உன் நம்பிக்கையை எதன் மேல் வைத்துள்ளாய்?
- Published in Tamil Devotions
அநேகர் தேவன் மீது தங்கள் நம்பிக் கையை வைக்கத் தயங்குகின்றனர். ஆனால் சாவுக்கேதுவான மனிதன் மீதும், நிலையற்ற பொருட்கள் மீதும் தங்கள் நம்பிக்கையை வைக்கின்றனர். இறுதி வேளையில்தான் தங்கள் மதியீனத்தை உணருகின்றனர். விசுவாசிகளாகிய நாம் தேவனை நம்பி அவர் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்க அழைக்கப் பட்டிருக்கிறோம். நாம் சோதனைகளையும், கஷ்டங்களையும் கடந்து செல்லும்போது தேவனை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்கு தானியேலின் நண்பர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒரு தகுதியான எடுத்துக்காட்டு.
நேபுகாத்நேச்சார் இராஜா ஒரு பொற்சிலை யைச் செய்து அனைத்து மக்களும் அதன் முன் விழுந்து பணிந்துகொள்ளும்படியாகக் கட்டளையிட்டார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அந்த சிலையின் முன் விழுந்து வணங்க மறுத்தனர். அவர்கள் தேவனிடத்திலிருந்து தங்களுக்கு மீட்பு வரும் என்று நம்பினர்.
இராஜா அவர்களை அழைத்து அந்த பொற்சிலையை வணங்கும்படி கட்டளையிட்ட போது, சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்பவர்கள் இராஜாவை நோக்கி, “நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற் சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக் கக்கடவது” என்றார்கள் (தானி 3:16-18). தேவன் அவர்களின் விசுவாசத்தையும், அவர் மீது வைத்த நம்பிக்கையையும் கனம் செய்து அவர்களை அந்த அக்கினிச் சூளையிலும் பாதுகாத்தார். இன்றும் உண் மையுள்ளவராகவும், நம்பத் தகுந்தவராகவும் இருக்கிறார்.
வேதாகமத்தில் நாம் தேவன் மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம். மனிதர் மீதோ, பொருட்களின் மீதோ அல்ல.
ஐ.தேவனையும் அவர் வார்த்தையையும் நம்புதல்:
1)தேவன் மீது நம்பிக்கை: தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழு வேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? (சங் 56:4)
2)கர்த்தர் மீது நம்பிக்கை: கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தி யத்தை மேய்ந்துகொள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக் கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் (சங் 37:3,5).
3)தேவனுடைய நாமத்தின் மீது நம்பிக்கை: அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும் (சங் 33:21).
4)தேவனுடைய வார்த்தை மீது நம்பிக்கை: அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன் (சங் 119:42).
5)கிறிஸ்துவின் மீது நம்பிக்கை: இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயி ருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர் மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப் பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத் தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பது மில்லை. அவர் நியாயத்திற்கு ஜெயங் கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே (மத் 12:18-21).
6)மனிதனையும், பொருட்களையும் நம்புதல்: ஆயதங்களின் மீது நம்பிக்கை வைக்காதே: என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை (சங் 44:6).
7)செல்வத்தின் மீது நம்பிக்கை வைக்காதே: தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமை பாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத் தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே (சங் 49:6-8).
8)பிரபுக்களின் (செல்வாக்குள்ள தலைவர் கள்) மீது நம்பிக்கை வைக்காதே: பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவிபிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம் (சங் 146:3,4).
9)சிநேகிதன் மீது நம்பிக்கை வைக்காதே: சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழி காட்டியை நம்பவேண்டாம் (மீகா 7:5).
10)மனிதன் மீது நம்பிக்கை வைக்காதே: மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனு ஷன் பாக்கியவான் (எரே 17:5,7).
(Translated from True Discipleship Feburary 1997)