வாழ்க்கையில் மன நிறைவு

By C Barnabas

மன நிறைவுக்கு எதிர்ச்சொல் என்ன என்று ஒரு பிரசங்கியார் ஒரு மிஷனரி பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களின் கூட்டத்தில் கேட்டார். உடனடியாக ஒருவரும் பதில் தரவில்லை. அன்றைய நாளின் கலந்துரையாடலின் தலைப்பு ~வாழ்க்கையில் மன நிறைவு|. மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை யென்று சிறிது நேரம் சென்ற பின் ஒரு சகோதரர் பதிலளித்தார். ஆம். மன நிறைவுக்கு எதிர்ச்சொல் பேராசை, பொறாமை மற்றும் கவலை. மன நிறைவு என்பது என்ன வந்தாலும் முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் மன நிலை.
பிலி 4:11,12ல் பரிசுத்த பவுல் மன நிறைவின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டதாகப் பின்வருமாறு எழுதுகிறார். ‘என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந் தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லா வற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்”. மனநிறைவு என்பது நம்மிடம் உள்ளவற்றில் திருப்தியாக இருப்பதுதான். மன நிறைவற்ற ஒரு உலகத்தில் நாம் வாழுகிறோம். விசுவாசிகளாகிய நாம் நம்மிடம் உள்ளவற்றில் மன நிறைவு உள்ளவர்களாக இருக்க வாஞ்சிக்கிறோம். எந்தெந்த பகுதிகளில் மன நிறைவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்?


1. உங்கள் வருமானத்தில் மன நிறைவுடன் இருங்கள்: ஒரு முறை நாக்பூரிலிருந்து சென்னைக்கு ஒரு மிஷனரியுடன் பயணம் செய்தேன். அவர் அதற்கு முன் ஒரு பெரிய நிறுவனத்தில் பணி செய்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மிஷனரி நிறுவனத்தில் இணைந்தார். அன்று என்னுடன் ரயிலில் பயணம் செய்த போது, ‘நான் மிஷனரி நிறுவனத்தில் என் வேலையை விட்டு இணைந்தபோது அந்தப் பெரிய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தில் பத்தில் ஒரு பாகத்தையே பெற்றேன். ஆனால் ஆண்டவர் மிகவும் நல்ல வராகவே இருந்துள்ளார். என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் அவர் சந்தித்துள்ளார்” என்று கூறினார். தனது வருமானம் மிகவும் குறைவானதாக இருந்தாலும் அந்த மிஷனரி மன நிறைவுடன் காணப்பட்டார்;. ‘நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்” என்று லூக்கா 3:14ல் யோவான் ஸ்நானகன், போர்ச்சேவக ருக்கு தங்கள் வருமானத்தில் மன நிறைவுடன் இருக்க அறிவுறுத்தினார். நமது வருமானத்தில் மன நிறைவுடன் இருப்பது மிக முக்கியமானதாகும். இல்லையென்றால் அது மன அழுத்தத் திற்கும், கவலைக்கும் வழி செய்யும்.


2. உங்கள் உடைமைகளில் மன நிறைவுடன் இருங்கள்: ஒரு முறை குடும்பமாக ஒரு குடும்ப மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு தியான வேளையில் தேவ செய்தி அளித்தவர் அதற்கு முன் ஒரு நல்ல வேலையில் பணி செய்தவர். அவர் எல்லாவற்றை யும் விட்டுவிட்டு ஒரு வேத ஆசிரியராக மாறினார். அவர் பொருளையும், உடைமைகளையும் குறித்துப் பேசும் போது லூக்கா 16:15ஐ மேற்கோள் காட்டினார். ‘மனுஷருக்குள்ளே மேன் மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது”. இந்த வசனம் மனுஷருக்குள்ளே மேன்மை யாக எண்ணப்படும் பணம் தேவ னுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கி றது என்பதைக் கூறுகிறது. மக்கள் பணத்தை மிகவும் மதிப்பு உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால் தேவன் பணத் தை அருவருப்பாக எண்ணுகிறார். எது அருவருப்பு என்று உங்களுக்குத் தெரியுமா? யாராவது இங்கு வாந்தி எடுத்தால், அந்த வாந்தி நமக்கு அருவருப்பானது. தேவன் பணத்தையும் பொருள், உடைமைகளையும் வாந்தியைப்போல் அருவருப்பானதாகக் கருதுகின்றார். இந்த உலக மக்கள் பணத்திற்குப் பின்னாக ஓடுகின்றனர். ஆனால் தேவனுடைய பிள்ளைகளா கிய நாம் நம் உடைமைகளில் நிறை வுடையவர்களாக இருக்க அழைக்கப் படுகிறோம். ஏனெனில்;, ‘நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங் களுக்கு இருக்கிறவைகள் போது மென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கை விடுவதுமில்லை” (எபி 13:5) என்று வேதாகமம் கூறுகிறது.


3. அடிப்படைத் தேவைகளான உணவு டனும், உடையுடனும் மன நிறைவுடன் இருங்கள்: ‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்க வும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்று 1தீமோத்தேயு 6:6-8ல் வேதாகமம் கூறு கிறது. இந்தப் பகுதியில் நமக்கு உண்ணவும் உடுக்கவும் இருந்தால் அது போதுமென்று இருக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. நமது தேசத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் நாம் அனுபவிக்கும் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் வாழ்கின்றனர். ‘நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசு வாசத்தையும் அன்பையும் பொறுமை யையும் சாந்தகுணத்தையும் அடை யும்படி நாடு” என்று வேதாகமம் 1தீமோத்தேயு 6:11ல் எச்சரிக்கிறது.


ஒரு முறை ஒரு மலைப் பகுதியில் நடந்த முகாமில் நற்செய்தியாளரும் பிரசங்கியாருமான எனது நண்பனைச் சந்தித்தேன். நான், அவர் அந்த முகாமிற்குச் செய்தியாளராக வந்தார் என்று நினைத்தேன். ஆனால் அவ ரோடு சிறிது நேரம் செலவழித்தபோது அவர் கடுமையான மாரடைப்பிற்குப் பின் ஒய்வு எடுக்க வந்தார் என்று அறிந்தேன். அவர் இரண்டு வருடங் களாக வணிகத்தில் ஈடுபட்டு ஊழியத் திற்குப் பணம் சம்பாதிக்க முற்பட்டார். அவர் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதித்து ஒரு பன்னாட்டு நிறுவ னத்தில் முதலீடு செய்தார். எல்லா வற்றையும் இழந்தார். அவருடைய நண்பர்கள் அவரை விட்டுச் சென்றனர். அந்த அதிர்ச்சியில் கடுமையான மார டைப்பால் தாக்கப்பட்டார். மன அழுத் தத்துடன் அந்த முகாமிற்கு வந்தார். அந்த முகாமில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒரு பிரசங்கியார் பணத் தைப்பற்றியும் அதன் பயனற்ற தன்மை யைக் குறித்தும் பிரசங்கித்தார். ‘மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்” என்ற பாடலைப் பாடினார். அந்தக் கூட்ட முடிவில் என் நண்பரின் அறைக்குச் சென்றபோது எனது நண்பர் முழங்காலில் அதே பாடலைப் பாடுவதைக் கண்டேன். ‘உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்தது மில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போது மென்றிருக்கக்கடவோம்” (1தீமோ 6:7,8). பரிசுத்த பவுலைப் போல நம்மிடம் உள்ளவைகளில் மன நிறைவுடன் வாழும் இரகசியத்தை ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொள்ள உதவி செய்வாராக.

 

(Dr. C Barnabas, Translated from True Discipleship May 1996)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment