இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரத்தில் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் அடித்தளம். அது கிறிஸ்தவக் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான உண்மை. உயிர்த்தெழுதலின் நோக்கங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
1.இயேசுவின் தெய்வீகத்தை நிரூபிக்க:
‘மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின் படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.” (ரோமர் 1:5).
2.விசுவாசிகளின் இரட்சிப்பிற்கு உத்தரவாதமாக:
‘தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.” (எபி 7:25).
3.விசுவாசிகளின் உயிர்த்தெழுதலுக்கு உத்தரவாதமாக:
‘கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்ல லாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே” (1கொரி 15:12,13). ‘கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.” (1கொரி 15:20).
4.இயேசுவைப் போல வாழ உதவி செய்ய:
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டதாலும் இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி விசுவாசிகளில் வாசமாயிருப்பதாலும் விசுவாசிகள் இயேசுவைப் போல வாழ முடியும். (ரோமர் 6:5), (ரோமர் 8:11)
5.வேதவாக்கியங்களை நிறைவேற்ற:
‘அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டிய தாயிருந்தது” (லூக்கா 24:45,46)
6.பாவிகள் நீதிமான்களாக்கப்பட:
‘அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான் களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.” (ரோமர் 4:25).
7.வரப்போகும் நியாயத்தீர்ப்பின் உத்தரவாதமாக:
‘மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” (அப் 17:31).
8.தாவீதின் சிங்காசனத்தில் அவரை அமரச் செய்து, தாவீதுடன் செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற:
தாவீதின் சிங்காசனத்தில் அமர இயேசு கிறிஸ்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார். (அப் 2:30-32, 2சாமு 7:12-16, சங் 89:20-37, ஏசாயா 9:6,7, லூக்கா 1:31-33)
ஆகவே கிறிஸ்தவம் உயிர்த்தெழுதலின் கோட்பாட்டில் கட்டப்பட்டிருக்கி றது.அதைக்குறித்து ‘ஜான் லாக்கே” (John Locke) பிரபலமான ஆங்கில தத்துவவாதி, ‘நமது இரட்சகரின் உயிர்த்தெழுதல் உண்மையாய் கிறிஸ்தவத்தில் அதி முக்கியமானதாய் உள்ளது. மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவர் மேசியாவாய் இருந்தது அல்லது இல்லாதது, நம்முடைய விசுவாசத்தை நிற்கவோ, விழுப்பண்ணவோ செய்கிறது”
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அல்லேலுயா!
(Dr. C Barnabas, Translated from True Discipleship Mar-Apr 2000)