மாதிரி கிறிஸ்தவ குடும்பம்
- Published in Tamil Devotions
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி, ‘இப்போது நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருப்பதன் முக்கிய காரணம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட தம்பதியரின் ஜெபம், தொடர் சந்திப்பும், ஆலோசனையுமே” என்று கூறினாள். அந்த விசுவாசத் தம்பதியர் பேராசிரியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களுடன் நேரம் செலவளித்தனர். அந்தப் பேராசிரியரின் வீட்டில் ஜெபக்கூட்டங்களையும், வேத ஆய்வுகளையும் நடத்தினர். கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அந்தத் தம்பதியரின் ஜெபத்துடன்கூடிய அர்ப்பணிப்பி னால் பேராசிரியரையும் அவரின் மனைவியையும் தேவன் ஆழமாகத் தொட்டார். அந்தக் கூட்டங்கள் ஒன்றில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் வேலையோடுகூட ஊழியத்திலும் ஈடுபட்டார்கள். இப்பொழுது அவர்கள் முழு நேர ஊழியத்தில் இருக்கிறார்கள்.
அர்ப்பணத்தோடு தேவனுடைய ஊழியத்தில் குடும்பமாக ஈடுபடும் தம்பதியர் இன்று தேவை. அர்ப்பணத்தோடும், ஜெபத்தோடும், தியாகத்தோடும் ஈடுபடும் குடும்பங்கள் மூலமே நமது தேசத்தின் தேவையை சந்திக்கும் தலைவர்களை உருவாக்க முடியும். வேதாகமத்தில் நாம் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவின் அhப்;பணிக்கப்பட்ட குடும்ப வாழ்வைக் குறித்து வாசிக்கிறோம். அவர்கள் அப்பொல்லோவை ஒரு தேவ மனிதனாகப் போதித்து எழுப்பினர். பவுலுக்கு ஐக்கியம் கொடுத்த பிரிஸ்கில்லா, ஆக்கில்லாவின் குடும்ப வாழ்க்கையையும், ஊழியங்களையும் ஆய்வு செய்து, மாதிரி குடும்பத்தின் பண்புகளை அறிந்து கொள்ளலாம். ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவைப்பற்றி வேதாகமத்தில் ஆறு இடங்களில் குறிப்புகள் உள்ளன. எல்லா இடங்களிலும் இருவரின் பெயரும் சேர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்றாக ஈடுபட்டதை இது குறிக்கிறது. பொதுவாகக் கணவனின் பெயரை முதலாவதாக எழுதுவது வழக்கம். ஆனால் பிரிஸ்கில்லாவின் பெயர் நான்கு இடங்களில் முதலாவதாக எழுதப்பட்டுள்ளது. அவள் உயர் குடியில் பிறந்து, ஆக்கிலாவைவிடத் திறமை வாய்ந்தவளாக இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. வித்தியாசங் கள் இருந்தாலும் பிரிஸ்கில்லா தன் கணவனை நேசித்தாள், ஆக்கில்லா தனது மனைவியை சமமாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் ஊழியத்தில் கூட்டாளிகளாக ஈடுபட்டதின் மூலம் இந்த உண்மை தெரிகிறது. இந்த மாதிரி குடும்பத்தின் மூலம் பின்வரும் பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
1. இடம் மாற்றம் அடைந்த குடும்பம், ஆனால் ஏமாற்றம் அடைந்த குடும்பமல்ல:
ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவின் குடும்பம் இட மாற்றங்களையும் ஏமாற்றங்களை யும் சந்தித்தது. ஆனால் அவைகள் ஊழியத்தில் ஈடுபடத் தடையாக விளங் கவில்லை. அவர்கள் ரோமாபுரியில் முதலில் குடியிருந்தார்கள். ஆனால் கிலவுதியுராயனால் ரோமாபுரியிலிருந்து கொரிந்துவுக்கு கட்டாயத்தினால் செல்ல வேண்டியதாயிற்று (அப் 18:2). இந்த இடையூறுகள் மத்தியிலும் அவர்களுடைய வீடு திறந்த வீடாக இருந்தது. அவர்கள் பவுலைத் தங்களுடன் தங்கியிருக்க அழைத்தனர் (அப் 18:3). அவர்கள் இடம்பெயர்க்கப்பட்ட ஏமாற் றங்களைச் சந்தித்தாலும் ஊக்கத்தை இழக்கவில்லை. அவர்கள் ஒரு இடத்திலி ருந்து மற்றொரு இடத்திற்குப் போகத் தயாராக இருந்தனர் என்று வேதாகமம் கூறுகிறது. எல்லா இடங்களிலும் அவர் கள் குடும்பமாக ஊழியத்தில் ஈடுபட்ட னர். கொரிந்துவிலிருந்து எபேசுவிற்குச் சென்றனர் (அப் 18:18). பின் ரோமா புரிக்குச்; சென்றனர் (ரோமர் 16:2). பின்பு எபேசுவிற்குத் திரும்பி வந்தனர் (2தீமோ 4:19).
2. தியாகம் செய்த குடும்பம், தன்னல முள்ள குடும்பமல்ல:
ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் ஊழியத்திற்காகவும், தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் பல அபாயங்களைச் சந்திக்கத் துணிந்தனர். ரோமர் 16:3,4ல் ‘அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்று தங்கள் வாழ்க்கையை விசுவாசிகளுக்காகவும், ஊழி யத்திற்காகவும் கிரயம் செய்யும் குடும் பங்கள் தேவை.
3. உபசரணையுள்ள திறந்த குடும்பம், அடைக்கப்பட்ட குடும்பமல்ல:
அவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால் தேவனை சேவிப்பவர்களை நேசித்து, அவர்களுக்கு ஐக்கியம் அளித்து, அவர்களைத் தங்கள் வீட்டில் ஏற்றுக ;கொண்டனர். பரிசுத்த பவுல் அவர்கள் வீட்டில் தங்கினார். (அப் 18:2). அவர்கள் வீட்டில் சபை கூடி வந்தது (1கொரி 16:9). எல்லாக் கிறிஸ்தவ குடும்பங்களும் இந்தக் குடும்பத்தைப்போல உபசரணையும், திறந்த கதவுகளையும் கொண்ட குடும் பமாக இருந்தால் அநேக ஊழியங்கள் செழித்து வளரும்.
4. கட்டுகின்ற குடும்பம், சிதறடிக்கும் குடும்பமல்ல:
ஆக்கிலாவும், பிரிஸ்கில்லாவும் ஊழி யத்தில் தனிப்பட்ட நபராய் ஈடுபடு வோரைக் கட்டினர். அப்பொல்லோ வைக் கண்டு அவரிடமிருந்த திறமையைக் கண்டு அவருக்குத் தேவனுடைய வழியைச் சரியாகக் கற்றுக் கொடுத்தனர் (அப் 18:26). அவருக்குப் போதக ஊழியத்திற்குத் தேவையான திறமைகளும், தாலந்துகளும் இருப்பதைப் புரிந்துகொண்டு அவரை உருவாக்கினர். பவுல் அவர்களைப் போலக் கூடாரத்தொழிலில் ஈடுபட்டதால், அவர்களுடன் வீட்டில் தங்கினார். தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்துப் பவுலின் ஊழியத்தைத் தாங்கினர்.
5. அவர்கள் கூட்டாளிகளாக வேலை செய்தனர், தனிமையாக அல்ல:
அவர்களின் ஈடுபாட்டைக் கவனித்த ஒருவர், அவர்கள் ஒன்றாகப் பணி செய்தனர், ஒன்றாக வரவேற்றனர், ஒன்றாகத் தேவனை ஆராதித்தனர் என்று எழுதியுள்ளார். இருவரும் ஒரே நோக்கத்துடன் வாழ்ந்து, ஒற்றுமையா கப் பணி செய்தனர். அவர்கள் நல்ல கூட்டாளிகளாக ஒன்றாக ஊழியம் செய்தனர். ஆக்கிலாவையும், பிரிஸ்கில் லாவையும் போல கூட்டாளிகளாகப் பணி செய்து கிறிஸ்தவ தலைவர் களைத் தாங்கி எழுப்பும் குடும்பங்கள் இன்று தேவை.
ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவின் குடும் பம் நமக்கு ஒரு மாதிரி குடும்பம். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை எனக்குக் காட்டுகின்றனர். அவர்கள் வீட்டில் தேவனுடைய வார்த்தையும், வார்த்தை யைக் கொடுத்த தேவனும் கனம்பண் ணப்பட்டார்கள். வெறும் சொற்களில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும், பணி யிலும் கனம்பண்ணப்பட்டார். அவர்கள் எனக்கு ஒரு மாதிரியான, ஊக்கம ளிக்கும் குடும்பமாக விளங்குகின்றனர். இன்றைய உலகத்தில் திடமான கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லை என்ற வருத்தமிக்க உண்மையை நினைவூட்டு கிறது என்று கிரேகு பன்ஸ்டன் (Garg Funston) சரியாக எழுதியுள்ளார்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Agust 1995)