குப்பைகளைத் தூக்கி வீசுங்கள் – தீங்கு விளைவிக்கும் இச்சை
- Published in Tamil Devotions
ஒரு அரசாங்க அதிகாரி ஒரு பெரிய மாளிகையில் வாழ்ந்தார். அவருடைய நண்பர்களை அவருடைய வீட்டிற்கு அழைத்து உபசரணை செய்வதுண்டு. அவர் தன் வீட்டிலுள்ள தேவையற்ற, உபயோகிக்காத பொருட்களைத் தூக்கி எறியும் பழக்கம் இல்லாதவராக இருந்தார். அந்த தேவையற்ற குப்பையை பெட்டிகளிலும், பரணிலும், அறைகளின் மூலைகளிலும் சேர்த்து வைத்திருந்தார். எந்தத் தேவையற்ற பொருளையும் தூக்கி எறிய மனமற்றவராக இருந்தார். அவருக்கு இந்தப் பொருட்கள் விலைமதிப்புள்ளவைகளாவும், முக்கியமானவைகளாகவும் இருந்தன. ஆனால் அந்தக் குப்பை அவர் அந்த வீட்டில் வசதியாகவும், சந்தோஷமாகவும் வாழுவதற்குத் தடையாக இருந்தன. மற்றும் அவருடைய நண்பர்கள் அவரைப் பார்க்க வருவதையும் தடை செய்தது.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சில சமயங்களில் இந்த அதிகாரியைப் போல சில தேவையற்றவைகளை நாம் தூக்கி எறியாமல் வைத்துக் கொண்டு வாழுகிறோம். ‘உலக இச்சைகள்” என்ற தேவையற்றவைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கஷ்டமானதாகவும், கனியற்றதாகவும் மாற்றும். வேதாகமம், ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி (1பேதுரு 2:11) வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
1.இச்சை என்பது என்ன?
வேத அறிஞர்கள் இச்சையை ‘தீய ஆசைகள்” என்று விளக்குகின்றனர். வேதாகமத்தில் இச்சை என்ற வார்த்தைக்கு உபயோகப்படுத்தியிருக்கும் எபிரெய வார்த்தை ‘நீப்ஸ்”(nephesh). அதன் அர்த்தம் ‘அடங்காத மற்றும் பலமான ஆசை”. (யாத் 15:9, சங் 78:18). புதிய ஏற்பாட்டில் இச்சைக்காக பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை ‘எபிதுமியா”(epithumia). இதனுடைய அர்த்தம் ‘பலமான ஆசை” மற்றும் ‘பாலியல் ஆர்வம்”(எபே 2:3, 1பேதுரு 2:11). பவுல் கிறிஸ்துவோடு இருக்க விரும்புவது குறித்த விருப்பத்தின் சூழலில் உபயோகப்படுத்தப்படுகிறது.(பிலி 1:23). 1தெச 2:17ல் அவருடைய ஊழியத்தால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக் காண வேண்டும் என்ற வாஞ்சையைக் குறிக்கிறது. சாம்பர்ஸ் (Chambers) அகராதி இச்சையின் விளக்கத்தை, ‘ஏங்குதல்”, ‘அபகரித்தல்”, ‘பாலியல் ஆசை” மற்றும் ‘தரமற்ற பாலியல் ஆசை” என்று கூறுகிறது.
2.இச்சையின் தோற்றம்:
உலகத்திலிருந்து:’மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைக ளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1யோவான் 2:16).
மாம்சத்திலிருந்து:’அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத் தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” (யாக் 1:14,15).
இருதயத்திலிருந்து:’இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.” (மத் 15:19,20).
சாத்தானிடத்திலிருந்து: ‘சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்;”. ‘அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.” (யோவான் 13:2,27).
3.இச்சையின் தீங்கான விளைவுகள்:
அது கெடுதல் செய்கிற மற்றும் மோசம் போக்கும்:‘அந்தப்படி, முந்தின நடக் கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு” (எபே 4:22).
அது மதிகேடும் சேதமுமானது:’ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனை யிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”(1தீமோ 6:9).
அது மக்களைக் கெடுக்கும்:’உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.” (நீதி 6:25,26).
அது மக்களை அடிமைப்படுத்தும்:‘செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.” (நீதி 11:6).
4.இச்சையை மேற்கொள்ளும் வழிகள்:
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகி ஓடு:’பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிற வர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” (2தீமோ 2:22).
அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறு:‘நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி” (தீத்து 2:12).
இச்சையை உண்டுபண்ணுகிற அவயவங்களை அழித்துப்போடு: ‘ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” (கொலோ 3:5).
ஆவியிலே நட: ‘பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” (கலா 5:16).
(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct-Nov-1995)