முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் வாழ்தல்

By C Barnabas

சென்ற ஆண்டு ‘முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் பயிற்சி” என்ற கருப்பொருளுடைய மாநாட்டில் நான் பங்கு பெற்றேன். அந்த மாநாடு இளைஞர்களை முடிவைக் குறித்த கண்ணோட்டத்தோடு, மிஷனரி பணிக்காக பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்டது. பயிற்சி வேண்டும் என்பதற்காகப் பயிற்சி அளிக்காமல், ஒரு குறிக்கோளோடு பயிற்றுவிக்க வேண்டும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் விரும்பினர். பயிற்சியின் குறிக்கோள் பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றவர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்று வதாக இருக்க வேண்டும். மிஷனரி பயிற்சி; குறிக்கோள் இல்லாமலிருந்தால் அதன் நோக்கம் நிறைவேறாது.
இந்த மாதம் நான் உபாகமம் 32:29ஐ வாசித்தபோது இந்தக் கருப்பொருள் மறு படியும் என் நினைவிற்கு வந்தது. ‘அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமா யிருக்கும் என்றார்” (உபா 32:29). இஸ்ரவேலர் மிகவும் புத்தியில்லாதவர்களாயத்; தங்கள் முடி வைக் குறித்த கண்ணோட்டத்தில் வாழ மறுத்தனர் என்று இந்த வசனம் கூறுகிறது. அவர்கள் இந்த உலகத்திற்கு உரியவை களையே கண்டு, மறு உலகத்திற்கானவைகளைக் காணாமல் இருந்தனர். பல முறை நாமும் இந்த உலகத்தையே மையமாக வைத்து வாழ்கிறோம்.


முடிவைக் குறித்த கண்ணோட்டத்தில் வாழ்ந்த சில தேவ மனிதர்களின் மாதிரியை நாம் காணலாம்.


1. ஆபிரகாம்: ஆபிரகாமை தேவன் அவன் இருந்த இடத்தை விட்டு, புதிய தேசத்திற்குப் போகும்படி அழைத்தபோது, கீழ்ப்படிந்து தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திற்குப் போனான். அந்த தேசத்திலே பரதேசியைப்போல வாசம்பண்ணினான். ‘விசுவாசத்தினாலே அவன் வாக்குத் தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத் தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக் கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபி 11:9,10) என்று வேதம் கூறுகிறது.


2. மோசே: ‘மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க் கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்து வினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபி 11:24-26).


3. இயேசுகிறிஸ்து: இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தபோது, அவர் தமது சீஷரிடம், அவரை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரி யையை முடிப்பதே அவருடைய வாஞ்சை என்று கூறினார் (யோவான் 4:34). அவர் பாடுபட்டு எருசலேமில் கொல்லப்படுவார் என்று சீஷரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். (மத் 16:21). அவர் தேவனுடைய இராஜ்யத்தைத் தன் மனதில் கொண்டு வாழ்ந்ததால் தான் அவர் அப்படி செய்ய முடிந்தது. இயேசு பிலாத்துவிடம் ‘என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்றார் (யோவான் 18:36).


4. பவுல்: பவுல் முடிவைக் குறித்த கண் ணோட்டத்தில் வாழ்ந்தார். ‘நம்முடைய குடி யிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம் முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலி 3:20,21).


இந்த உலகத்தையும், உலகக் காரியங் களையும் குறித்த கண்ணோட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் சிலர்:


1. கேயாசி: கேயாசி எலிசாவின் வேலைக்காரன். நாகமான் கொடுத்த காணிக்கையை வாங்க மறுத்து எலிசா அவரை அனுப்பி விட்டபோது, கேயாசி நாகமானின் பணத் தையும், வஸ்திரத்தையும் இச்சித்து அதைப் பெற்றுக்கொள்ள நாகமானுக்குப் பின் ஓடினான். அவனுடைய மனச்சாட்சிக்கு விரோ தமாய் சென்று நாகமானிடம் பணத்தையும் வஸ்திரத்தையும் பெற்றுக்கொண்டான். அது மட்டுமல்ல எலிசாவிடம் பொய் சொன்னான். பணத்தின் மேலும், வஸ்திரத்தின் மேலும் இருந்த பற்றுதல் அவனுக்கு தீமையையே கொண்டு வந்தது. நாகமானின் குஷ்டரோகம் அவனையும், அவனுடைய சந்ததியையும் பற்றிக்கொள்ளும் என்ற சாபத்தை அடைந் தான் (2இராஜா 5:20-27).


2. யூதாஸ்காரியோத்து: இயேசுவின் சீஷரில் ஒருவன் யூதாஸ். அவன் பொருளாளராக இருந்து பணத்தை வைத்திருந்தான். இயேசு வின் பாதத்தை, விலையுயர்ந்த தைலத்தி னால் அபிஷேகித்த மரியாளை, அதை வீணாக்கியதாகக் கூறி கடிந்துகொண்டான். (யோவான் 12:1-11). இயேசுகிறிஸ்துவைவிட பணத்தைப் பெரிதாகக் கருதினான். அவன் இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக்கொடுத்து, நான்றுகொண்டு செத் தான்.


3. அனனியா, சப்பிராள்: அனனியாவும், சப் பிராளும் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் சொன்னார்கள். அவர்கள் நிலத்தை விற்ற பணத்தில், ஒரு பாகத்தை வைத்துக் கொண்டு, பேதுருவிடம், அனைத்தையும் கொடுத்ததாகப் பொய் சொன்னார்கள். ஆண்டவருக்கு மேலாக பணத்தின் மேல் நம்பிக்கை வைத்ததால் தங்கள் வாழ்வை இழந்தனர் (அப் 5:1-11).


4. பிலிப்பியில் இருந்த கள்ள போதகர்கள் : ‘அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவை களைச் சிந்திக்கிறார்கள்” (பிலி 3:18,19).


5. ஆகாப்: ஆகாப் பொல்லாப்பான இஸ்ரவேலரின் இராஜா. ஆகாப் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை இச்சித்து, அவனைக் கொலை செய்தான். ‘தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை” என்று 1இராஜா 21:25ல் நாம் வாசிக்கிறோம்.
‘நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டா னால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரி சத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலா னவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவை களையல்ல, மேலானவைகளையே நாடுங் கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக் குள் மறைந்திருக்கிறது” (கொலொ 3:1-3).

(Dr. C Barnabas, Translated from True Discipleship June 1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment