேவதூதர் படையை அனுப்பி அவர்களிடமிருந்து என்னைத் தப்புவியும் என்று அவர் ஜெபித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அநேக நேரங்களில் நீங்களும் நானும் பகைவர் மீது பரத்திலிருந்து அக்கினி வந்து அழித்துப்போடும்படியாக, ‘பிதாவே, அவர்களைத் தண்டியும், வேத னைக்குள்ளாக்கும்” என்று மன்றாடுவோம். ஆனால் நமது ஆண்டவர் அன்பின் உள்ளத்தோடு, ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று ஜெபித்தார். இது ஆண்டவரின் தெய்வீக அன்பான ‘அகப்பே” (‘agape”–தெய்வத்தின் நிபந் தனையற்ற, தன்னலமில்லா அன்பைக் குறிக்கும் கிரேக்கச் சொல்) அன்பு செயல்பட்டதின் ஒரு எடுத்துக்காட்டு அல்லவா? நாம் பின்பற்ற வேண்டிய மாதிரி அல்லவா?
கிறிஸ்துவின் மாதிரி எல்லா கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பின்பற்றப்பட்டால், பிரிவினைகள், தனி நபர் உறவுகளில் உள்ள பிரச்சனைகள், நம் சபைகளிலும், குடும்பங்களிலும், மிஷினரி நிறுவனங்களிடம் இருந்து மறைந்து போகும். ஆண்டவர் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி நமது நண்பர்களிடம் மட்டுமல்லாமல் நமது பகைவர்களிடமும் தெய்வீக அன்பைக் காண்பிக்க உதவி செய்வாராக.