போராடும் ஜெபத்தின் அடிப்படை

By C Barnabas

சீனாவிற்கு மிஷனரியாக சென்ற ஹட்சன் டெய்லர் ஜெபிக்கும் மனிதனாக இருந்தார். அவர் ஜார்ஜ் முல்லரின் ஜெப வாழ்க்கையைக் குறித்து வாசித்ததுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான அனாதைகளின் தேவைகளை தேவன் முல்லரின் ஜெபத்தின் மூலமாக சந்தித்ததையும் அறிந்திருந்தார். டெய்லர் ஜெபத்தின் முக்கியத்துவத்தை விசுவாசித்து, தன்னுடைய தேவைகளுக்கும், பணியின் தேவைகளுக்கும் ஜெபிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.
டெய்லரின் குறிக்கோள், தேவனால் மனிதனை அசைக்கப் பிரயாசப்பட்டார். சீனாவில் உள்ள தேவைகளைக் குறித்து மக்களுக்கு அவர் கூறினாலும், நேரடியாக அவர்களை பணம் கொடுக்க அவர் கூறவில்லை. பணத் தேவைகளுக்கும், பணி செய்யும் பணியாளர்களின் தேவைகளுக்கும், அவர் நேரடியாக தேவனிடத்தில் மன்றாடினார். அவருடைய அறையில் சீனாவின் பன்னிரண்டு மாகாணங்களைக் கொண்ட ஒரு வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்திலுள்ள மாகாணங்களைப் பார்த்து, ஒவ்வொரு மாகாணத்திற்கும் இரண்டு பணியாட்கள் கிடைக்க வேண்டும் என்று ஜெபம்பண்ணினார். ஒரே வருடத்தில் 24 மிஷனரிகளை அனுப்பி ஆண்டவர் அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்ததுமல்லாமல், அவர் மரிக்கும் போது 849 மிஷனரிகளை அனுப்பினார்.
பணத்தேவைக்கும், பணியாளர்களுக்கும் சீனா உள்நாட்டு பணியில் (China Inland Mission), டெய்லர் விசுவாசத்தையே விதியாக வைத்திருந்தார். ‘விருப்பங்களை தேவனிடத்தில் ஜெபத்தின் வாயிலாக வெளிப்படுத்தவும், தேவன் மனிதர்களை அசைத்துத் தேவைகளைச் சந்திக்க அவர் மேல் விசுவாசமாயிருக்கவும்;” அழைத்தார்.

நமது தேவன் நமது ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கும் தேவன். நமது கோரிக்கைகளை உடனே கொடுக்கிறார். சில நேரங்களில் நமது நலனுக்காக தாமதமாகக் கொடுக்கிறார். சில நேரங்களில் நமது ஜெபத்திற்கு இல்லை என்று பதிலளிக்கிறார். ஆனால் தொடர்ந்து ஜெபிக்கும்போது, அவர் சித்தத்தின்படி கேட்டால் அவர் பதிலளிக்கிறார். அவருக்குச் சித்தமில்லை என்றால், அவர் தனது சமாதானத்தைத் தந்து அந்த பதிலை ஏற்றுக்கொள்ள உதவி செய்கிறார். ஜெபத்திற்குத் தேவையான அத்தியாவசியங்களை நாம் படிப்போம்.


பரிசுத்தத்துடனும் நீதியுடனும் ஜெபிக்க வேண்டும்: ‘அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.”(1தீமோ 2:8). ‘கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங் 34:15).


சுத்த இருதயத்துடன் ஜெபிக்க வேண்டும்: ‘என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண் டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.” (சங் 66:18,19).


விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்:  ‘நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.”(மத் 21:22). ‘அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக் 5:15).


தேவனுடைய சித்தப்படி ஜெபிக்க வேண்டும்: ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவை களைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.” (1யோவான் 5:14,15).
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும்:’நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” (யோவான் 14:13,14).


மன்னிக்கும் ஆவியோடு ஜெபிக்க வேண்டும்: ‘மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத் 6:14,15).
ஒருமனதோடு ஜெபிக்க வேண்டும்:’அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத் 18:19).


தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும்: ‘என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.” (2நாளா 7:14).


கட்டளைகளைக் கைக்கொண்டு ஜெபிக்க வேண்டும்: ‘அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” (1யோவான் 3:22).


கிறிஸ்துவில் நிலைத்திருந்து ஜெபிக்க வேண்டும்:
‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” (யோவான் 15:7).
ஜெபம் ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் முக்கிய ஒழுக்கமாயிருக்க வேண்டும். எட்வர்ட் பேசன்(Edward Payson) ஜெபத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து எழுதும்போது, ‘ஒரு ஊழியருக்கு ஜெபமே முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் ஆகும். ஜெபி, எனது சகோதரனே ஜெபி,ஜெபி, ஜெபி” என்று எழுதுகிறார்.
நாம் ஜெபிப்பதை தடைசெய்ய பிசாசு பல முயற்சிகளை மேற்கொள்ளுவான். ஏனென்றால் அவன் ஜெபத்திற்கு மட்டுமே பயப்படுவான். தேவனுடைய பணியைச் செய்யும்போது பயப்படுவதில்லை. நாம் கடினமாக உழைக்கும்போது அவன் சிரிக்கிறான். ஆனால் ஜெபிக்கும்போது நடுங்குகிறான். பெலவீனமான பரிசுத்தன் முழங்காலில் நிற்கும்போது நடுங்குகிறான் என்பதை நினைவில் கொள்ளுவோம்.

(Dr. C Barnabas, Translated from True Discipleship Jan-Feb 2006)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment