உண்மைக்காக உயிர்த் தியாகம்
- Published in Tamil Devotions
ஜான் ஹஸ் (1374-1415) பிரேகு (Prague) பல்கலைக்கழகத்தில் படித் துப் பின் பிரேகிலிருந்த பெத்லகேம் தேவாலயத்தில் போதகராகப் பணி யாற்றினார். அவருக்கு ஜெரோம் என்ற சிறந்த நண்பர் இருந்தார். ஜெரோம், இங்கிலாந்திலிருந்து ஜான் விக்லீப் (John Wycliffe) அவர்களின் கட்டுரைகளுடன்; திரும்பி வந்தார்.
ஒரு நாள் ஹஸ் சந்தையில் இரண்டு படங்களைப் பார்த்தார். ஒரு படம் கிறிஸ்து தாழ்மையாக கழுதையின் மேல் அமர்ந்து, எருச லேமுக்குள் நுழைவதைக் காட்டி யது. அவரைச் சுற்றியிருந்த சீடர்க ளும், மற்றவர்களும் சாதாரண உடை யணிந்திருந்தனர். அடுத்த படம் பாப்பரசர் விலையுயர்ந்த ஆடை களையும், மூன்று கிரீடங்களையும் அணிந்து அலங்காரம் செய்யப்பட்ட குதிரையில் செல்வதையும், முக்கிய மான மத குருக்கள் அலங்கார ஆடைகளை அணிந்து அவருக்குப் பின் செல்வதையும் காட்டியது. இந்தப் படங்கள் அவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வேதாக மத்தையும், விக்லீப்பின் கட்டுரை களையும் படிக்கத் தூண்டியது. அவர் சபையின் தவறைப் புரிந்து, தேவனுடைய வார்த்தைகளையும், உண்மையையும் பிரசங்கிக்கத் தொடங்கினார். அவர் சபையின் தீய நடைமுறைகளைக் கண்டனம் செய்தார்.
தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டபோது ‘மரணமே வந்தாலும், தேவன் உறுதிப்படுத்திய உண்மையை, விசேஷமாக வேதாகமத்தின் உண்மையை நான் பாதுகாப்பேன்” என்று கூறினார்.அவர்; கான்ஸ்டன்டைனில் இருந்த சபையின் உயர்மட்ட குழுவுக்கு முன் விசாரணையைச் சந்திக்க உத்தரவு வந்தது. அவர், தான் எரித்துக் கொல்லப்படப்போவதை உணர்ந்தார். அவர் தனது மரணத்திற்கு முன்பதாக, தன் நண்பருக்கு பின்வருமாறு எழுதினார். ‘சிறைச் சாலையில் கட்டப்பட்ட கைகளுடன் மரண தண்டனை, நாளை நிறை வேற்றப்படும் என்று எதிர்பார்க்கி றேன். இயேசு கிறிஸ்துவின் மூல மாக பூரண சமாதானத்தோடு நாம் மறுபடியும் சந்திப்போம். அப்போது தேவன் என் மேல் எவ்வளவு கிருபையுள்ளவராக இருந்தார் என்ப தையும், எனது சோதனைகளின் மத்தியில் என்னை அவர் எவ்வாறு தாங்கினார் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்”.
ஹஸ், அவருடைய மரணத்திற்கு முன் மறுதலிக்க அழைக்கப்பட்ட போது, அவர் மக்களைப் பார்த்து ‘எந்த முகத்தோடு நான் பரலோ கத்தைப் பார்ப்பேன்? நான் சுவிசே ஷத்தைப் பிரசங்கித்த ஏராளமான மக்களின் முகத்தை நான் எவ்வாறு பார்ப்பேன்? அவர்களின் இரட்சிப்பை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட என்னுடைய இந்த சரீரத்திற்கு மேலாய் மதிக்கிறேன். ஆகையால் நான் மறுதலிக்க மாட்டேன்” என்று கூறினார். அவர் சுட்டெரிக்கப்பட தீர்ப்பு வழங்கப்பட்டபோது பரலோ கத்தைப் பார்த்து, ‘எனது ஆவியை உமது கரங்களில் தருகிறேன். ஆண்டவராகிய இயேசுவே நீரே என்னை மீட்டுக்கொண்டீர்” என்று கூறினார். அவரைச் சுற்றி நெருப்பு பற்றி எரிய ஆரம்பிக்கும்போது, ‘தாவீதின் குமாரனாகிய இயேசுவே என் மேல் இரக்கமாயிரும்” என்று பாடத் தொடங்கி, அப்படியே மரித்தார். ஹஸ் மற்றும் அவருடைய நண்பர் ஜெரோமின் வீர மரணத் தைப் பார்த்துக்கொண்டிருந்த மதத்தலைவர் ஒருவர், ‘இருவரும் நிலையான மனதோடு தங்கள் இறுதி மணித்துளிகளை எதிர்கொண்டனர். அவர்கள் எரிக்கப்பட ஆயத்தப்பட்டது, ஏதோ கல்யாண விருந்துக்குச் செல்வதுபோல இருந்தது. தீப்பிழம் புகள் அவர்கள் மேல் பற்றி எழுந்தபோது, அவர்கள் வேதனை யினால் துடித்துக் கதறவில்லை. பாடல்களைப் பாடினார்கள். அந்தத் தீயின் கொடூரம் அவர்களின் பாடல் களை நிறுத்தவில்லை” என்று கூறினார்.
ஹஸ் உண்மையைப் போதித்து, வேதாகமத்தின் போதனைக்காகத் தைரியமாக நின்றார். அவர் நம்மை விட்டுக் கடந்து போனார். ஆனால் அவர் தனது வாழ்க்கையைக் கொடுக்கக் காரணமாக இருந்த அந்த உண்மை, இன்று நமது மொழியிலே, தேவனுடைய வார்த்தையாக நம்மிடம் உள்ளது. அவரின் விசுவாசமும், தியாகமும் நிறைந்த எடுத்துக்காட்டாக இருந்த அவருடைய வாழ்க்கை, நம்மையும் உண்மைக்காக நிற்கவும், நமது வாழ்வை ஜீவ பலியாக ஆண்டவ ருக்குக் கொடுக்கவும் உதவுவதாக.
(Dr. C Barnabas, Translated from True Discipleship May 1994)