கனவு காண்பவர்கள் இன்று தேவையா?

By C Barnabas

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பிரதேசத்தை என்னுடைய நண்பனோடு சென்று பார்த்தேன். அந்த மலைகளில் கிறிஸ்தவர்களே அப்போது இல்லை. என்னுடைய நண்பன் என்னை அந்த மலைகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றார். ‘இந்த மலைகளில் தேவனை ஆராதிக் கும் மக்கள் கூட்டங்கள் எழும்பும் என்று தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்துள்ளார்” என்று ஒரு சில மலைகளைக் காண்பித்து என்னுடைய நண்பன் என்னிடம் கூறினார். அச்சமயம் சுவிசேஷத்தை அறி விக்க அனுப்பப்பட்ட ஒரு தம்பதியரையும், ஒரு மிஷனரியையும் தவிர அங்கு கிறிஸ்த வர்களோ, சபைகளோ இல்லை. நான் என்னுடைய நண்பனோடு ஜெபித்து விட்டுத் திரும்பினேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் என்னை அந்த மலைகளுக்கு ஒரு திரைப் படம் காண்பிக்க அழைத்திருந்தார். நாங்கள் ஒரு குழவாகச் சென்று ‘கருணாமூர்த்தி” என்ற படத்தை ஒரு வாரம் அந்த மலைகளிலிருந்த குடியிருப்புகளில் காண்பித்து விட்டுத் திரும்பி னோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக அதே மலைகளைக் காணச் சென்றேன். அந்த ஞாயிறு ஆராதனையில் என் நண்பன் என்னைப் பிரசங்கிக்க அழைத்திருந்தார். நான் ஒரு சில கிறிஸ்தவர்கள் தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். ஆனால் ஆச்சரியப்படும் வண்ணம் நாற்பதிற் கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதைக் கண்டேன். தேவன் என் நண்பனின் முயற்சியை ஆசீர்வதித்து ஒரு ஆராதிக்கும் சபையை எழுப்பி அவருடைய தரிசனத்தைப் பூர்த்தி செய்தார். இதைத் தான் தேவன் உங்கள் மூலமாகவும் செய்ய விரும் புகிறார். அநேகத் தேவைகளைக் கொண்ட பரந்த நாடு இந்தியா. தேவன் இந்த மகா பெரிய தேசத்தைக் குறித்துக் கரிசனையுடையவராய் பல வித்தியாசமான மக்களுக்குத் தரிசனங்களைப் பல விதங்களில் அளித்துள் ளார். தேவனிடத்திலிருந்து தரிசனங்கள் பெற்ற சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஏமி கார்மைக்கலும், பண்டிதர் ராமாபாயும் அநாதைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் வீடுகளை நிறுவும் தரிசனத்தைப் பெற்றார்கள். தேவன் அவர்களைச் சரியான இடத்திற்கு அனுப்பி, சரியான ஊழியரை அவர் களோடு பணியாற்ற அனுப்பி அவர்களுக்குக் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றினார். கடந்த நூற்றாண்டில் நமது நாட்டில் ஆயிரக் கணக்கான பெண் பிள்ளைகளும், பெண்களும் அவர்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

ஐடா ஸ்கடர் இந்தியாவின் மருத்துவத் தேவைகளைச் சந்திக்க ஒரு மருத்துவமனையை நிறுவும் தரிசனம் பெற்றார். மேற்கு நாடுகளில் மருத்துவக் கல்வி பயின்று பின் இந்தியாவிற்கு வந்தார். முதலில் ஒரு சிறிய மருத்துவமனையை ஆரம்பித்தார். அநேக மருத்துவர்களைப் பயிற்றுவித்து இந்தியாவின் தேவையைச் சந்திக்க தேவன் அவருக்குத் தரிசனத்தைக் கொடுத்தார். சி.எம்.சி மருத்துவ மனையை நிறுவியதன் மூலம் தேவன் அநேக மாயிரம் மருத்துவர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் பயிற்றுவிக்கும் தரிச னத்தை நிறைவேற்றினார்.

வில்லியம் கேரி இந்தியாவில் சபைகளும், ஆராதிக்கும் குழுக்களும் உருவாகும் என்று கனவு கண்டார். வேதாகமப் பள்ளியை நிறுவி, வேதாகமத்தைப் பல மொழிகளில் மொழி பெயர்ப்பதாகவும் கனவு கண்டார். தேவன் பல சபைகளை நிறுவவும், குழுக்களை அமைத்து 14 மொழிகளில் முழு வேதாகமத்தையும், 24 மொழிகளில் புதிய ஏற்பாட்டையும், 6 மொழிகளில் வேதாகமப் புத்தகங்களையும் மொழிபெயர்க்க உதவி, அவருடைய கனவை நனவாக்கினார். அவர் வேதாகமக் கல்லூரியை நிறுவினார். இந்தியாவில் அந்தக் கல்லூரியே வேதாகமப் பயிற்சி களுக்கு மையமாக விளங்குகிறது.

தென் இந்திய மிஷனரிகள் பீகாரில் உள்ள மால்டோவில் சபைகளை நாட்ட தரிசனம் பெற்று தியாகத்தோடு பல ஆண்டுகள் உழைத்தனர். சில மிஷனரிகள் மலேரியா மற்றும் கொடிய நோய்களால் தங்கள் உயிரை இழந்தனர். ஆனால் தங்கள் தரிச னத்தை இழக்காமல் பலர் தொடர்ந்து ஊழியம் செய்தனர். இப்போது அதன் விளைவாக நூற்றுக்கணக்கான சபைகள் மால்ட்டோ மக்கள் மத்தியில் உள்ளது. தேவன் மிஷனரி களின் தரிசனத்தை நிறைவேற்றினார்.
அன்பு சகோதர, சகோதரியே உனக்கு தேவன் இந்தத் தேவைமிக்க நாட்டைக் குறித்துக் கொடுத்த தரிசனம் என்ன? தேவன் தரிசனத்தைக் கொடுத்து உன் மூலமாக அதை நிறைவேற்ற வல்லவர். நீ தேவனுடைய பாதத்தில் காத்திருந்து, அவர் கொடுக்கும் தரிசனத்தைப் பெற்று இந்தியாவின் தேவைகளைச் சந்திப்பாயா?
மத்தேயு 9:37,38 – ‘அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்”

(Dr. C Barnabas, Translated from True Discipleship May-June 2000)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment