துன்பத்திற்கு பவுலின் பதில்
- Published in Tamil Devotions
By C Barnabas
ஸ்டீவ் பேக்கரும் அவருடைய மனைவி கேதியும் லைபீரியாவில் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எட்டு ஆண்டுகளாக வேதாகமத்தை மொழிபெயர்க்க அவர்கள் கடுமையாக உழைத்தனர். லைபீரியாவில் போர் ஆரம்பித்தபோது அவர்கள் அந்தப் பணித்தளத்தில் விலைமதிப்பிற்குரிய காரியங்களை விட்டு விட்டுப் போக நேர்ந்தது. அவர்கள் கற்ற மொழி, கலாச்சாரம் எல்லாம் திடீர் என்று நிறுத்த நேர்ந்தது. எட்டு ஆண்டுகளாக அவர்கள் மொழியைக் கற்றது வீணானதாகத் தெரிந்தது.
ஸ்டீவிடம் அந்த இழப்பைக் குறித்துக் கேட்ட போது, ‘எங்களுக்குச் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் இழந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் லைபீரிய மக்களை விட்டு, அவர்களை சுவிசேஷப் பாதையில் நடத்த முடியாமல் இருந்ததை நினைத்து நாங்கள் அழுதோம். வியாகுலத்துடனும் அதிர்ச்சியுடனும் அமெரிக்கா வந்து சேர்ந்தோம்.” என்று கூறினார். ஸ்டீவ், கேதியின் ஊழியத்தில் தீடீரென நடந்தது இந்த சம்பவம். ஆனால் உடைமைகளையும், ஊழியத்தையும் இழந்தபோதும் அவர்களின் பதில் நமக்குச் சவாலாக அமைகிறது. இதைக் குறித்து ஸ்டீவ் பின்னர் எழுதும்போது, ‘தனிப்பட்ட ஊழியத்தில், இழப்புகள் தேவனுடைய ஊழியரை நிரந்தரமாக முடக்கிவிடக்கூடாது. நாம் புதிய இலக்குகளுடன் முன்னேறுவதே தேவனுடைய விருப்பமாகும். கண்ணீரிலிருந்து வெற்றிக்கும், கிருபையால் துக்கத்திலிருந்தும் எங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கு மறுபடியும் அர்ப்பணம் செய்து முன்னேறினோம்”.
வாழ்க்கையிலும், ஊழியத்திலும் இழப்புகள் நேர்ந்த போது ஸ்டீவ் சரியான பதில் கொடுத்தார். நமது ஊழியத்திலும் வாழ்க்கையிலும், துன்பங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கும்போது நமது பதில் என்ன? துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து வரும்போது பவுலின் பதில் என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளுவோம்.
1.பவுல் துன்பங்களில் பிரியப்பட்டார்: ‘அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும் போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” 2கொரி 12:10
2.பவுல் உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருந்தார்: ‘மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திர வப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.”2கொரி 7:4-6
3.பவுல் உபத்திரவத்திலே மேன்மை பாராட்டினார்:‘அதுமாத்திரமல்ல, உபத்தி ரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கை யையும், உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” ரோமர் 5:3-5
4.பவுல் இக்காலப் பாடுகள், வரப்போகும் மகிமைக்கு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாததாகக் கருதினார்: ‘ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டி யானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.” ரோமர் 8:18,19
5.பவுல் உபத்திரவங்களைப் பொறுமையோடு சகித்தார்:‘எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.” 1கொரி 4:12,13 6.பவுல் துன்பப்படுவதற்காக நியமிக்கப்பட்டதாகக் கருதினார்:‘ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.” பிலி 1:29,30
7.கிறிஸ்துவின் பாடுகளோடு ஐக்கியம் கொள்ள பவுலுக்கு பாடுகள் உதவியது: ‘இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” பிலி 3:10,11
8.பவுலி;ன் துன்பங்கள் மற்றவர்களைத் தேற்ற உதவியது: ‘எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவி னாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திர வப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கி றோம்.” 2கொரி 1:5-7
9.பாடுகள் வழியாக நாம் தேவனுடைய இராஜ்யத்தில் நுழைய வேண்டும் என்று பவுல் விசுவாசித்தார்:‘சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்.” அப்போ 14:22
10.உபத்திரவங்களால் அசைக்கப்படக்கூடாது என்று பவுல் போதித் தார்: ‘இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்து வின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப் பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.” 1 தெசலோ 3:2,3 தாமஸ் ஹியர்ன் ஒரு பெரிய ஆய்வாளர், தேவன் மீது திடநம்பிக்கை வைத்தவர். அவர் ஒரு ஆய்வு பயணம் மேற்கொண்டபோது, திருடர்கள் அவருடைய எல்லா பொருட்களையும் திருடிச் சென்றனர். அது அவருக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தது. ஆனால் அவர் சிறிது நேரம் தேவனோடு செலவிட்ட பின், ‘எங்கள் சாமான்களின் எடை குறைந்ததால் வேகமாகவும், இனிமையாகவும், அடுத்த நாள் பயணம் இருந்தது” என்று கூறினார். ஹியர்ன் தன்னுடைய பொருட்களை இழந்த போது வேதாகமத்தின் வழியில் பதில் தந்தார். நம்முடைய வாழ்வில் பிரச்சனைகளும், பாடுகளும் வரும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் தருகிறோம்?
(Dr. C Barnabas, Translated from True Discipleship July-August 2006)