கிறிஸ்தவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்?
- Published in Tamil Devotions
ஒரு வாலிபப்பெண் அவளுடைய ஆலயத்தில் நடைபெற்ற சுவிசேஷ கூட் டத்தில் பங்குபெற்று இரட்சிக்கப்பட்டாள். அவள் முழுவதும் மாற்றப்பட்டாள். அவள் ஆண்டவரை நேசித்ததால் அவருடைய விலைமதிப்பற்ற அற்புதமான இரட்சிப்புக்காக ஆண்டவருக்கு நன்றியுள்ளவளாக இருந்தாள். ஆராதனை யில் பங்குபெறும்போதெல்லாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அவள் பெற்ற மீட்புக்காகவும், நித்திய ஜீவனுக்காகவும் துதித்து நன்றி கூறினாள். ஆண்டவருடைய ஊழியத்திற்குத் தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தாள். தனது அன்பின் அடையாளமாகவும், தான் அனுபவித்த மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்காக நன்றியுடன் ஆண்டவருக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அவள் மிகவும் ஏழை யாக இருந்ததால், ஆணடவருக்குக் கொடுக்க இயலாதவளாக இருந்தாள்.
ஒரு ஞாயிறு காலை அவள் ஆண்டவரிடம் தான் எதைக் கொடுக்க வேண்டும் என்று காட்டும்படி ஜெபம் செய்தாள். அவளுடைய அருமையான நாய் ‘பிளாக்கி’ அவள் அருகில் வந்து அவளுடைய காலை நக்கியது. அவளுடைய தோழி ‘பிளாக்கி’யை அவளுக்குப் பரிசாகக் கொடுத்திருந்தாள். அவள் ‘பிளாக்கி’யை நேசித்தாள். அதனுடன் அதிக நேரம் செலவு செய்தாள். இரவில் ‘பிளாக்கி’ அவளோடு தூங்குவது வழக்கம். அது அவளுடைய செல்லப் பிராணி. அடுத்த தெருவில் வசித்த அவளுடைய மாமா அவளிடம் 1000 ரூபாய்க்கு பிளாக்கியை விலை பேசினார். ஆனால் அவள் பிளாக்கியை நேசித்ததாலும், பிளாக்கியோடே இருக்க விரும்பிய தாலும் மறுத்துவிடடாள்.
அன்று ஜெபம் செய்யும்போது பிளாக்கியை விற்று, அந்தப் பணத்தை தேவனுக்குக் கொடுக்க உணர்த்தப்பட்டாள். அவள் பிளாக்கியை மிகவும் நேசித்ததால், பிரிவை எண்ணி அவள் கண் கலங்கினாள். ஆண்டவர் தன்னை மீட்க செலுத்தின கிரயத்தை எண்ணிப் பார்த்தாள். ஆகவே பிளாக்கியை எடுத்துச் சென்று, தன் மாமாவிடம் விற்றுவிட்டாள்.
அவள் வீடு திரும்பியபோது, பிளாக்கி வீட்டில் இல்லாதது ஒரு பெரிய இழப்பாகத் தோன்றியது. பிளாக்கி வீட்டில் இல்லாதபோதும் தேவன் தனக்குச் செய்தவைகளுக்கு நன்றியாக அவருக்குக் கொடுப்பதற்கு 1000ரூபாய் தன் கையில் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்று மாலை ஞாயிறு ஆராதனையில் பங்குபெற்றபோது போதகர் 2கொரி 8:9ஐ வாசித்தார். ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர் களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தி னாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” ஆண்டவர் மனிதனை மீட்க சிலுவையில் செலுத்திய விலைக்கிரயத்தையும், பட்ட பாடுகளையும் போதகர் பகிர்ந்துகொண்டபோது, ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, தனது நாயை விற்று 1000ரூபாயை ஒரு மிஷனரியின் ஒரு மாத சம்பளமாகக் கொடுக்கும்படி தனக்கு உதவிசெய்த ஆண்டவ ருக்கு நன்றி செலுத்தினாள்.
இந்த வாலிபப் பெண்ணைப் போல, கிறிஸ்தவர்கள் ஆண்டவரிடம் பெற்ற காரியங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொடுக்கிறார்கள். ஆண்டவர் ஐசுவரியமுள்ளவர். பரிசுத்தமானவர். ஆனால் நம்மை மீட்க, ஏழை ரூபமெடுத்து, தன் மகிமையை விட்டு, இலவசமாக நமக்கு இரட்சிப்பை அளிக்க, தம்மைத் தாமே சிலுவையில் பலியாகக் கொடுத்தார். இது அவர் நம் மேல் வைத்த அன்பைக் காட்டுகிறது. கிறிஸ்தவ கொடுக்கும் பண்பிற்கு வேதாகமம் பல காரணங்களைத் தருகிறது. நாம் சிலவற்றைப் பார்ப்போம்.
அது பெருக வேண்டிய தேவ கிருபை:‘விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவி லும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.” (2கொரி 8:7).
அது சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலி: ‘எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப் பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.” (பிலி 4:18).
அது பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்க்கும்: ‘பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத் 6:19-21).
அது தேவனின் ஆசீர்வாதத்தின் திறவுகோல்:‘விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.” (2கொரி 9:10).
அது தேவ மனிதர்களின் தேவையைச் சந்திக்கிறது: ‘திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.” (கலா 6:6).
அது ஆண்டவருக்கு நம் நன்றியை விளங்கப்பண்ணுகிறது: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரி யவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” (2கொரி 8:9).
அது தேவன் மீதும் மற்றவர்கள் மீதும் இருக்கும் நமது அன்பைக் காண்பிக்கிறது:‘ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக் குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” (2கொரி 8:24).
அது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருகிறது: ‘தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி” (2கொரி 9:13).
அது தேவனுடைய கட்டளை:‘கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர் களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.”(லூக் 6:38).
அது நித்திய முதலீடு: ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத் திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.” (1தீமோ 6:17,19).
வாங்குவதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்: ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.” (அப் 20:35).
(Dr. C Barnabas, Translated from True Discipleship August 1997)