உபத்திரவத்தை சரியான விதத்தில் காணுதல்
- Published in Tamil Devotions
நீங்கள் நன்னெறியாளர்கள் (puritans) கூறும் உபத்திரவத்தின் பொருள் விளக் கத்தை எப்போதாவது வாசித்ததுண்டா? நன்னெறியாளர்கள் எலிசபெத் மற்றும் ஸ்டு வர்டின் காலத்தில் வாழ்ந்து இங்கிலாந்து திருச்சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினர். அவர்கள் வேதத்தின் போதனையின்படி பரிசுத்த வாழ்க்கைக்காக தங்களை அர்ப்பணம் செய்திருந்தனர். தங்கள் விசுவாசத்திற்காகவும் தேவனு டைய வார்த்தையின் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்காகவும் துன்புறுத்தப்பட்டனர். நன்னெறியாளர்கள் உபத்திரவத்திற்காக வாஞ்சிக்கவில்லை. மாறாக அவர்கள் உபத் திரவங்களை வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவற்றை நன்கு பயன்படுத்தினர் என்று முனைவர் ஜோயல் .ர. பேகி (Dr. Joel R Beeke) நன்னெறியாளர்களைப் பற்றியும் உபத்திரவத்தைப் பற்றி அவர்கள் கருத்தையும் கூறும்போது கூறியுள்ளார். தேவன் எவ்வாறு உபத்திரவங்களைப் பார்க்கிறாரோ அதே வகையில் நன்னெறி யாளர்களும் உபத்திரவத்தைப் பார்த்தனர். அவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு கடிகாரம் செய்பவர் எவ்வாறு கடிகாரத் தைப் பார்ப்பாரோ அதே போல பார்த்தனர். உங்கள் கடிகாரத்தின் பின் பகுதியை கழற்றினால், பல சக்கரங்களைக் காண்பீர்கள். சில சக்கரங்கள் வலது பக்கம் சுற்றும். வேறு சில சக்கரங்கள் இடது பக்கம் சுற்றும். ஆனால் கடி காரத்தின் முன் பகுதியைக் கவனித்தால் வினாடி முள் மாத்திரம் குறைபாடற்ற முறையில் நகர்வதைக் காணலாம்.
ஒரு விசுவாசியின் வாழ்வில் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் கடிகாரம் தெளிவாக விளக்குகிறது. நமது கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் பார்க்கும் போது கடிகாரத்தின் பின் புறத்தைப் பார்ப்பது போல உள்ளது. ஒரு சக்கரம் ஒரு திசையில் செல்கிறது. அடுத்த சக்கரம் அதற்கு எதிர்மறையான திசையில் செல்கிறது. சக்கரங்கள் வௌ;வேறு திசைகளில் சுற்றும் போது தேவன் நம் வாழ்வில் செயல்படுவது நமக்கு குழப் பமாக உள்ளது. ~ஏன் இது என் வாழ்வில் நிகழ்கிறது?| என்ற கேள்வியைக் கேட்கிறோம். இது ஊக்கமின்மைக்கும், மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால் உபத்திரவத்தை தேவனின் கண்ணோட்டத்தில்; பார்த்தால் ~ஆண்டவர் என்னை நடத்தும் வழிதான் இது. அவரை நேசிப் பவர்களுக்கு சகலமும் நன்மைக்கேது வாக நடக்கிறது| என்று சொல்லுவேன். நன்னெறியாளர்கள் ஆண்டவர் எவ்வாறு உபத்திரவத்தைக் காண விரும்புவாரோ அதே விதத்தில் அதைக் காணக் கற்றுக் கொண்டனர். ஆகவே அவர்கள் பாடுகளை சந்தோஷமாக சகித்தனர். மகிழ்ச்சியோடு அவர்களின் ஊழியத்தை துன்பங்கள் மற்றும் உபத்திரவத்தின் மத்தியிலும் தொடர்ந்து செய்தனர்.
உபத்திரவம் என்பது இன்னல்கள், சோதனைகள் மற்றும் இடுக்கண்கள் ஆகும். உபத்திரவங்கள் நம்மை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வருகிறது. (சங் 66:10-12) என்றும் தேவனை மகிமைப் படுத்த உதவுகிறது என்றும் (1பேது 4:12-16) வேதாகமம் கூறுகிறது.
நாம் நம் வாழ்வில் நேரிடும் உபத் திரவங்களை எவ்வாறு காண வேண்டும் என்று பார்ப்போம்.
1.நமது நன்மைக்காக நடக்கிறதென்று காண வேண்டும் : ~அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்|. ரோமர் 8:28
2.நமது பிரயோஜனத்திற்கென்று காண வேண்டும் : ~அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களா கும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத் துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்|. எபிரெயர் 12:10
3.நிலையற்றதாகக் காண வேண்டும்: ~ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லு கிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண் டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்|. மத் 10:28
4.சோதனையாகக் காண வேண்டும் : ~இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திர வத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்|. ஏசா 48:10
5.வாழ்வில் ஒரு பகுதியாகவும், சகிக்க வேண்டியதாகவும் காண வேண்டும்: ~அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்|. மத் 24:9. ~நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று|. 2தீமோ 4:5.
6.நம்மை அசைக்க முடியாததாக அதற்காக நியமிக்கப்பட்டவர்களாகக் காண வேண்டும்: ~இந்த உபத்திரவங் களினாலே ஒருவனும் அசைக்கப்படாத படிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்க ளுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயு வை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத் திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப் பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்தி ருக்கிறீர்களே|. 1தெச 3:2,3
7.சீக்கிரத்தில் நீங்கும், இலேசானதாக காண வேண்டும்: ~மேலும் காணப்படு கிறவைகளையல்ல, காணப்படாதவை களை நோக்கியிருக்கிற நமக்கு, அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்மு டைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்கு கிறது.| 2கொரி 4:17
8.சுவிசேஷத்தின் ஒரு பகுதியாகக் காண வேண்டும்: ~நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,| 1தெச 1:6
9.விடுதலை நிச்சயம் உண்டு என்ற வாக்குறுதியோடு காண வேண்டும்: ~நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.| சங் 34:19
10.தேவனுடைய அன்பைவிட்டு எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்ற நம் பிக்கையோடு காண வேண்டும் : ~கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியா குலமோ, துன்பமோ, பசியோ, நிர்வா ணமோ, நாசமோசமோ, பட்டயமோ? மரணமானாலும், ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானா லும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானா லும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்மு டைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசு விலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித் திருக்கிறேன்|. ரோமர் 8:36,38,39
(Translated from True Discipleship Feburary 2000)(Dr. Joel R Beeke)