தேவனுடைய வார்த்தையின் தனித் தன்மை
- Published in Tamil Devotions
ஒரு இளம் போதகர் ஒரு முறை ஒரு வயதான பாட்டியைக் காணச் சென்றார். அந்த மூதாட்டி பல நாட்களாகப் படுக்கையிலேயே இருந்தார். போதகர் வீட்டிற்குள் நுழைந்த உடன் அந்த மூதாட்டி தனது வேதாகமத்தைத் தன் படுக்கையில் வைத்துவிட்டு, “ஆண்டவரைத் துதிப்போம்” என்று கூறினாள்.
அந்த போதகர் மூதாட்டியிடம் “பாட்டி நீங்கள் எதற்காக தேவனைத் துதிக்கிறீர்கள்” என்று கேட்டார். நான் இப்போதுதான் “வேதாகமத்தில் தேவன் என்னை விட்டு விலகுவதுமில்லை மற்றும் கைவிடுவதுமில்லை என்று வாசித்தேன். ஆகவே நான் படுக்கையிலேயே தேவனுடைய வாக்குத்தத்தத்திற்காக அவரை துதிக்கிறேன்” என்று பதிலளித்தாள். அதற்கு அந்த போதகர், “பாட்டி நான் உங்களிடம் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒன்றைக் கூற விரும்புகிறேன். கிரேக்க வேதாகமத்தில் இந்த வசனம் பின்வருமாறு கூறுகிறது. நான் உன்னை விட்டு விலகுவதில்லை, இல்லை, இல்லவே இல்லை. இது அதிசயமாக இருக்கிறதல்லவா” என்று கேட்டார். சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர் அந்த மூதாட்டி, “சரி போதகராகிய உங்களுக்குத்தான் தேவன் மூன்று முறை கூற வேண்டும். ஆனால் பாட்டியாகிய எனக்கு ஒரு முறை கூறினாலே போதும்” என்றார்.
தேவனுடைய வார்த்தையின் தனித் தன்மை என்னவென்றால், நமது துன்ப மான, இருட்டான வேளைகளில் வேதாக மத்திலுள்ள வாக்குத்தத்தங்களை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாம். இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்க தேசத்திலி ருந்து, தன் தேசத்திற்குத் திரும்பிச் சென்ற டேவிட் லிவிங்ஸ்டன் ஒரு முறை கல்லூரி மாணவர்களிடம் பேசும் போது பின்வருமாறு கூறினார். “நான் கஷ்டத்தின் மத்தியிலும், தனிமையிலும் கடந்து செல்லும்போது என்னைத் தாங்கியது எது என்று உங்களுக்குத் தெரியுமா? அது கிறிஸ்துவின் வாக் குத்தத்தம். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத் 28:20).
தேவனுடைய வார்த்தை நம்மை இன் னல்கள் மத்தியில் உற்சாகப்படுத்தும் தனித் தன்மை வாய்ந்தது. நாம் இப்போது தேவனுடைய வார்த்தையின் மற்ற தனித்தன்மைகளைப் பார்ப்போம்.
1.பாவத்தை உணர்த்துகிறது
தேவனுடைய வார்த்தையானது ஜீவ னும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத் திலும் கருக்கானதாயும், ஆத்துமாவை யும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகை யறுக்கிறதாயும் இருக்கிறது (எபி 4:12).
2.பேதையை ஞானியாக்குகிறது
கர்த்த ருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக் கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தி யமும், பேதையை ஞானியாக்குகிறது மாயிருக்கிறது (சங் 19:7).
3.போதிக்கிறது, சீர்திருத்துகிறது
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனா கவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜ னமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோ 3:16,17).
4.பலவீனத்தில் ஆறுதல் தருகிறது
அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது (சங் 119:50).
5.பாவத்திலிருந்து சுத்தமாக்குகிறது
நான் உங்களுக்குச் சொன்ன உபதே சத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள் (யோவான் 15:3).
6.பாவம் செய்யாதபடி காக்கிறது
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங் 119:11).
7.பரிசுத்தமாக்குகிறது
உம்முடைய சத்தியத்தினாலே அவர்ளைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17).
இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த தேவவார்த்தையை அன்றாடம் நாம் வாசிக்கிறோமா? நேசிக்கிறோமா? இவ் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோமா? அப்படிச் செய்தால் தேவனுடைய வார்த்தை நம்மை மாற்றும், தேற்றும் மற்றும் வழிநடத்தும்.
(Translated from True Discipleship March 1994)