ஜெபத்தின் உள் அடக்கங்கள்
- Published in Tamil Devotions
சில மாதங்களுக்கு முன் நான் இரயிலில் ஹவுராவுக்குப் பயணம் செய்தபோது, ஒரு வயது முதிர்ந்தவர் என்னோடு பயணம் செய்தார். அவர் சிறிய மணிகள் கொண்ட நீண்ட சங்கிலியை வைத்துக்கொண்டு என் அருகில் அமர்ந்திருந்தார். அந்தச் சங்கிலியில் இருந்த மணிகளை நகர்த்திக் கொண்டிருந்தார். ஒரு மணியிலிருந்து அடுத்த மணிக்கு நகர்த்தும் போது அவர் தெய்வத்திடம் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
சாயங்காலத்திலே ஒரு இரயில் நிலையத்தை அடைந்தோம். இரயில் நிலைய நடைமேடையை அவர்கள் கழுவிவிட்டு ஆராதனைக்காக வரிசையில் நின்றனர். அந்த முதியவர் ஒரு திசை காட்டும் கருவியை எடுத்து ஆராதிக்கும் திசையைக் கண்டுபிடித்து, அதன் பின் குழுவாக அவர்கள் ஆராதித்தனர். இரயிலின் காவலன் (Guard) அந்தக் குழு ஆராதனையை முடித்துவிட்டு இரயிலில் ஏறும் வரை இரயிலை நிறுத்தி வைத்திருந்தார். அவர்கள் செய்யும் ஜெபத்தையும், ஆராதனையையும், முறையாகவும் ஒழுங்காகவும் செய்தனர். எதைப் பற்றியும், எவரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் ஜெபத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கும் அடிப்படைவாதிகள்.
அநேகக் கிறிஸ்தவர்கள் முறையாகவும், ஒழுங்காகவும் ஆண்டவரிடம் ஜெபிப்பதில்லை. அவர்கள் இலட்சியத்தோடும், முறையாகவும் ஜெபம் செய்வதில்லை. சிலர் ஜெபத்தில் கவனம் செலுத்தாமலும், ஜெபத்திற்காக அதிக நேரம் செலவு செய்தாலும் உண்மையில் ஜெபிப்பதில்லை. நாம் முறையாக ஜெபம் செய்ய ஜெபத்தின் எல்லாப் பாகங்களும் இருக்குமாறு ஜெபத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
1.ஜெபத்தின் ஐந்து பாகங்கள்:
பொதுவாக ஜெபத்தில் பின்வரும் ஐந்து பாகங்கள் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்த ஐந்து பகுதிகளை PACTS என சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
P-Praise–துதித்தல், A-Adoration–ஆராதித்தல், C -Confession –பாவத்தை அறிக்கையிடுதல், T- Thanksgiving –நன்றி செலுத்துதல், S-Supplication – வேண்டுதல் செய்தல் நமது தனிப்பட்ட ஜெபம் இந்த ஐந்து பாகங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் PACT என்றால் ஒப்பந்தம் என்று பொருள். நாமும் இந்த ஐந்து பாகங்களையும் கொண்ட ஜெபத்தை செய்ய தேவனோடு ஒப்பந்தம் செய்வோமாக.<br>
a.துதித்தல் (Praise): துதித்தல் தேவனுடைய மேன்மையையும், சுபாவத்தையும், அவரின் பண்புகளையும் புகழ்ந்து போற்றுவதின் வெளிப்பாடு. ‘நான் பிரமிக் கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங் 139:14).
b.ஆராதித்தல் (Adoration): பயபக்தியுடன் ஆராதிப்பது என்பது தேவனுடைய ஆளுகையை ஒப்புக்கொண்டு, அவரிடம் நாம் அன்புகூறுகிறோம் என்று கூறுவதாகும். ஆகவே இது தேவன் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடு ஆகும். ‘இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோ ருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”(பிலி 2:10,11).
c.பாவத்தை அறிக்கையிடல் (Confession): நாம் பாவம் செய்தோம் என்று ஒப்புக்கொண்டு தேவனிடம் மன்னிப்பு கேட்பதே பாவ அறிக்கை. தினமும் நாம் பாவம் செய்கிறோம். அந்தப் பாவங்கள் அறிக்கையிடப்பட்டு, மன்னிக்கப்பட்டு, மறக்கப்பட வேண்டும். பாவ அறிக்கை செய்த பின் பாவம் செய்ததற்கான காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்து அந்தப் பாவத்தை மேற்கொள்ள தேவனுடைய உதவியை நாடுவது மிக முக்கியம். ‘தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும் போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம் முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.”(சங் 51:1-4).
d.நன்றி செலுத்துதல் (Thanksgiving) :தேவன் நமக்குச் செய்த எல்லாவற் றிற்காகவும், நமக்குக் கொடுத்த யாவற்றிற்காகவும், எல்லா நன்மைக ளுக்காகவும் அவருக்கு நன்றி கூறவேண்டும். ‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத் திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” (1தெச 5:18).
e.வேண்டுதல் செய்தல் (Supplication): ரெவல் என்ற சுருக்கமான வேதாகம அகராதி வேண்டுதல் செய்தலை ஒரு குறிப்பிட்ட தேவைக்காக தேவனிடம் திட்டமான விண்ணப்பம் செய்தல் என்று வரையறுக்கிறது. ஆகவே தேவனிடம் நாம் செய்யும் விண்ணப்பங்கள் எல்லாம் வேண்டுதலாகும். ‘நீங்கள் ஒன்றுக் குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலி 4:6).
2.இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் உள்ள பாகங்கள்:
சீஷர்கள் இயேசுவிடம் ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கக் கேட்டபோது, இயேசு கிறிஸ்து அவர்களுக்கு ஜெபம் ஒன்றைக் கற்றுக்கொடுத்தார். (மத் 6:9-13). அதில் நான்கு ஜெபத்தின் பாகங்கள் உள்ளன. அவை,
P-Praise –துதித்தல்- ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”
A-Adoration –ஆராதித்தல்-‘ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென் றைக்கும் உம்முடையவைகளே”
C- Confession – பாவத்தை அறிக்கையிடுதல்-‘எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்”
T-Thanksgiving– வேண்டுதல் செய்தல்-‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்மு டைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களைச் சோதனைக்குட்படப ;பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”
இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் உள்ள வேண்டுதல் நான்கு விண்ணப்பங்களைக் கொண்டது. நான்கு விண்ணப்பங்களில் ஒரே ஒரு விண்ணப்பம்தான் சரீரத் தேவைக்கான விண்ணப்பம். (ஆகாரம் அடிப்படைத் தேவை). மற்ற விண்ணப்பங்கள் ஆவிக்குரிய தேவைகளுக்கான விண்ணப்பங்கள். இந்த ஜெபம் நம்முடைய வேண்டுதல்களில் ஆவிக்குரிய தேவைகளுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காண்பிக்கிறது. அநேக விசுவாசிகள் சரீரப்பிரகாரமான தேவை களுக்காகத்தான் அதிகம் வேண்டுதல் செய்கிறார்கள் என்பது ஒரு சோகமான குறிப்பு.
3.ஜெப நாட் குறிப்பை தயார் செய்தல்: முறையாக ஜெபிக்காமலும், ஜெபக் குறிப்புகளை வைத்து ஜெபிக்காமலும் இருந்தால், இந்தக் குறிப்பை நீங்கள் உபயோகிக்கலாம். ஒரு ஜெபக் குறிப்பேடு அல்லது ஜெப நாட்குறிப்பு இவற்றை பயன்படுத்தினால் உங்கள் ஜெபம் முறையாகவும், ஒழுங்காகவும் மாறும். ஜெபக் குறிப்புகள் எழுதினால் கருத்தோடு ஜெபிக்கவும், எல்லாக் குறிப்புகளையும் மறக்காமல் ஜெபிக்க உதவும். அந்த ஜெபக் குறிப்பேட்டில் நான்கு பிரிவுகளை வைத்துக்கொள்ளலாம். முதல் பிரிவில், தேவனை புகழ்ந்து போற்றும், ஆராதிக்கும் குறிப்புகளும், வேதவசனங்களும் இருந்தால் தேவனைப் போற்றவும், ஆராதிக்கவும் பயன்படும். இரண்டாம் பிரிவு நன்றி கூறும் குறிப்புகளை வைத்துக்கொள்ளலாம். மூன்றாம் பிரிவு, வேண்டுதல் குறிப்புகள். அதை மேலும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல் பிரிவு, தனிப்பட்ட மற்றும் குடும்ப குறிப்புகளையும், இரண்டாம் பிரிவு ஊழியங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் உள்ள ஜெபக்குறிப்புகளையும் குறித்துக்கொள்ளலாம்.
நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம், ஆனால் நாம் முறையாகவும் ஊக்கமாகவும் ஜெபித்தால், தேவன் அசாதாரணமான காரியங்களைச் செய் வார். ‘நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக் கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனா யிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.” (யாக் 5:16-18).
(Dr. C Barnabas, Translated from True Discipleship October 1999)