தேசத்திற்கான ஜெபத்திற்கு பதில்கள்

By C Barnabas
1.சீர்திருத்தத்திற்குப் பின்:
1558ல் ராணி எலிசபெத் பிரிட்டனின் ராணியாக நியமிக் கப்பட்டபோது பிரிட்டனில் இருந்த கிறிஸ்தவர்கள் மகிழ்ந்தனர். ஏனெனில் அவள் கொடூரமான மேரிக்குப் பதிலாக நியமிக் கப்பட்டாள். மேரி கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி பல நூறு கிறிஸ்தவர்களைக் கம்பத்தில் கட்டி எரித்துக் கொன்றாள். ராணி எலிசபெத் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக தேவனை ஆராதிக்க அனுமதி கொடுத்தாள். இந்த சுதந்திரம் ஸ்பானிஷ் மன்னனால் வெறுக்கப்பட்டது. ஆகவே பிரிட்டனுக்கு விரோதமாகப் படையெடுத்து அந்த தேசத்தை யுத்தத்தின் மூலமாக முறியடிக்க நினைத்தான். சுமார் 160 கப்பல்களும் 30000 ஆயுதங்களும், மாலுமி களும் காலேஸ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கால்வாயைக் கடக்கக் கூடினர். அது ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருந்தது. ஸ்பானிஷ் மக்கள் அதை ‘பெரிய அர்மடா”- வெல்ல முடியாத சக்தி என்று அழைத் தனர். பிரிட்டிஷ் மக்கள் விடுதலைக்காக ஜெபிக்கத் தொடங்கினர். எ.எம். ரெம்விக் என்ற வரலாற்று ஆசிரியர் ராணியும் மக்க ளும் செய்த ஜெபத்திற்குக் கிடைத்த பதிலைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகி றார். ‘கலாசில் ஒரு பலத்த ராணுவம் இங்கிலாந்துக்குச் செல்ல ஆயத்தமாயிருந்தது. ஆங்கிலேய கடற்படை அதிகாரிக ளின் திறமையான கப்பல் ஓட்டும் திறனும், புதுமையான தந்திரங்களும், ஆண்களின் வீரமும் புகழ்பெற்ற வெற்றியைக் கொடுத் தது. புயல்கள் மற்றவற்றை அழித்துப் போட்டது. ~வெல்ல முடியாத சக்தி| வடக்குக் கடலில் சிதறி உடைந்து, இங்கி லாந்து நார்வே மற்றும் ஸ்காட்லாந்து கடற்கரையில் ஒதுங்கியது. பலர் அதை ஆண்டவரின் செயலாகக் கருதினர்”.

2. முதலாம் உலக யுத்தத்தின் போது:
இங்கிலாந்து பிரதமர் லாயிட் ஜார்ஜ் முதலாம் உலக யுத்தத்தின் காலத்தில் ஜீலை 17, 1918ஐ ஜெப தினமாக அறிவித்தார். இங்கிலாந்து மக்கள் யுத்தத்திலிருந்து விடுதலையடைய ஜெபித்தனர். மறுநாள் ஜெர்மனி தோல்வியை ஏற்றுக்கொண்டது.

3. இரண்டாம் உலக யுத்தத்தின்போது:
ஹிட்லர் ஐரோப்பாவில் பல தேசங்களைத் தோற்கடித்து ஒன்றன்பின் ஒன்றாக அவற் றைக் கைப்பற்றினான். பிரான்ஸ் தோல்வி அடைந்தபோது, மூன்று லட்சம் ஆங்கிலேய வீரர்கள் ஐரோப்பாவில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் பிரிட்டிஷ் கால்வா யின் கரையை அடைந்து பிரிட்டனுக்குச் செல்லும் கப்பலுக்காகக் காத்திருந்தனர். ஜெர்மானியர் அவர்களை அழிக்கத் திட்ட மிட்டனர். அதே வேளையில் ஆறாம் ஜார்ஜ் அரசன் பிரிட்டன் முழுவதும் ஒரு ஜெப நாளை அறிவித்தான். லட்சக்கணக் கான மக்கள் அந்த வீரர்களின் பாதுகாப்பிற்காக ஜெபித்தனர். அந்தக் கால்வாய் அந்த நாளில் அமைதியாக இருந்தது. ஆயிரக்கணக்கான சிறு படகுகள் அந்த பிரிட்டிஷ் வீரர்களை மரணத்தின் பிடியிலி ருந்து காப்பாற்றியது. இது கிறிஸ்தவர்கள் உலகமுழுவதும் அவர்களுக்காக ஜெபித்த போது நடந்த மற்றுமொரு அற்புதம். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் இரு முறை உபவாசம் செய்தது. இரண்டா வது உபவாச ஜெபம் செப்டம்பர் 8, 1940ல் நடைபெற்றது. ஏனெனில் ஜெர்மனி நூற்றுக்கணக்கான கப்பல்களைத் திரட்டி பிரிட்டிஷ் கால்வாயின் மூலம் பிரிட்டனைக் கைப்பற்ற திட்டமிட்டது. ஒரு பெரிய புயல் அந்தக் கால்வாயில் அடித்ததினால் ஜெர்மனி யின் கப்பல்கள் பிரிட்டனை அடைய முடியாமல் போயிற்று.

4. மத்திய கிழக்கு யுத்தத்தின் போது:
ஈராக்குடன் நடந்த யுத்தத்தில் குவைத்தை ஈராக் எளிதாகக் கைப்பற்றியது. இது ஆகஸ்டு 2,1990ல் நடைபெற்றது. அமெரிக்க கூட்டணி நாடுகள் குவைத்தை விடுவிக்க, படையெடுக்கத் தீர்மானித்தது. ஆனால் பலர் பாதிக்கப்படுவர் என்று பயந்ததினால் யுத்தத்திற்கு முன் பிப்ரவரி 24, 1991ஆம் நாள் ஜெப தினமாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் குவைத் குறைவான பாதிப்புடன் விடுதலை பெற ஜெபித்தனர். கூட்டணி படைகள் அந்த யுத்தத்தை எளிதாகவும், வெகு சீக்கிரமாகவும், சில பாதிப்புகளுடனும் வென்றனர். நமது தேசம் ஒரு பெரும் இக்கட்டின் வழியாகக் கடந்து செல்வதை அறிவோம். ஆகவே அனைத்து கிறிஸ்தவர்களும் நமது நாட்டிற்காக ஊக்கமாக ஜெபிக்க வேண் டிய காலம் இது. வேதாகமம் எல்லா விசு வாசிகளையும் இராஜாக்களுக்காகவும், அதி காரம் வகிப்போர் எல்லோருக்காகவும் விண் ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டு தல்களையும் செய்ய அழைக்கிறது. நமது தேசத்திற்காக ஜெபிக்க தீர்மானிப்போம் நமது தேசத்தில் மத சார்பற்ற அரசாங்கம் இந்த தேர்தலுக்குப் பின் வர வேண்டும் என்று ஜெபிப்போம். அமைதலுள்ள ஜீவனம் செய்ய அது வழி வகுக்கும். ஆண்டவரின் பார்வையில் அதுவே நன்மையும் ஏற்றதுமாய் இருக்கும்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct. 1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment