செல்வத்தைக் குறித்து சரியான மனப்பான்மை
- Published in Tamil Devotions
1.செல்வத்தை ஒருபோதும் நம்பாதே:
a.அது நிலையற்றது:
~இவ்வுலகத்திலே ஐசு வரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தை யுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மை களையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக் கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்..| (1தீமோ 6:17)
b. அது ஒருவனையும் விடுவிக்காது:
~
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசு வரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணா மல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும் படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொரு ளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே| (சங் 49:6-8).
c.அது மற்றவர்களின் இகழ்ச்சிக்கு வழி வகுக்கும்:
~
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்| (சங் 52:6,7).
2.இருதயத்தை செல்வத்தின் மீது வைக்காதே:~
ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்| (சங் 62:10).
3.செல்வம் என்றென்றும் நிலைக்காது: ~
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்| (மத் 6:19).
4.அழிவுக்கு நேராக நடத்தும் பண ஆசையை விட்டு ஓடு: ~
நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத் தையும் அடையும்படி நாடு| (1தீமோ 6:11).
5.மேலானவைகளை நாடு: ~
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்|(கொலோ 3:1,2).
6.பொருளாசை விக்கிரகாராதனை:~
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங் களை அழித்துப்போடுங்கள்| (கொலோ 3:5).
7.பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்:~
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை| (மத் 6:20)
8.செல்வம் சஞ்சலத்தைத் தரும்:~
சஞ்சலத் தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ் சப்பொருளே உத்தமம்| (நீதி 15:16).
9.செல்வம் நிலையற்றது, தற்காலிகமானது:
‘ஐசவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டு பண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்| (நீதி 23:4,5).
10.இருக்கிறவைகள் போதும் என்று எண்ண வேண்டும்:~
நீங்கள் பண ஆசையில்லா தவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே| (எபி 13:5).
11.செல்வத்திற்கு முதலிடம் கொடுக்காதே: ~
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங் கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்|(மத் 6:33).
12.உண்மையோடு பணத்தை கையாள வேண்டும்:~
வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்| (2இராஜா 12:15).
(Translated from True Discipleship July 1997)