செல்வத்தையும், ஐசுவரியத்தையும் குறிக்கும் வேதாகம போதனை

By C Barnabas

ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர் தனது மாண வர்களுக்கு செல்வந்தனையும், லாசருவை யும் பற்றிய சம்பவத்தைக் கூறினார். பணக் காரன் நரகத்தில் பட்ட வேதனையையும் லாசரு பரலோகத்தில் இருந்ததையும் மாண வர்களுக்கு விளக்கிய பின், மாணவர்களிடம் ‘பிள்ளைகளே நீங்கள் யாரைப் போல இருக்க ஆசைப்படுகிறீர்கள் – லாசருவாகவா அல்லது பணக்காரனாகவா?” என்று வினவி னார். ஒரு மாணவன் வேகமாக எழுந்து ‘நான் இந்த உலகத்தில் பணக்காரனைப் போலவும், மறுஉலகில் லாசருவைப் போல வும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறி னான்.
இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் அந்த ஞாயிறு பள்ளி மாணவனைப் போல இருக் கின்றனர். மிகுந்த ஆஸ்தி பொருளாசைக்கு வழிவகுக்கும் என்பதையும், செல்வம் வாழ்க்கையின் அடிப்படையல்ல என்கிற உண்மை யையும் அறியாமல் இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் பணக்காரராக இருக்க ஆசைப்படுகின்றனர்.
இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதித்த போது ‘ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம் பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்” (லூக்கா 12:13,15). அதன்பின் இயேசு கிறிஸ்து மதிகெட்ட ஐசுவரியவானின் உவமையை விவரித்து ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கி ஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்” (லுக்கா 12:21).
இயேசு கிறிஸ்து மக்களை இந்த உலகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதில் கவனமாக இருக்கும்படி எச்சரித்தார். ஏனென்றால் இந்த உலக பொக்கிஷங்களைச் சேர்ப்பதன் மூலமாக நாம் ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று அவர் நம்பினார். மக்களை தேவனிடத்தில் ஐசுவரியவான்களா யிருக்கும்படி அழைத்தார்.
இந்த உலக செல்வத்தையும், பணத்தையும் குறித்த போதனையை பரிசுத்த பவுல் எழுதிய 1திமோத்தேயு 6:6-19ல் இருந்து படித்துப் புரிந்துகொள்வோம்.

1.போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்: உலகத்திலேயே பெரும் ஐசுவரியவானான ராக்பெல்லரை ஒருவன் ஒருமுறை ‘;எவ்வளவு செல்வம் இருந்தால் ஒரு மனிதன் திருப்தி அடைவான்?” என்று கேட்டான். ‘இன்னும் கொஞ்சம்” என்று அவர் பதிலளித்தார். மிகுதியான செல்வம், செல்வந்தரான ராக் பெல்லரைக்கூட திருப்திப்படுத்தவில்லை. மேலும் செல்வம் வேண்டுமென்றுதான் ஆசைப் பட்டார். தனக்குண்டானவைகளில் திருப்தியற்று இருப்பதே ஒரு சாதாரண மனிதனின் மனநிலை. ஆனால் விசுவாசிகள் எந்த நிலையிலும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவபக்திூபோதுமென்கிற மனநிலை ஸ்ரீ மிகுந்த ஆதாயம் என்பதைப் போதிக்க பின்வரும் மூன்று உண்மை களைப் பவுல் 1தீமோத்தேயு 6:6-8ல் கூறுகிறார்

a.தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ண வேண்டாம்: சில விசுவாசிகள் தேவ பக்தியைக் கொண்டு செல்வத்தைச் சேர்க்க முற்படுகின்றனர். பரிசுத்த பவுல் தீமோத் தேயுவை அந்த விசுவாசிகளிடமிருந்து விலகும்படி உத்தரவிட்டார். (வச 5)


b.உலகத்திலிருந்து நாம் ஒன்றையும் கொண்டு செல்ல முடியாது: பவுல் ‘உலகத் திலே நாம் ஒன்றும் கொண்டு வந்தது மில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம்” என்று எழுதுகிறார். (வச 7).


c.உண்ணவும் உடுக்கவும் இருந்தால் திருப்தி அடைய வேண்டும்: ‘உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (வச 8)

2.செல்வந்தனாக மாற ஆசைப்படாதே: ஒரு முறை ஒரு புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரனைக் குறித்து வாசித்தேன். அவன் தங்கக்கட்டிகளைத் தனது திறமைக்குப் பரிசாகப் பெற்றான். அப்பரிசைப் பெற்றபின் தனது தாய் நாட்டிற்குக் கப்பலில் திரும் பினான். அந்தத் தங்கக்கட்டிகளைப் பாது காக்க பெல்ட்டில் (டிநடவ) வைத்துத் தன் இடுப்பில் கட்டிக்கொண்டான். வழியிலே அந்தக் கப்பல் ஒரு புயலினால் மூழ்கத் துவங்கியது. ஆகவே கடலுக்குள் குதித் தான். அந்தத் தங்கக் கட்டிகளின் சுமையால் நீந்த முடியாமல் கடலுக்குள் விழுந்து இறந்து போனான். அந்த வீரன் நேசித்த தங்கக்கட்டிகள் அவனை மூழ்கச் செய்தன. விசுவாசிகள் ஐசுவரியவான்களாக ஆசைப் படாமல், செல்வத்தை விட்டு ஓடும்படி வேதாகமம் போதிக்கிறது. அதற்குப் பின் வரும் மூன்று காரணங்கள் கூறப்படுகிறது.


a.ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் விழுகின்ற னர் (வச 9).

b. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதி கேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் (வச 9).


c..பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது: நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தை யும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு (வச 10,11).

3.நிலையற்ற செல்வத்தை நம்பாதே: வேதா கமம் பணக்காரர்களுக்கு எதிராளியல்ல. ஆபிரகாம், யோபு மற்றும் சாலொமோன் ஐசுவரியவான்களாக இருந்தனர். ஐசுவரிய வான்கள் தங்கள் நம்பிக்கையை நிலையற்ற பணத்தின் மேல் வைக்காமல் பின்வருப வற்றைச் செய்யும்படி வேதம் போதிக்கிறது.

a.ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந் தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாம லும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும் (வச 17).


b.நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசு வரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக் கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமா யிருக்கவும் (வச 18).


c.நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு (வச 19).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment