துயரங்களின் மத்தியில் தேவனையும் அவருடைய வார்த்தையையும் நம்புதல்

By C Barnabas

ஸ்காட் வாக்கர் ‘வாழ்க்கை கைப்பிடி சுவர்கள்” (life-rails) என்ற தனது புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது பெற்றோருடன் இருந்தபோது தனது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அவரது தகப்பனார் பிலிப்பைன்ஸில் இருந்த ஒரு பாப்டிஸ்டு கல்லூரியில் மிஷனரி ஆசிரிய ராகப் பணி செய்து வந்தார். 1965ஆம் ஆண்டில் ஸ்காட் வாக்கர் 14 வயது சிறுவனாக இருந்தபோது அந்த மிஷனரி குடும்பத்தைத் துயரம் தாக்கியது.

ஒரு நாள் தனது தகப்பனோடு சென்று மீன் பிடித்து விட்டுத் திரும்பியபோது, தனது பாட்டி புற்று நோயால் தாக்கப்பட்டது குறித்து அறிந்தார். உடனே அவர் தனது தகப்பனை பிலிப்பைன்ஸில் விட்டுவிட்டு, தனது தாயுடனும், சகோதரியுடனும் ஐக்கிய நாடுகளுக்குச் சென்றார். அவர் ஐக்கிய நாடுகளை அடைந்தபோது தனது பாட்டி மிகவும் பலவீனமாக இருப்பதையும், கதிர் வீச்சு சிகிச்சையைப் பெறுவதையும் கண்டார்.

வாழ்க்கை, நிலையில்லாதது என்ற உண்மை யையும், குறுகியது என்பதையும் புரிந்து கொண்டார். ஐந்து வாரங்களுக்குப் பின், அவனுடைய தகப்பனாருக்கு பெரும் மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்தி அவனுடைய தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே வாக்கரும் அவனுடைய தாயும், சகோதரியும் பிலிப்பைன்ஸ் சென்று மிகவும் பலவீனமாயி ருந்த அவனுடைய தகப்பனாரைக் கண்டனர். ஸ்காட், தனது பெற்றோர் தன்னோடு எப்போதும் இருக்கப் போவது இல்லை என்று உணர்ந்தார். பின்னர் அவனுடைய தந்தை பயணம் செய்ய பெலனடைந்தபோது அவர்கள் குடும்பத்தோடு ஐக்கிய நாடுகள் சென்றடைந்தனர். மிகவும் சுகவீனமான அவருடைய பாட்டியுடன் அவர்கள் தங்கியிருந்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் அவர்களை கோலோரடோவிற்கு விடுமுறைக்குச் செல்ல ஆலோசனை கூறினார். குடும்பத்துடன் அவர்கள் அங்கு செல்லும் வழியில், ஒரு சாலை ஓர உணவு விடுதியில், அவருடைய தந்தையார் இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நவம்பர் 1965ஆம் ஆண்டு அவருடைய பாட்டியும் மரணமடைந்தார். மூன்று மாதத்திற்குள் ஸ்காட் வாக்கரும் அவரது தயாரும் இரண்டு துயரங்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்தனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மன மடிந்து போகவில்லை.
டிசம்பர் 31,1965 இரவில் வாக்கர் தனது தாயாருடனும், சகோதரியுடனும் அந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தனர். நள்ளிரவில், புதிய வருடத்தின் துவக்கத்தில், ஸ்காட்டின் தாயார் தனது பிள்ளைகளிடம் 1965ல் அவர்கள் கடந்து வந்த கடினமான பாதையைக் குறித்துப் பேசினாள். அவள் தனது தாயாரையும், கணவனையும் அந்த வருடம் இழந்தாள். 1966ஆம் ஆண்டின் முதல் மணித்துளிகளில், கண்களில் கண்ணீரோடு ஸ்காட்டின் தாயார், கொரிந்து சபைக்குப் பவுல் கூறிய அறிவுரையை நினைவுபடுத்தினாள். ‘மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே யல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயி ருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங் கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க தாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்கு வார்” (1கொரி 10:13). இந்த வசனம் ஸ்காட்டின் தாயாரை அவர் கடந்து வந்த இரு துயரங்கள் மத்தியில் தைரியமாகச் செல்ல உதவியது. ஸ்காட், தனது தாயார் அந்த வசனத்தைக் கடந்த ஆண்டில் பலமுறை அவர்கள் கஷ்டமான சூழ்நிலை யின் மத்தியில் செல்லும் போது கூறியதை நினைவுகூர்ந்தான்.
இந்த வசனத்தில் உள்ள ‘சோதனை” என்ற சொல்லிற்குரிய கிரேக்கச் சொல் ‘பெராஸமாஸ்” (peirasmos). அதை நாம் ‘பரீட்சை” அல்லது ‘துயரம்” என மொழி பெயர்க்கலாம். ஆகவே அவன் தன் துயரங்கள் மற்றவர்களின் வாழ்வில் நிகழ்ந்த துயரங்களுக்கு ஒப்பானது என்றும், தேவன் உண்மையுள்ளவராய் அதிலிருந்து தப்பிக்கும் போக்கை உண்டுபண்ணி, அதைத் தாங்கிக் கொள்ள உதவியதையும் புரிந்து கொண் டான். தேவன் ஸ்காட்டை சரியான வார்த் தையின் வழியாகத் தேற்றினார். இந்த வசனம் ஸ்காட்டிற்கும் அவனது தாயாருக்கும் அவர்கள் சென்ற கடினமான வேளைகளிலும், துயரங்களிலும் தைரியமாகக் கடந்து செல்ல மூல காரணமாக இருந்தது.

நமது வாழ்க்கையிலும் நாம் ஸ்காட்டையும் அவனது தாயாரையும் போல எதிர்பாராத துயரங்களை நாம் சந்திக்கிறோம். அவைகளை எவ்வாறு எதிர்கொள்ளுகிறோம்? நாம் யோபுவின் வாழ்க்கையைப் படித்து, அவர் வாழ்வில் துயரங்களை எவ்வாறு எதிர் கொண்டார் என்று பார்ப்போம்.

1. யோபு பொறுமையுடன் சகித்தார்: ‘இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான் களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தரு டைய செயலின் முடிவையும் கண்டிருக்கி றீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்க முமுள்ளவராயிருக்கிறாரே” (யாக் 5:11).

2. யோபு வருங்கால மகிமையை நோக்கினார்: ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது” (யோபு 19:25-27).

3. யோபு துயரங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டார்: யோபுவின் மனைவி, அவருக்குத் தேவன் மேல் இருந்த விசுவாசத்தைக் குறை கூறி, தேவனைத் தூஷிக்க அழைத்தபோது அவர் அவளிடம், ‘நீ பயித்தியக்காரி பேசு கிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ் செய்யவில்லை” (யோபு 2:10).

4. யோபு துயரங்கள் பயன் தருவதாக நம்பினார்:‘ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

5. யோபு தேவனை நம்பினார்: ‘அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15).

 

நாம் யோபுவைப்போல தேவனை நம் முழு இருதயத்தோடு பாடுகள் மத்தியிலும், எதிர் பாராத நிகழ்வுகள் நடுவிலும் நம்பியிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தேவன் நமக்கு எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தைக் கொடுத்து, நமது வழிக ளைச் செவ்வைப்படுத்துவார். ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி 3:5,6).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment